எப்படி இருக்கிறது இந்த வியாபாரம்?
By -பிஸ்மி பரிணாமன் | Published On : 04th August 2019 01:40 PM | Last Updated : 04th August 2019 01:40 PM | அ+அ அ- |

நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு கரும்பு தின்னக் கூலி கிடைத்து வருகிறது. புரியலையா?
பிரியங்கா தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் தனது பதிவுகளை இலவசமாகப் பதிவேற்றம் செய்து வருகிறார். ஒவ்வொரு பதிவிற்கும் ரூ. 1.85 கோடி சன்மானமாகப் பெற்று வருகிறார். காரணம் பிரியங்காவை இன்ஸ்ட்டாகிராம் தளத்தில் தொடருபவர்கள் மிக அதிகம். சுமார் நான்கு கோடியே முப்பத்தி நான்கு லட்சம் பேர்கள். இந்த ரசிகர்கள் தினமும் பலமுறை இன்ஸ்ட்டாகிராம் தளத்தில் பிரியங்கா பக்கத்தைப் பார்ப்பதால் இன்ஸ்ட்டாகிராம் பிரபலமாகிறது.
அதிக ரசிகர்கள் பிரியங்கா இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தைப் பார்ப்பதால், பிரியங்காவிற்கு ஊக்கத் தொகையாக ஒவ்வொரு பதிவிற்கும் 1.85 கோடி இன்ஸ்ட்டாகிராம் வழங்குகிறது.
இதற்கு அடுத்து புகழுடன் இருந்து சம்பாதிப்பவர் கிரிக்கெட் வீரர் விராட் கோலி. அவரது பதிவுகளைத் தொடரும் ரசிகர்கள் எண்ணிக்கை சுமார் மூன்று கோடியே எண்பது லட்சம். கோலியின் ஒவ்வொரு பதிவிற்கும் ரூ 1.35 கோடி கிடைக்கிறதாம்.
இதில் இன்னொரு வியாபாரமும் இருக்கிறது. வணிக நிறுவனங்களிடம் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு அந்த நிறுவனங்களில் பொருள்களை பிரியங்கா, விராட் கோலி போன்ற பிரபலங்கள் விளம்பரங்கள் இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் தந்து வருகிறார்கள். அந்த வணிக நிறுவனங்கள் தரும் சன்மானம் இன்ஸ்ட்டாகிராம் தரும் ஊக்கத் தொகையில் சேர்க்க வேண்டாம்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...