360 டிகிரி

பீஹார்  தலைநகர்  பாட்னாவுக்கும், தமிழகத்தின்  கடலூர்  மாவட்டத்தில்  உள்ள திருப்பாதிரிப்புலியூருக்கும்  ஓர் ஒற்றுமை உண்டு.  இவ்விருஊர்களும்  முதலில்  "பாடலிபுத்திரம்'  என்றே  அழைக்கப்பட்டன.
360 டிகிரி

பீஹார்  தலைநகர்  பாட்னாவுக்கும், தமிழகத்தின்  கடலூர்  மாவட்டத்தில்  உள்ள திருப்பாதிரிப்புலியூருக்கும்  ஓர் ஒற்றுமை உண்டு.  இவ்விருஊர்களும்  முதலில்  "பாடலிபுத்திரம்'  என்றே  அழைக்கப்பட்டன.

இந்தியாவில்  மொத்தம்  1197  தீவுகள்  உள்ளன.  இவற்றில்  723  தீவுகள்  அரபிக் கடலிலும்,  474  தீவுகள்  வங்கக் கடலிலும்  உள்ளன.  இவற்றில் 577  தீவுகளில் மட்டுமே  மக்கள் வசிக்கின்றனர். 

எல். மோகனசுந்தரி, கிருஷ்ணகிரி.



குங்குமப்பூ  கிடைக்கும் செடியின்  பெயர் "குரோக்கஸ்  ஸ்ட்டைவான்' என்பதாகும்.

பிரான்ஸ்  நாட்டில்தான்  முதன்முதலில்  ஆம்னி பஸ் ஓடியது. 

இடி  தாக்கிச் சேதம்  ஏற்படாதிருக்க  இடிதாங்கியை  கண்டுபிடித்த பெஞ்சமின் பிராங்களின்  அரசியல்வாதியாக , அறிவியல்  அறிஞராக,  தத்துவஞானியாக  84 வயது  வரையிலும்  வாழ்ந்து  காட்டியவர்.

எல்.நஞ்சன், முக்கிமலை.


புத்தாண்டு விருந்து!

புத்தாண்டு  பிறக்கும்  ஜனவரி  முதல்நாள்  ஜப்பான் மக்களின்  விருந்தில்  அரிசி, தானியத்தைப்  பயன்படுத்தி செய்யும்  மூன்று இனிப்புப் பண்டங்கள்  இடம் பெறுகிறது.  ஆண்டு முழுவதும்  வாழ்க்கை  இனிதே  இருக்க  இச்சம்பிரதாயம் என்கிறார்கள். 

உத்ரா ஆனந்த்,சென்னை.

கப்பலின்  ஹார்ன் "மங்கல ஒலி'!

நெதர்லாந்து  மக்கள், புத்தாண்டு  பிறக்கும்   ஜனவரி  அதிகாலையில்  கப்பலின் ஹார்ன் ஒலி கேட்பதை  மங்கல  ஒலியாகக் கருதுகிறார்கள். இதனால் அந்த ஆண்டு  முழுவதும்  குடும்பத்தில்  மகிழ்ச்சியும்,  மங்கலமும் நிலவும்  என்பது அவர்களது நம்பிக்கை.


காலக்கணக்கின் ஏழு  அங்கங்கள்!

காலக்கணக்கின்  ஏழு  அங்கங்கள்  கொண்டது  என வான இயல் வல்லுநர்கள் வகுத்துள்ளனர்.  அவை:  நொடி,  விநாடி, மணி, நாள், வாரம்,  மாதம், ஆண்டு ஆகியன ஆகும்.

ஆர். ராதிகா,  நெல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com