தமிழ் சினிமாவில் பாரதியார்

தமிழ் கவிதைகளுக்குப் புதிய வடிவம் கொடுத்து எளிமையாக உருவாக்கி தனித்துவமான பாதையை அமைத்து தந்தவர் பாரதி. பிற இலக்கியம், உலகஇலக்கியம், நாட்டு நடப்பு
தமிழ் சினிமாவில் பாரதியார்

தமிழ் கவிதைகளுக்குப் புதிய வடிவம் கொடுத்து எளிமையாக உருவாக்கி தனித்துவமான பாதையை அமைத்து தந்தவர் பாரதி. பிற இலக்கியம், உலகஇலக்கியம், நாட்டு நடப்பு,அரசியல் அறிவு என பரந்த உலகப் பார்வையுடன் நுட்பமான திறன்களையும் பெற்றிருந்தார். 
தொழில்நுட்ப வசதிகள் இல்லாத காலத்திலும் கூட ரஷ்யாவில் நடைபெற்ற புரட்சியைப் பற்றி "ஆகா வென்று எழுந்தது பார் யுகப் புரட்சி' என்று எழுதியவர் .
பாரதியின் குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம், போன்றவை அவரது அழியாப் புகழுக்குக் கட்டியம் கூறுகின்றன. கண்ணனை சிறுகுழந்தையாகவும் நண்பனாகவும், சேவகனாகவும் காதலியாகவும் குருவாகவும் வர்ணித்தவர் பாரதி. 
பாரதியின் பல பாடல்கள் இசை ராகத்துடன் இணைந்து எழுதப்பட்டவை என்பதால் திரைப்படப் பாடல்களாக இவை எப்போதும் ஒலித்துக்கொண்டு இருக்கிறது. மேலும் எல்லா ராகத்திலும் அவரது வரிகளைப் பாட முடியும் என்பதே இதன் தனிச் சிறப்பு.
சுதந்திரப் போராட்டத்தில் பாரதியின் பாடல் வரிகள் புதிய எழுச்சியை ஏற்படுத்தின. இளைஞர்கள் அந்தப் பாடல்களைக் கேட்டு வீறுகொண்டு எழுந்தனர்.
மேலும் தமிழ் சினிமாவில் பாரதியார் பாடல் இடம் பெற்ற முதல் படம் "உத்தமபுத்திரன்'. இது பி.யு சின்னப்பா கதாநாயகனாக நடித்தப்படம்.
"செந்தமிழ் நாடெனும் போதினிலே' என்ற பாடலை இதில் பி.யு.சின்னப்பாவே பாடியிருந்தார்.
தமிழில் வந்த முதல் ஸ்டண்ட் படம். "மாயாமாயவன்'. இதில் மகாத்மா காந்தியை புகழ்ந்து, ஒரு பாடலை படத்தின் நாயகி இந்திரா பாடுவார். 
லோக நாயகமாகிய காந்தி 
ஏழை மற்றோரைக் 
காப்பாற்றும் வேதாந்தி
சாந்தமும் பொறுமையும்
தனி வடிவாகி மாந்தரை
ஆட்கொள்ள வந்த விவேகி 
என் அந்த வரிகள் வரும்
இந்தப் படத்தைத் தயாரித்தவர் மார்டன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம்.
-ராஜிராதா, பெங்களூரு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com