7 வயது ... வருமானம் 150 கோடி!

ஒரு நாளைக்கு முன்னூறு ரூபாய் சம்பாதிக்கவே சாமான்யர்கள் திணறும்போது, ஏழு வயது சிறுவன் அநாயசமாக ஆண்டுக்கு 150 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி உலக மக்களை ஆச்சரியப்படுத்தி வருகிறான். 
7 வயது ... வருமானம் 150 கோடி!

ஒரு நாளைக்கு முன்னூறு ரூபாய் சம்பாதிக்கவே சாமான்யர்கள் திணறும்போது, ஏழு வயது சிறுவன் அநாயசமாக ஆண்டுக்கு 150 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி உலக மக்களை ஆச்சரியப்படுத்தி வருகிறான். 
பல குழந்தைகளுக்கு விளையாட பொம்மைகள் கிடைப்பதே அரிது. ஏழு வயதில் சிறார்கள் பொழுதுபோக்காகப் பொம்மைகளை வைத்து விளையாடிக் கொண்டிருப்பார்கள். விளையாடும் பொம்மைகளைக் கொண்டே ஆண்டுக்கு 150 கோடி சம்பாதிக்கிறான் இந்த அதிசய சிறுவன் ரேயான். அமெரிக்காவை சேர்ந்த ரேயான் 2017-2018 -ஆம் ஆண்டில் யூ டியூப் மூலம் அதிக வருமானம் ஈட்டும் நபர்கள் பட்டியலை "ஃபோர்ப்ஸ்' வணிக இதழ் வெளியிட்டுள்ளது. ஆண்டிற்கு 155 கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் ரேயானுக்கு முதல் இடம் கிடைத்துள்ளது. பொம்மைகள் என்றால் ரேயானுக்கு உயிர். பொம்மை ஒன்றை வாங்குமுன் அந்த பொம்மை பற்றிய தரம், மதிப்பு, தோற்றம் குறித்து மதிப்பீடு செய்வான். அந்த மதிப்பீட்டின் அடிப்படையில் மட்டுமே பொம்மைகள் வாங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறான். 
பல பெற்றோர், குழந்தைகள் பொம்மை கேட்டால் உடனே வாங்கித் தருவதில்லை. அப்படியே வாங்கிக் கொடுத்தாலும், கேட்ட பொம்மையை வாங்கித் தராமல் விலை குறைந்த வெறும் பொம்மைகளை வாங்கித் தருவார்கள். சில சிறார்களுக்கே விருப்பப்பட்ட பொம்மைகள் கிடைக்கும். பொம்மைகளின் பால் ரேயானின் அளவுகடந்த ஆர்வம், அதீத ஈடுபாட்டினை சரியான கோணத்தில் உணர்ந்து கொண்ட ரேயானின் தந்தை 2015 -இல் "ரேயான் பொம்மைகள் விமர்சனங்கள்' (Ryan Toys Review) என்ற பெயரில் யூ டியூப் சேனலைத் தொடங்கினார். எதிர்பார்த்த மாதிரி, தொடக்கத்தில், யூ டியூபில் ரேயானின் காணொளிகள் போதிய வரவேற்பை பெறவில்லை. ஆனாலும் முயற்சியில் தளர்ந்து போகாமல் தொடர்ந்து ஒரு நாளைக்கு ஒரு காணொளி என்று பதிவேற்றம் செய்வதை நிறுத்தவில்லை. அவர்களது விடாமுயற்சி பலனைத் தந்தது. 2015 ஜூலை மாதம் அதிர்ஷ்டம் ரேயானின் கதவைத் தட்டியது. பதிவேற்றம் செய்யப்பட்ட ரேயானின் "ஜயண்ட் எக் சர்ப்ரைஸ்' (Giant Egg Surprise) என்ற வீடியோ வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது. தொடர்ந்து உழைக்க குழந்தைகளை ரேயான் காய்ச்சல் பிடித்துக் கொண்டது. ரேயானின் காணொளிகளை லட்சக்கணக்கில் குழந்தைகள் பெரியவர்கள் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். 
வழக்கமான காணொளிகளுக்கு மதிப்பு கூட்டும் விதமாக குழந்தைகளைக் கவர்ந்திழுக்கும் வகையில் பலவித கண்ணைக்கவரும் பொம்மைகளை அறிமுகப்படுத்தி பொம்மைகளுடன் எப்படியெல்லாம் விளையாடலாம் என்று செய்முறையோடு செய்து காட்ட .. தந்தை படம் பிடிக்க... அவை பதிவேற்றம் செய்யப்பட்டன. வித்தியாசமான காணொளிகள் ரேயானை குழந்தைகளின் ஹீரோவாக்கியது. ரேயானின் காணொளிகளை குழந்தைகள் விழுந்து விழுந்து பார்க்க ஆரம்பித்தார்கள். 
குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் ரேயானின் காணொளியில் வரும் பொம்மை வேண்டும் என்று வீட்டில் கேட்க ஆரம்பித்தனர். ரேயானின் யூ டியூப் சேனலை எழுபது லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் சந்தாதாரராக மாறியுள்ளனர். ரேயானின் காணொளிகள் இரண்டு கோடிக்கும் மேலாக பார்க்கப்பட்டுள்ளன. விளைவு ... ரேயானின் வருமானம் செங்குத்தாக மேல்நோக்கி உயர ஆரம்பித்தது. 
பொம்மைகள் குறித்த ரேயானின் விமர்சனங்களின் காணொளியில் பார்த்துவிட்டு சிறார்கள் அந்த பொம்மைகளை வாங்க ஆர்வம் காட்ட .. பொம்மை விற்பனை அதிகரித்தது. "ரேயான் சிலாகித்துச் சொன்னால் அந்த பொம்மை அருமையாக இருக்கும்.. என்ற நம்பிக்கை காணொளியாக காண்பவர்கள் மனதில் ஊன்றிவிட்டது. 
"ஃபோர்ப்ஸ்' பத்திரிகை குறிப்பிட்டு இருக்கிறது. அதனால் ஒட்டு மொத்த பொம்மை தயாரிப்புகள் அதிகரித்தன என்கிறது "ஃபோர்ப்ஸ்' வணிக இதழ். 
சிறார்களின் மத்தியில் "பொம்மைகளின் தூதுவன்' ஆகிவிட்ட ரேயானுக்கு பிரபல சூப்பர் மார்க்கெட்டான "வால்மார்ட்' கெளரவத்தைத் தந்தது. தனது ஷோரூமில், "ரேயான் உலகம்' என்ற பெயரில் தனி பிரிவையே ஆரம்பித்து சிறார்களின் பெரியவர்களின் கவனங்களை ஒருசேர கவர்ந்தது. செய்வதை ஒழுங்காகச் செய்தால் சிறியவர்களும் சாதனை படைக்கலாம் என்பதற்கு எடுத்துக்காட்டு ரேயான்...! 
- கண்ணம்மா பாரதி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com