ரமணரின் அம்மாவாக அனுராதா

திருவண்ணாமலை சென்றால் இரண்டு விஷயங்களை பார்க்காமல் மக்கள் வரமாட்டார்கள். ஒன்று, அண்ணாமலையாரின் கோயில், மற்றொன்று ரமண மஹரிஷியின் ஆஸ்ரமம்.
ரமணரின் அம்மாவாக அனுராதா

திருவண்ணாமலை சென்றால் இரண்டு விஷயங்களை பார்க்காமல் மக்கள் வரமாட்டார்கள். ஒன்று, அண்ணாமலையாரின் கோயில், மற்றொன்று ரமண மஹரிஷியின் ஆஸ்ரமம். ரமண மஹரிஷியின் வாழ்க்கை வரலாற்றை பல நூல்கள் வாயிலாக நாம் அறிவோம். ஆனால் நாடக ஆசிரியரும், இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தரின் உதவியாளருமான "பாம்பே' சாணக்யா வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் ரமண மகரிஷியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு ஒரு மேடை நாடகம் நடத்த இருக்கிறார். இந்த நாடகத்தின் பெயர் "மகரிஷி' -ஹ த்ர்ன்ழ்ய்ங்ஹ் ர்ச் ள்ஹஞ்ங். துணுக்கு தோரணங்கள்தான் நாடகம் என்று இருக்கும் இன்றைய நிலையில் இப்படிப்பட்ட ஒரு நாடகத்தை எழுதி மேடை ஏற்றுவதற்கு மிகவும் துணிச்சல் வேண்டும். அந்த துணிச்சல் எப்படி ஏற்பட்டது என்று கேட்டபோது, ""அதுவே ரமண மஹரிஷியின் அருள் தான்'' என்றார் பாம்பே சாணக்யா.
""எனது தந்தையார் தனது இளவயதில் இருந்தே ரமண மஹரிஷியின் ஆத்மார்த்த பக்தர். நானும் அவ்வப்போது மகரிஷியை பற்றி அவர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதற்கு பிறகு நான் பல மேடை நாடகங்களை எழுதி விட்டேன். ஏனோ எனக்கு இந்த மாதிரி ஒரு நாடகத்தை எழுதவேண்டும் என்று தோன்றவில்லை. இரண்டு வருடங்களுக்கு முன் ஒருமுறை ரமணாஸ்ரமத்திற்கு சென்றேன். எனது நண்பர் முரளியிடம் பேசும்போது ரமணரைப் பற்றி ஒரு க்ஷண்ர் -ல்ண்ஸ்ரீ எடுக்கலாம் என்று முடிவு செய்தோம். பின்னர் பேசும்போது "தபஸ்' என்ற பெயரில், அஷ்வினிகுமார் ஐயர் என்பவர் இந்த நாடகத்தை தயாரிக்க விரும்பினார். சரியென்று நானும் சுமார் 5 மாதங்களுக்கு முன்பு இந்த நாடகத்தை முழுமையாக எழுதி, ரமணாஸ்ரமத்தில் உள்ள கணேசன் மற்றும் மணி ஆகியோருக்கு படித்துக் காட்டினேன். இவர்கள் இருவரும் ஸ்ரீ ரமணரின் தம்பி பேரன்கள். இதில் கணேசன் ஸ்ரீ ரமணருடன் சிறுவயதில் இருந்திருக்கிறார். இருவரும் நான் நாடகமாக்கியதை முழுவதுமாக படித்தபின் "ஸ்ரீரமணரின் ஆசீர்வாதங்கள் உங்களுக்கு கண்டிப்பாக இருக்கும்' என்றும், நாடகம் சரியாக எழுதப்பட்டிருப்பதாகவும் கூறி வாழ்த்தினார்கள். இதில் சிறப்பு என்ன என்றால் கணேசன் ஸ்ரீ ரமணரை பற்றி புத்தகங்கள் எழுதியுள்ளார். ரமணாஸ்ரமத்தின் வாழ்த்துக்களுக்கு பிறகு, வேலைகள் மிக சிறப்பாக நடக்க ஆரம்பித்தன. எனது நண்பரான தொலைக்காட்சி நடிகர் மற்றும் திரைப்பட இயக்குநர் ராகவ், இதில் தனது பங்குக்கு