பச்சை விளக்கு

டி.ஜி திங்க் மீடியா ஒர்க்ஸ் மற்றும் விண்மீன்கள் பட நிறுவனம் இணைந்து தயாரிக்கும் புதிய படம் "பச்சை விளக்கு'.
பச்சை விளக்கு

டி.ஜி திங்க் மீடியா ஒர்க்ஸ் மற்றும் விண்மீன்கள் பட நிறுவனம் இணைந்து தயாரிக்கும் புதிய படம் "பச்சை விளக்கு'. விதி மீறிய காதலும், விதி மீறிய பயணமும் ஊர் போய் சேராது என்ற கருத்தை மையமாகக் கொண்டு இதன் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. ஆதிக் மாறன், ஸ்ரீமகேஷ் தீஷா, தாரா, மனோபாலா, இமான் அண்ணாச்சி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் டாக்டர் மாறன். திரைப்படக் கல்லூரி மாணவரான டாக்டர் மாறன் "இனிய பயணம்', "பொன்னான நேரம்' என இரு குறும்படங்களை இயக்கி பாராட்டுக்களைப் பெற்றவர்.
 காதல்தான் கதையின் மையம் என்றாலும், விபத்தில்லா பயணம் என்பது மற்றொரு கரு. உலகில் பிறந்த எவரும் சாலையை பயன்படுத்தாமல் இருக்க முடியாது. அப்படி சாலையைப் பயன்படுத்தும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதே கதை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com