லிபியா நாடோடிக்கதை: இளவரசியின் நீளக் கூந்தல்

லிபியாவில் அழகான இளவரசி இருந்தாள். அவளுக்கு மிகவும் நீளமான கூந்தல் இருந்தது. அவள் எல்லோரிடமும் அன்புடன் பழகினாள். அதனால் அவளை எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். அந்த நாட்டிலேயே மிகவும் பயங்கரமான
லிபியா நாடோடிக்கதை: இளவரசியின் நீளக் கூந்தல்

லிபியாவில் அழகான இளவரசி இருந்தாள். அவளுக்கு மிகவும் நீளமான கூந்தல் இருந்தது. அவள் எல்லோரிடமும் அன்புடன் பழகினாள். அதனால் அவளை எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். அந்த நாட்டிலேயே மிகவும் பயங்கரமான ஒரு அரக்கன் இருந்தான்.  பிறந்தநாள் அன்று மட்டுமே  கண் விழிப்பான். அவனுடைய அரண்மனை கடலுக்கு அடியில் இருந்தது. 

ஒரு நாள் இளவரசி கடற்கரையில் உலவிக் கொண்டிருந்தாள் அன்றைய நாள் தான் அரக்கனின் பிறந்தநாள். அந்த அரக்கன் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் அழகைப் பார்த்து மிகவும் வியந்து போன அரக்கன் அவளைப் பிடித்து கட்டித்தன்னுடைய  அரண்மனைக்கு கொண்டு சென்றான். அப்போது இளவரசியின் தலைமுடிகளில் சில கடற்கரையில் உதிர்ந்து விழுந்தன.

இளவரசி எங்கே சென்றாள் என்று தெரியாமல் ராஜா மிகவும் கலக்கமடைந்தார். அவளைத் தேடுவதற்காக எல்லாப் பகுதிகளுக்கும் ஆட்களை அனுப்பினார். இறுதியாக கடல் அரக்கன் தான் பிடித்து சென்றுள்ளான் என்பது தெரியவந்தது. 

எப்படியாவது அரக்கனைக் கொன்று இளவரசியை மீட்டு விட வேண்டும். அதற்கு என்ன வழி என்று யோசித்தார் ராஜா. கடல் அரக்கனைக் கொன்று காப்பாற்றும் நபருக்கு தான் இளவரசியை திருமணம் செய்து கொடுப்பேன் என்று உறுதி அளித்தார் ராஜா. இதை ஏற்றுக்கொண்டு துணிவுள்ள இளைஞர்கள் பலர் கடல் அரக்கனின் அரண்மனைக்குச் செல்ல கடும் முயற்சி செய்தார்கள். 

ஒரு தனி மனிதனால் அந்தக் கடல் அரக்கனை கொல்ல முடியாது.  ஏழு பேர் ஒன்றாகச் சேர்ந்து முயற்சி செய்தால் தான் அவனைக் கொல்ல முடியும் என்று தச்சர், ஓவியர், கொல்லர், மாலுமி, மந்திரவாதி, திருடன், வேட்டைக்காரன் என்று ஏழு பேர் இளவரசியை மீட்டு வருவதற்கு ராஜா அவர்களுக்கு அனுமதியளித்தார்.

ஏழு பேரின் கூட்டு முயற்சியும் வெற்றியடைந்தது.  இளவரசியை மீட்டு ராஜாவிடம் ஓப்படைத்தார்கள். ஏழு பேரும் இளவரசியை தங்களுக்கு திருமணம் செய்து தரும்படி ராஜாவிடம் கேட்டார்கள். என்ன முடிவு எடுப்பது என்று தெரியாமல் இளவரசியே முடிவு செய்யட்டும் என்று விட்டுவிட்டார் ராஜா. 

கடல் அரக்கன் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்த மந்திரவாதியை நான் என் கணவராக ஏற்றுக்கொள்கிறேன். காரணம் நான் இருக்குமிடம் தெரியாவிட்டால் என்னை கண்டுபிடிப்பது கடினம் என்று அதற்கு விளக்கமும் சொன்னார் இளவரசி.

அப்போது மற்ற ஆறு பேரும் தலை குனிந்தார்கள். இளவரசி சொன்னாள், "இதனால் மற்ற ஆறு பேரும் வருத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை. அதோ அந்தப் பூந்தோட்டத்தைப் பாருங்கள். அதில் ஆறு பூக்கள் இருக்கின்றன. அதிசய மலர்கள் அவை. ஆளுக்கு ஒரு பூவை பறித்து வந்து ராஜாவிடம் கொடுங்கள். உங்களுக்கு அதிர்ஷ்டம் வரும்' என்றாள்.

மற்ற ஆறு பேரும் தோட்டத்திற்குச் சென்று பூக்களை பறித்து ராஜாவிடம் கொடுத்தார்கள். உடனே அந்த ஆறு பூக்ககும் அழகான ஆறு இளவரசிகளாக மாறிவிட்டன. ஏழு பேரும் ஏழு இளவரசிகளைத் திருமணம் செய்து கொண்டார்கள். நாட்டின் பாதிப் பகுதியை ஏழாகப் பிரித்து மணமக்களுக்கு பரிசாக வழங்கினார் ராஜா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com