உங்கள் தலை எப்படி வழுக்கையானது?

உங்கள் தலை எப்படி வழுக்கையானது?

அது எப்படி எங்கே போயிற்று என்றே தெரியவில்லை. படுக்கையில் விழவில்லை. குளியல் அறையில் விழாது. டவலைப் போட்டு துவட்டினால் விழாது. இழுத்துப் பார்த்தால் வராது. ஆனால் போயே போய்விட்டது. 

அது எப்படி எங்கே போயிற்று என்றே தெரியவில்லை. படுக்கையில் விழவில்லை. குளியல் அறையில் விழாது. டவலைப் போட்டு துவட்டினால் விழாது. இழுத்துப் பார்த்தால் வராது. ஆனால் போயே போய்விட்டது. 
இது நடப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன் பார்த்தசாரதி என்ற எனது நண்பன் என்னைப் பார்க்க வந்தான். ஏதோ எழுதினான்.எழுதிவிட்டு, "ஒரு கலர் பெயர் சொல்லு' என்றான். சொன்னேன். "ஒரு பூவின் பெயர் சொல்லு' என்றான். சொன்னேன். "ஒரு நம்பர் சொல்லு' என்றான். சொன்னேன். "இல்லை. இதை நீ மாத்தி சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்' என்றான். "நான் எனக்குப் பட்டதைச் சொன்னேன். அதனால் என்ன?' என்றேன்.
"இல்லை. ஒரு மாதத்துக்குள் எதிர்பாராத ஏதோ ஒன்று நடக்கப்போகிறது. என்னவென்று சொல்லத் தெரியவில்லை' என்றவனிடம், "இதைத் தவிர்க்க ஏதேனும் வழி இருக்கிறதா?' என்று கேட்டேன். "இருக்கிறது. நீ அதிகாலையில் கபாலீசுவரர் கோயிலுக்குப் போய் வேறு யாரும் பார்ப்பதற்குள் அம்பாளை தரிசனம் செய்ய வேண்டும்' என்றான். "குருக்கள் கூட பார்ப்பதற்கு முன்பாகவா?' என்று கேட்டேன். 
"ஆமாம். நீயே கதவைத் திறக்க வேண்டும். அம்பாளை தரிசிக்க வேண்டும்' என்றான். இது நடக்கிற காரியமில்லை என்று விட்டுவிட்டேன். ஒரே மாதத்தில் தலைமுடி போயே போய்விட்டது. இப்படி பிரமிக்கத்தக்க வகையில் நடக்கப்போவதை முன்கூட்டியே சொல்றவங்க சிலர் இருக்கிறார்கள்.

(சென்னை தொலைக்காட்சி முன்னாள் செய்தி ஆசிரியர் ஹெச்.ராமகிருஷ்ணன் ஒருமுறை "துக்ளக்' ஆசிரியர் சோவை எடுத்த பேட்டியில்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com