மிருதங்கத்தால் சமஸ்கிருதம் கற்க ஆசை!

""ஏழு வருடங்களாக அமெரிக்காவில் என் படிப்போடு சம்ஸ்கிருதமும் கற்றுக்கொண்டு வருகிறேன்.
மிருதங்கத்தால் சமஸ்கிருதம் கற்க ஆசை!

""ஏழு வருடங்களாக அமெரிக்காவில் என் படிப்போடு சம்ஸ்கிருதமும் கற்றுக்கொண்டு வருகிறேன்.  இந்த மொழியில் பேசவும் முடியும்!'' என்று சொல்லுகிறார் அபிநவ் சீதாராமன்.  ""சம்ஸ்கிருதம் ஓர் அயல் மொழி 
(Sanskrit As A Foreign Language) என்ற SAFL  திட்டம் ஒன்று உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்காக இயங்கி வருகிறது.  அமெரிக்காவில் உள்ள சம்ஸ்கிருத பாரதி இதை நடத்தி வருகிறது'' என்கிறார் அபிநவ். 

""என்னுடைய மிகப் பெரிய ஆசை சம்ஸ்கிருதம் பற்றிய விழிப்புணர்வை உலகம் முழுக்கப் பரப்புவதுதான்.  அதனால், "ஸ்போக்கன் சான்ஸ்கிரிட் சீகிசிஸ்' என்ற யூ-டியூப் சேனல் ஒன்றை நண்பர்களுடன் சேர்ந்து ஆரம்பித்திருக்கிறேன்.  சம்ஸ்கிருதத்தில் ஜாலியாகப் பேச முடியும் என்று எடுத்துச் சொல்வதற்காக தொடங்கியதுதான் அது.   இப்போது அந்த சேனலுக்கு அமோக வரவேற்பு!

இப்போதே ஆயிரக்கணக்கான ஆர்வலர்கள் இதில் சேர்ந்திருக்கிறார்கள். முகநூலிலும் இதைச் சேர்த்திருக்கிறோம்'' என்கிறார். 

சமீபத்தில் ஜப்பானுக்குச் சென்றிருந்த போது, அவர்கள் மொழியை ஊன்றிக் கவனித்துக்கொண்டு வந்தாராம் அபிநவ்.  அப்போது சம்ஸ்கிருதம் படித்தது கை கொடுத்ததாம்.  அங்கிருந்த ஒரே மாதத்தில் ஜப்பானிய மொழியில் பேசக் கற்றுக்கொண்டுவிட்டாராம்!  

"சான்ஸ்கிரிட் பாய்ஸ்' என்று ஒரு குழுவையே உருவாக்கியிருக்கிறார் அபிநவ்.   ஆறு வயதில், கணேஷ் குமார் என்பவரிடம் மிருதங்கம் வாசிக்கக் கற்றுக் கொண்டவர், திருவாரூர் வைத்தியநாதன், கணேஷ் குமார், நியூஜெர்ஸியில் உள்ள குமார் காந்தன் ஆகியோரிடம் பயிற்சியைத் தொடர்ந்து, தற்போது சென்னைக்கு வரும்போது குரு காரைக்குடி மணி அவர்களிடம் கற்றுக்கொள்கிறார்.

உன்னிகிருஷ்ணன், கணேஷ்-குமரேஷ், பண்டித் விசுவமோகன் பட், ராமகிருஷ்ணன் மூர்த்தி போன்ற பிரபலங்களுக்கு மிருதங்கம்  வாசித்து வருகிறார்.  ""மிருதங்கத்தால்தான் சம்ஸ்கிருதம் கற்க ஆசை உண்டாயிற்று! "சம்ஸ்கிருத கிருதிகளுக்கு அர்த்தம் புரிந்து கொண்டு வாசிக்க முடிகிறது'' என்கிறார் அபிநவ். 

நியூயார்க்கில் உள்ள கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் அபிநவ், சென்ற மாதம் இசை விழா சீஸனுக்குச் சென்னை வரும் முன், ஹிமாசலத்தில் உள்ள தர்மஸ்தலா நகரில் உள்ள திபெத்திய அகதிகளுடன் தங்கி, உரையாடி, அவர்கள் நிலை குறித்து இறுதி ஆண்டு ஆய்வுக் கட்டுரையை எழுதியிருக்கிறார்.  அதைக்  கல்லூரியில் சமர்ப்பிக்க விருக்கிறார்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com