உணவு பரிமாறிய ஐஸ்வர்யாராய்!

பிரபலங்களின் திருமண விழாக்களில் முன்னணி நட்சத்திரங்கள் நேரில் வந்து வாழ்த்துவது வழக்கம். அங்கு வரும் அவர்களுக்கு உற்சாக வரவேற்பும் அளிக்கப்படும்.
உணவு பரிமாறிய ஐஸ்வர்யாராய்!

பிரபலங்களின் திருமண விழாக்களில் முன்னணி நட்சத்திரங்கள் நேரில் வந்து வாழ்த்துவது வழக்கம். அங்கு வரும் அவர்களுக்கு உற்சாக வரவேற்பும் அளிக்கப்படும். நெருங்கிய நண்பர்கள் என்றால் இரவு விருந்தும், கொண்டாட்டமும் இருக்கும். சமீபத்தில் நடந்த தொழில் அதிபர் அம்பானி இல்ல திருமண விழாவில் பங்கேற்ற பிரபலங்கள் விருந்தினர்களுக்கு உணவு பரிமாறியது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 அமிதாப்பச்சன், ரஜினிகாந்த், ஷாரூக்கான், சல்மான்கான், ஆமீர்கான், ஐஸ்வர்யாராய் என இந்திய நட்சத்திரங்கள் பலரும் திருமண விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தினர். வாரக்கணக்கில் நடந்த திருமண நிகழ்ச்சி சாதனை திருமணமாக நடந்தது. கணவர் அபிஷேக்பச்சனுடன் பங்கேற்ற ஐஸ்வர்யாராய் திடீரென்று மேடையில் ஏறி நடனம் ஆடினார். ஆமீர்கான், ஐஸ்வர்யாராய் போன்ற பிரபலங்கள் திருமணத்தில் பங்கேற்ற விருந்தினர்களுக்கு உணவு பரிமாறி மகிழ்ந்தனர். இந்த வீடியோ இணைய தளங்களில் வைரலாக பரவியது. இது மணமகள் வீட்டில் செய்யப்படும் சம்பிரதாயம். அம்பானி குடும்பத்தின் கூடுதல் அங்கத்தினர்களாக எங்களை இணைத்துக் கொண்டு விருந்து பரிமாறினோம் என்று தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யாராய்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com