நீதிபதி இயக்கும் கதை 

ஆயுள் தண்டனை கைதி ஒருவர் வெளிவந்து நினைத்தப்படி வாழ முடிகிறது என்பதை மையமாகக் கொண்டு உருவாகி வரும் படம் "வேதமானவன்'.
நீதிபதி இயக்கும் கதை 


ஆயுள் தண்டனை கைதி ஒருவர் வெளிவந்து நினைத்தப்படி வாழ முடிகிறது என்பதை மையமாகக் கொண்டு உருவாகி வரும் படம் "வேதமானவன்'. ஓய்வு பெற்ற நீதிபதி புகழேந்தி தான் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் இந்த கதையை எழுதி இயக்குகிறார். ஏற்கெனவே நாவலாக வெளிவந்து வாசகர்களின் பரவலான பாராட்டுக்களைப் பெற்றது இது என்பது குறிப்பிடத்தக்கது. மனோஜெய்ந்த், ஊர்வசிஜோசி, ஷில்பா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். 

இயக்குநர் பேசும் போது... "" குற்றமும், அந்தக் குற்றத்தை செய்யத் தூண்டக் கூடிய அம்சங்களும்தான் இதன் ஆதாரம். இங்கே குற்றம் என்பது நம்பிக்கை துரோகம். அந்த துரோகத்தின் மூலம் எங்கே ஆரம்பிக்கிறது.  அதன் விளைவுகள் என்ன என்பதுதான் இதன் பேசு பொருள்.  எல்லாவற்றையும் தீர்மானிக்கிற சக்தி உள்ள மனிதனால் எவ்வளவு காசு, பணம் கொடுத்தாலும் சூழ்நிலையை மட்டும் தனக்கு ஏற்றவாறு உருவாக்கி விட முடியாது. அப்படியோர் பாதையில்தான் இந்தக் கதை பயணமாகும். இந்தப் படம் பெரும் விவாத பொருளை உண்டாக்கும் என்பதில் எந்த வித மாறுபாடும் இல்லை'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com