360 டிகிரி

உலகிலேயே வெப்பமான இடம் அசீசீயா (லிபியா). உலகிலேயே குளிர்ந்த இடம் சைபீரியா (ரஷியா).

• தண்ணீருக்கு அடியில் சென்று ஆராய்ச்சி செய்ய உதவும் மூச்சு கருவியின் பெயர் ஸ்கியூபா ஆகும். (SCUBA-Self Contained Breathing Apparatus)

• தொலைக்காட்சியில் பயன்படுத்தப்படும் மூன்று அடிப்படை நிறங்கள் பச்சை, நீலம், சிகப்பு.

• உலகிலேயே வெப்பமான இடம் அசீசீயா (லிபியா). உலகிலேயே குளிர்ந்த இடம் சைபீரியா (ரஷியா).

• மனிதனுடைய காதுகளால் 130 டெசிபல் அளவு தான் பொறுத்துக்கொள்ள முடியும்.
-பா.பரத்

யாழ்
* தொல்காப்பியம் தோன்றுவதற்கு நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, "யாழ்' இசைக்கருவி உருவாகிவிட்டது. 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஹரப்பா நாகரிகத்தில் யாழ் காணப்படுகிறது. 21 நரம்புகளைக் கொண்டது பேரி யாழ். 17 நரம்புகளைக் கொண்டது மகர யாழ். 16 நரம்புகள் கொண்டது சகோட யாழ். 7 நரம்புகளைக் கொண்டது செங்கோட்டி யாழ்.

* வீணை 300 ஆண்டுகளாகத் தான் பயன்பாட்டில் உள்ளது. தஞ்சையை ஆண்ட ரகுநாத நாயக்கரே வீணையை உருவாக்கினார் என்பர். யாழின் மறுவடிவமே வீணை என்பது பலரின் கருத்து. பலா, கருங்காலி, செம்மரம், கதிர்மரம், லியன், மூங்கில், பிரம்பு முதலியவை வீணை செய்ய ஏற்ற மர வகைகளாகும்.

* உலக மொழிகளிலேயே தமிழ் மொழியில்தான் முதன் முதலாக அகர வரிசை தோன்றியது. அதன் பெயர் அகராதி நிகண்டு. இயற்றியவர் சிதம்பர சிரேவன சித்தர். ஆண்டு 1594. அதன் பிறகே, மற்ற மொழிகளில் அகர வரிசை தோன்றியது.

18 வகைக் கறிகள்
* தமிழர் விருந்துகளில் தலைசிறந்தது திருமண விருந்து. அதில் 18 வகைக் கறியும், பாயாசமும் படைக்கப்படும். 18 வகைக் கறிகள் எவையென்று தெரியுமா? அவியல், கடையல், கூட்டு, கும்மாயம், துவட்டல், புரட்டல், பொரியல், வறுவல், புளிக்கறி, பச்சடி, அப்பளம், துவையல், ஊறுகாய், வற்றல், உளுந்து வடை, காரவடை, தேங்குழல், முக்கனிகளில் ஒன்று.

* ஆப்கானிஸ்தானில் 1981-ஆம் ஆண்டு வரை கடிதங்களில் முத்திரை குத்தும் பழக்கம் மேற்கொள்ளப்படவில்லை. கடிதங்களின் ஓரங்களைப் பற்களால் கடித்து "பல்' முத்திரைகளைப் பதித்து அனுப்பி வைத்தார்கள். இதற்கென்றே தனியாக தபால் கடியர்களை அந்நாட்டு தபால் இலாகா நியமித்து வந்தது.
- நெ.இராமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com