வாசகர் கடிதங்கள்!

தினமணி கொண்டாட்டம் 07.07.2019 இதழில் வெளியான  சைக்கிளால் சாதித்த சவுந்தர்ராஜன் பற்றிய தன்னம்பிக்கை கட்டுரை ஊக்கம் அளித்தது. இது போன்ற
வாசகர் கடிதங்கள்!



தினமணி கொண்டாட்டம் 07.07.2019 இதழில் வெளியான  சைக்கிளால் சாதித்த சவுந்தர்ராஜன் பற்றிய தன்னம்பிக்கை கட்டுரை ஊக்கம் அளித்தது. இது போன்ற கட்டுரைகள் மாற்றுத்திறனாளிகள் மட்டுமல்ல சாதிக்க நினைப்பவர்களுக்கும் இது உற்சாக டானிக். 
-மோனிகா, சென்னை

விக்ரகங்களுக்குப் பின்னால் இத்தனை விஷயங்கள் உள்ளன என்பதை படிக்கும் போது வியப்பாக இருந்தது. பக்தியோடு உருவாக்குகிறார்கள் என்பது மெய்சிலிர்க்க வைத்தது.
-சுரேஷ், திருச்செங்கோடு

ஏழைக்கு என்ன கொடுப்பீர்!  என்ற நாடோடிக்கதை அன்னை தெரசாவை நினைவூட்டியது. 
-அனிதா, திருச்சி

வெங்கட்ராமுக்கு ஏற்பட்ட காது குடைச்சலை வைத்தே காதுகள் நாவலை எழுதியிருக்கிறார் என்று சா.கந்தசாமி  சொன்ன தகவல் மூலம் ஒருவருக்கு ஏற்படும் கஷ்டத்தை கூட இன்பமாக எடுத்துக்கொள்ள தோன்றியது.
-சேகர், திருவண்ணாமலை 

தமிழ் சினிமாவை பாலமுருகன் போன்ற கதாசிரியர்கள் அலங்கரித்து இருக்கிறார்கள் என்பதை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது. 
-செங்குட்டுவன், திருவல்லிக்கேணி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com