ராஜாவுக்கு ராஜா

அக்கூஸ் புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்து வரும் படம்  "ராஜாவுக்கு ராஜா'.  வி. ஆர். விநாயக், தியா, வைஷ்ணவி, மனோபாலா, மகாநதி சங்கர், அங்காடித் தெரு சிந்து உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
ராஜாவுக்கு ராஜா

அக்கூஸ் புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்து வரும் படம்  "ராஜாவுக்கு ராஜா'.  வி. ஆர். விநாயக், தியா, வைஷ்ணவி, மனோபாலா, மகாநதி சங்கர், அங்காடித் தெரு சிந்து உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஏ.வசந்த்குமார்.  ஒளிப்பதிவு இயக்குநராக காசி விஷ்வா பணியாற்றுகிறார்.  ஜெயக்குமார் இசையமைக்கிறார்.  படம் குறித்து இயக்குநர் பேசுகையில்... 

""அப்பாவுக்கும் மகனுக்குமான உறவுப் பின்னல்கள்தான் படத்தின் திரைக்கதை. அப்பா-மகன் உறவு இருக்கே... அதில்தான் எத்தனை அழகு.  எத்தனை அர்த்தம். ஒவ்வொருத்தர் வாழ்க்கைக்கும் உருவம் கொடுக்கிற உறவு அது. ஆனால், பல குடும்பங்களில் அப்பாவுக்கும் மகனுக்கும் நடுவில் இன்னும் சுதந்திரப் போராட்டம் நடந்துக் கொண்டேதான் இருக்கிறது.  இரண்டு வயசில உன் விரலைப் பிடிச்சுக்கிட்டு நடந்தது தப்புதான். அதுக்காக இருபது வயசுலயும் நீ என் கையை விட்டுவிடுப்பா என்று கேட்கிற மகன்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். இப்படி நிறைய கேள்விகள் பசங்களிடம் இருக்கிறது. தலைமுறைகள் இடைவெளி இப்போது அதிகமாகி விட்டது. அப்பாவை வில்லனாக பார்க்கிறார்கள்... இல்லா விட்டால் காமெடியன் ஆக்கி விடுகிறார்கள். என்னதான் அப்பாவோடு மோதினாலும், பாசம்னு வந்துட்டா நம்ம பசங்க எப்போதுமே தங்கம். இப்படி ஒரு சூழலைத்தான் இந்தப் படம் கடந்து போகும். அப்பாவாக மகாநதி சங்கர் - மகனாக புதுமுகம் வி.ஆர்.விநாயக் நடிக்கின்றனர்.  படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது''  என்றார் இயக்குநர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com