ஒரு "முன்மாதிரி ' மருத்துவ நிலையம்...!

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டத்தில் செருவாவிடுதியில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் "அரசு ஆரம்ப சுகாதார நிலையம்" இன்று இந்தியாவிலேயே ஒரு முன்மாதிரி மருத்துவ நிலையமாக திகழ்கிறது.
ஒரு "முன்மாதிரி ' மருத்துவ நிலையம்...!

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டத்தில் செருவாவிடுதியில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் "அரசு ஆரம்ப சுகாதார நிலையம்" இன்று இந்தியாவிலேயே ஒரு முன்மாதிரி மருத்துவ நிலையமாக திகழ்கிறது. தென்னை, மா, பலா, சப்போட்டா, மாதுளை, நெல்லிக்காய், வாழை மரங்களின் அணிவகுப்புடன், காய்கறி தோட்டம். மூலிகைத் தோட்டம், சிறுவர் பூங்கா என்று பசுமையும், புதுமையும் கலந்த இந்த மருத்துவமனை ஐநஞ தரச் சான்றிதழைப் பெற்றிருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. 

குழாய் கிணறுகள், சொட்டு நீர்ப் பாசனம், இயற்கை உரம், இயற்கை பூச்சி கொல்லி மருந்துகள், என்று தூள் பரப்பும் மருத்துவ நிலையத்திற்கு அந்தப் பகுதி மக்களின் பங்களிப்பும் சேர்ந்திருக்கிறது. 

நிலையத்தின் தலைமை மருத்துவராக இருக்கும் டாக்டர் செüந்தரராஜனை கேட்டோம். 

""நான் புதுக்கோட்டை குலமங்கலத்தைச் சேர்ந்தவன். விவசாயக் குடும்பம். விவசாயத்தில் உள்ள பிரச்சினைகள் அத்தனையும் எனக்குத் தெரியும். 

ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையிலும் கர்ப்பமான பெண்கள் சுமார் நாற்பது பேர் பரிசோதனைக்காக இந்த மருத்துவமனைக்கு வருவார்கள். நிறைமாத கர்ப்பிணிப் பெண்கள் நீண்ட நேரம் நிற்பதும் அல்லது கீழே உட்கார்ந்து விட்டு அழைப்பு வந்ததும் மருத்துவரைப் பார்க்க எழுந்து நிற்பதற்கு படும் கஷ்டத்தை சிரமத்தைப் பார்த்து, உதவி செய்யும் மனம் உள்ளவர்களிடத்தில் சொல்லி பிளாஸ்டிக் நாற்காலிகள் வாங்கிப் போட்டேன்.

அடுத்து ஐந்து ஏக்கர் நிலம் சும்மா கிடக்கிறது. வரும் கர்ப்பிணிப் பெண்களுக்கு தாய்}சிசு நலன் கருதி ஏதாவது செய்யலாம் என்று நினைத்து காய்கறி தோட்டம் போட்டேன். அன்றைக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த வீரகபிலன் மற்றும் பலர் பலவிதத்தில் உதவினார்கள். நிலத்தின் இன்னொருபுறம் சோளம், கேழ்வரகு, மரவள்ளிக்கிழங்கு, சீனிக்கிழங்கு, நிலக்கடலை, மிளகாய், கீரைவகைகள், தர்ப்பூசணி பயிரிட்டோம். இந்த முயற்சிக்கு சக மருத்துவர்களும், மருத்துவமனையைச் சேர்ந்த அனைத்து ஊழியர்களும் தோளோடு தோள் கொடுத்து உதவி வருகிறார்கள். ஒவ்வொரு செவ்வாய் அன்று பரிசோதனைக்காக வரும் கர்ப்பிணிப் பெண்களுக்கு மதிய உணவை நாங்களே தயாரித்து வழங்கி வருகிறோம். தோட்டத்திற்கு இயற்கை உரம்தான் பயன்படுத்துகிறோம். இங்கு வந்த மிளகாயை காய வைத்து குழம்பிற்காகப் பயன்படுத்துகிறோம். அம்மியில்தான் மசாலாவை அரைத்து சமைக்கிறோம். சமையல் பாத்திரங்கள் எல்லாம் நண்பர்களால் அன்பளிப்பு செய்யப்பட்டவை. 

கர்ப்பிணிப் பெண்கள் சோதனை முடிந்து வீட்டிற்கு புறப்படும்போது, தோட்டத்தில் பறித்த காய்கறிகளையும் கொடுத்து அனுப்புகிறோம். இந்தச் சேவையை 2006}இல் தொடங்கினோம். 

"மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு சோளம் கேழ்வரகுக் கூழ் வழங்குகிறோம். இங்கே பசு மாடு வளர்க்கிறோம். கறக்கும் பாலை நோயாளிகளுக்குத் தருகிறோம். . நோயாளிகளின் நலன் கருதி, துளசி, வல்லாரை, தூதுவளை, கற்றாழை, சித்தரத்தை உள்ளிட்ட மருத்துவ குணமுள்ள கீரைவகைகளை வளர்த்து வருகிறோம். 2007}இல் பேராவூரணி வட்டாரத்தைச் சேர்ந்த 700 கர்ப்பிணி பெண்களுக்கு "வளைகாப்பு' விழா நடத்தினோம். அன்றைய காலகட்டத்தில் இந்த விழா பெரிதும் பேசப்பட்டது'' என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com