துபாய் ஷாப்பிங்

இயற்கை எழில் நிறைந்த நாடுகள் என்றும், சீதோஷண நிலை செüகரியமாக உள்ள நாடுகள் என்றும் பல உண்டு.
துபாய் ஷாப்பிங்

இயற்கை எழில் நிறைந்த நாடுகள் என்றும், சீதோஷண நிலை செளகரியமாக உள்ள நாடுகள் என்றும் பல உண்டு. ஆனால் இதில் எதிலேயும் சிக்காத ஒரு நாடு என்றால் அது துபாய். United Arab Emirates என்று கூறினால் 7 Emirates இணைந்த ஒன்று என்று எல்லோருக்கும் தெரியும். ஆங்கிலத்தில் ங்ம்ண்ழ்ஹற்ங்ள் என்றால் அதற்கு  kindgdom என்று பொருள். அதாவது நாடு என்றும் கூறலாம். இன்று துபாய் தங்க நாடாக மாறிவிட்டது. 

காரணம், உலக புகழ்பெற்ற நிறுவனங்கள் பலவும் இந்த துபாயில்  தங்களது அலுவலகத்தைத்    திறந்துள்ளன. வர்த்தகம் இங்குச் சிறப்பாக நடக்கிறது. இன்று துபாயில் எங்குப் பார்த்தாலும்  கட்டடங்கள் எழுப்பப்பட்டு வருவது கண்கூடாகத் தெரியும். கட்டடக்கலை துபாயில் இன்றும் பிரதானமாக இருக்கிறது. 

இன்று துபாய் என்றால் பலருக்கும் நினைவுக்கு வருவது அதன் gold souk மற்றும் உலகத்திலேயே உயரமான கட்டடம் Burj Khalifa தான். இன்று பல்வேறு உலகத் திருவிழாக்கள் இந்த துபாயில் நடக்கிறது. அதில் விளையாட்டு திருவிழாவும், பொருள் வாங்கும் திருவிழாவும் மிக முக்கியமானதாகும். அதில் மிகவும் புகழ் பெற்றதும், Guinness புத்தகத்தில் இடம் பிடித்ததுமான ஒன்று Dubai shopping festival. 

சரி, புத்தாண்டை துபாயில் கொண்டாடலாம் என்று முடிவு செய்து டிசம்பர் கடைசி வாரத்தில் கிளம்பி ஜனவரி முதல் வாரம் வந்துவிடலாம் என்று முடிவுடன் எனக்கும், குடும்பத்தினருக்கும் விமானத்தில் இருக்கையைப் பதிவு செய்தேன். 

நாள் நெருங்க நெருங்க பத்திரமாகப் போய் வரவேண்டுமே என்ற எண்ணம் ஏனோ மனதில் வந்து வந்து போனது. தனியாகச் சென்றால் OK. குடும்பத்துடன் என்பதனால் மனம் கொஞ்சம் தடுமாறியது.  அந்த நாளும் வந்தது விமானத்தில் துபாய் போய் சேர்ந்தோம். 

துபாய் விமான நிலையம் மிகப் பெரியது. சுங்கம் மற்றும் நமது உடமைகளைச் சேகரிக்க வரும்  இடத்திற்கு வரவே சுமார் 15 நிமிடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அந்த நேரத்தில் நமது உடமைகளைக் கொண்டுவந்து விடுகிறார்கள். 

எங்களது உடமைகளைக் கணக்கிட்டு எடுத்துகொண்டிருக்கும் போதே, எனது மாப்பிள்ளையின் பெயர் கொட்டை எழுத்துகளில் அங்குள்ள ஒரு பெயர் பலகையில் விளக்கொளியில் மின்னியது. எமிரேட்ஸ் சிப்பந்தியை தொடர்பு கொள்ளக் கேட்டுக் கொண்டது. அதே சமயம் எங்கள் உடமைகளில் ஒன்றே ஒன்று மட்டும் வரவில்லை என்று சொன்ன போது, எனக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. காரணம்,  அந்தப் பெட்டியில் தான் என் துணிமணிகள் இருந்தன. 

பத்தே நிமிடதில் எங்களுக்கு அளிக்கப்பட்ட கார் எங்களை rain tree என்ற ஓட்டலில் இறக்கியது. நாங்கள் உள்ளே சென்று "எங்கள் அறை முன்பே ரிசர்வ் செய்யப்பட்டு உள்ளதா' என்று கேட்டபோது "ஆம்' என்று பதில் வந்தது. ""சாவியைக் கொடுக்கிறீர்களா'  என்று கேட்டபோது ""நீங்கள் எங்களுக்கு 180 டிர்ஹாம் (துபாய் பணம்) கொடுங்கள்'' என்றார்கள்.

""நான் ஒரு மணிநேரம் கொடுங்கள் எங்கள் நண்பரைக் கூப்பிட்டுப் பணம் எடுத்து வரச் சொல்கிறோம். இல்லை என்றால் உங்கள் பணத்திற்கு இணையாக எங்கள் இந்தியா நாட்டு பணத்தைக் கொடுக்கிறோம்'' என்றேன். அதே வரவேற்பறையில் உள்ள  வேறு ஒரு பெண்மணி ""உங்கள்  நாட்டுப் பணத்தைக் கொடுங்கள்.''