இசையமைக்க விரும்பினார். அதோடு, ஒரு வேடத்திலும் அவர் நடிக்கிறார். அவரது மனைவி ப்ரீத்தாவும் இதில் நடிக்கிறார். ப்ரீத்தா மூலம் இந்த மாதிரி ஒரு நாடகம் போடப் போகிறோம் என்று கேள்விப்பட்டு என்னை தொடர்பு கொண்டார் பாடகி அனுராதா ஸ்ரீராம். இவர், பகவான் ரமண மஹரிஷியின் மீது மிகுந்த பக்தி கொண்டவர். அவரது ஆஸ்ரமத்திற்கு வருபவர். "இந்த நாடகத்தில் எனது பங்கும் இருக்க வேண்டும்' என்று என்னிடம் அனுராதா ஸ்ரீராம் கேட்டதற்கு, நான் அவரை பார்த்தவுடன் "எனக்கு தோன்றிய ஒரு விஷயத்தை சொல்லலாமா?' என்று கேட்டேன். "சொல்லுங்கள் சார்' என்றார். "நீங்கள் பாடுவதுடன் நில்லாமல் இந்த நாடகத்திற்கு இசையிலும் உங்கள் ஒத்துழைப்பை நல்க வேண்டும்' என்று சொன்ன பிறகு, கொஞ்சம் இடைவெளி விட்டு, "இதில் ஒரு வேடம் இருக்கிறது நடிக்கிறீர்களா?' என்றேன். அது ரமணரின் தாயார் வேடம். சந்தோசத்துடன் நடிக்க சம்மதித்தார். நாங்கள் ஒத்திகை பார்க்கும்போதே இவர் அந்த வேடத்தில் மிகவும் சிறப்பாக நடிப்பார் என்று எங்கள் எல்லோருக்கும் புரிந்தது. ஆக அவர் இந்த மேடை நாடகத்தில் பாடுகிறார். இசையமைப்பிலும் தனது பங்களிப்பை நல்கியுள்ளார். அத்துடன் முதன் முறையாக நடிக்கவும் செய்கிறார். அதுவும் மேடை நாடகத்தில். 
இதில் இன்னொரு இசை அமைப்பாளரும், எனது நண்பருமான "அருவி' படத்தின் இசை அமைப்பாளர் வேதாந்த் பரத்வாஜும் தன் பங்குக்கு இசையை மெருகேற்றி உள்ளார். இதுவரை நான் சமூக நாடகங்கள் போட்டிருக்கிறேன். ஆனால் இதுபோல் ஒரு மஹானின் வாழ்க்கை சரிதத்தை மேடை ஏற்றியது இல்லை. அதனால் இந்த நாடகம் எனக்கு ஒரு சவாலாகவே இருந்தது என்றுதான் சொல்லவேண்டும். ரமண மகரிஷி மதுரையில் இருந்து விழுப்புரம் சென்று பின்னர்தான் திருவண்ணாமலையை அடைகிறார். அதுவும் அவர் ரயிலில்தான் இந்த இடத்திற்கெல்லாம் செல்கிறார். அதனால் ரயிலை நாங்கள் மேடையில் காண்பிக்க முடிவு செய்து வேலைகள் நடக்கின்றன. 
அதேபோன்று ரமணர், லட்சுமி என்று ஒரு பசு மாட்டை மிகவும் விரும்பி வளர்த்தார். அதேபோன்று மேடையிலும் ஒரு பசு மாட்டை நாங்கள் கொண்டு வருகிறோம். அந்த மாட்டுடன் பகவான் பேசுவது போன்ற ஒரு காட்சியையும் வைத்துள்ளோம். இதில் ராமணராக 60 வயதிற்கு மேல் உள்ள ஒருவர் நடிக்கிறார். அவரது உண்மையான பெயரும் ரமணன் தான். நாற்பதாண்டுகள் மேடை நாடகங்களில் நடித்த அனுபவம் உள்ளவர். "மகரிஷி" -ஹ த்ர்ன்ழ்ய்ங்ஹ் ர்ச் ள்ஹஞ்ங் என்று இந்த நாடகம் கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் ஆதரவில் நாரத கான சபா அரங்கில், ஜூன் மாதம் 8-ஆம் தேதி அரங்கேற்றம் செய்கிறோம்'' என்றார் "பாம்பே' சாணக்யா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com