அழிவை நோக்கி நியூட்டன் ஆப்பிள் மரம்

புவியீர்ப்பு விசையை கடந்த 1666-இல் விஞ்ஞானி ஐசக் நியூட்டன் கண்டுபிடிக்க முக்கிய காரணமாக இருந்த ஆப்பிள் மரம், இங்கிலாந்தின் லிங்கன்ஷேர் பகுதியில் உள்ளது. 
அழிவை நோக்கி நியூட்டன் ஆப்பிள் மரம்


புவியீர்ப்பு விசையை கடந்த 1666-இல் விஞ்ஞானி ஐசக் நியூட்டன் கண்டுபிடிக்க முக்கிய காரணமாக இருந்த ஆப்பிள் மரம், இங்கிலாந்தின் லிங்கன்ஷேர் பகுதியில் உள்ளது. 

இப்போதும் கூட, உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து இந்த மரத்தைப் பார்வையிட்டு செல்கின்றனர். ஒருமுறை ஏற்பட்ட கடும் புயலையும் தாங்கி வளைந்தவாறு வளர்ந்துள்ளது இந்த மரம். இங்கு அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பையும் மீறி, சிலர் வேர் மற்றும் கிளைகளை நினைவு சின்னமாக ஒடித்துச் செல்வதால், தற்போது இந்த மரம் சிறிது சிறிதாக அழிந்து வருகிறது. 

அரிய அறிவியல் கண்டுபிடிப்புக்கு வித்திட்ட இம்மரத்தை மேலும் 400 ஆண்டுகளாவது பாதுகாக்க வேண்டும் என்ற முனைப்பில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com