""எங்கள் நாட்டுப் பணம் வந்த பின் அதைக் கொடுத்து விட்டு, உங்கள் நாட்டு பணத்தை பெற்றுக் கொள்ளுங்கள்'' என்றார். 

ஆனால் அந்த இரானியன் மறுத்து ""எங்கள் நாட்டு பணம் தான் தேவை'' என்று கூற, என்ன செய்வது என்று தெரியமால் ""உங்கள் மேலாளரை கூப்பிடுங்கள்'' என்று நான் கூற, நல்லவேளையாக அந்த ஓட்டலின் மேலாளர் ஒரு தமிழர். சோழ என்று பெயர். அவர் வந்து எங்களை இந்த இக்கட்டில் இருந்து காப்பாற்றினார். 

நாங்களும் எங்கள் நண்பரை அழைத்து விஷயத்தைச் சொல்ல, சிலமணி நேரதிற்குள் ஓட்டலில் கேட்ட பணத்தைக் கொடுத்து பெருமூச்சு விட்டோம். அரசின் புதிய ஆணை, யார் வந்தாலும் அரசுக்கு ஒரு அறைக்கு இவ்வளவு பணத்தைக் கட்ட வேண்டும் என்று நிர்ணயித்து இருக்கிறார்கள்.   

துபாய் செல்லும் இந்தியர்கள் தயவு செய்து தனியாக ஒரு (adapter) அடாப்டரை உங்கள் கைபேசியைச் சார்ஜ் செய்ய எடுத்துச் செல்லுங்கள். இல்லை என்றால் நீங்கள் ஒரு தீவில் இருப்பதைப் போல்தான் உணர்வீர்கள்.

எங்கள் ஓட்டலின் வலது புறத்தில் சிறிது நடந்தால் Deira Mall தெரிந்தது. அதன் உள்ளே சென்றால் பல்வேறு இடங்களில் பொருள் வாங்கும் திருவிழாவை பற்றிய குறிப்பு இருந்தது. Dubai Shopping Festival டிசம்பர் 26-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 2 ஆம் தேதி முடிவடைகிறது என்ற குறிப்பு அந்தக் கடைகளின் வாசலில் எல்லோரும் பார்க்கும் விதமாக வைக்கப்பட்டுள்ளது.  இந்தப் பொருள் வாங்கும் திருவிழா துபாயில் உள்ள மிக முக்கியமான கடைகளில் எல்லாம் இருக்கிறது என்று தெரிந்தது. 

துபாயில் சின்ன கடைகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு எல்லா கடைகளும் பெரும்பாலும் பெரிய மாலில் அமைந்திருக்கிறது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு என்று வருவதனால் இந்தத் துபாய்  பொருள் வாங்கும் திருவிழா அதிகமாகக் களை  கட்டவில்லையோ என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது.

துபாய் ஷாப்பிங் திருவிழா பல்வேறு இடங்களில் நடைபெறுகிறது. இது Festivals Retail Sector Promotion Establishment (DFRE), மற்றும் Dubai Tourism and Commerce Marketing (DTCM), இணைந்து நடத்துகிறது. இதன் ஆரம்பம் 1996-ஆம் ஆண்டு தான். United Arab Emirates துணை ஜனாதிபதியும் துபாய் அரசருமான Sheikh Mohammed bin Rashid Al Maktoum தான் இந்தத் திருவிழா உருவாகக் காரணமானவர்.  உலக மக்கள் அனைவரும் தனது நாட்டிற்கு வரவேண்டும். தன் நாட்டையும் மக்களையும் பார்த்து மகிழவேண்டும். அது மட்டும் அல்லாமல் இங்கு வந்து தங்கள் நாட்டின் அந்நிய செலாவணியை அதிகமாகச் செலவழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் யோசித்து, பின்னர் முடிவு செய்தததுதான் இந்தத் திருவிழா. 

பொருள் வாங்கும் திருவிழா மட்டும் இல்லாமல் இதில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமும் இணைத்து மக்களை மகிழ்வித்தது. உலகப் புகழ் பெற்ற நட்சத்திரங்கள் பலர் இங்கு வந்து நடனமாடி மக்களை மகிழ்வித்துள்ளனர். 

ஆரம்பித்த அடுத்த வருடமே (1997) இதற்கான ஒரு இடத்தையே இந்தத் திருவிழா நடத்தும் இடமாக மாற்ற இதை நடத்தும் குழு முடிவு செய்தது. அப்படி ஆரம்பிக்கப்பட்டதுதான். பல்வேறு இடங்களில் விமரிசையாக நடக்கிறது. இவ்வளவு இடங்களில் நடக்கும் இந்தத் திருவிழாவினை காண முதலில் எங்கே போவது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டே ஓட்டல் அறையிலேயே உட்கார்ந்தேன். 

(அடுத்த இதழில்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com