360 டிகிரி

இந்திய அரசியலமைப்பை தயாரிக்க ரூபாய் 63,96,729  செலவானது. அதனைத் தயாரிக்க 308 உறுப்பினர்கள், இரண்டு ஆண்டு பதினொரு மாதம் 18 நாட்கள் வேலை செய்தார்கள். 
360 டிகிரி

இந்திய அரசியலமைப்பை தயாரிக்க ரூபாய் 63,96,729  செலவானது. அதனைத் தயாரிக்க 308 உறுப்பினர்கள், இரண்டு ஆண்டு பதினொரு மாதம் 18 நாட்கள் வேலை செய்தார்கள். 

✶    இடி தாங்கி என்பது செம்பினால் ஆனது. இதன் முனை கூர்மையாக அமைக்கப்பட்டிருப்பதால் பூமி நோக்கிப் பாயும் மின் அடர்த்தியை நேராக உள்வாங்கிப் பூமிக்கடியில் இறக்கிவிடுகிறது.
✶    முதல் முறை திருமணங்கள் பதிவு செய்யும் முறையை ஆரம்பித்த நாடு சுவீடன்
✶    கிரிக்கெட் ஆடாத நாடுகள் மூன்று அமெரிக்கா, சீனா, ஜப்பான்.
✶    உலக வங்கியின் ஆண்டுக் கணக்கு செப்டம்பர் மாதம் முதல் தொடங்கும்

-பாலாஜிகணேஷ், சிதம்பரம்

ஆரோக்கியமான உணவு? 

ஸ்பானிஷ் மக்கள் நன்றாக வாழ்வதற்கு முக்கியக் காரணம், ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுவது என்கின்றனர். இதோ அவர்களின் பட்டியல்!

1. ஆலிவ் எண்ணெய்

மற்ற சமையல் எண்ணெய்களை விட இது மிகவும் நல்லது. கொழுப்பும் குறைவு, வறுத்தல், ரோஸ்ட் செய்தல், வேக வைத்து சாப்பிடுதல் போன்றவற்றிற்கு இந்த எண்ணெய்யை பயன் படுத்தலாம்!

2. தினமும் தக்காளி

தக்காளியில் லைக்கோபென் மற்றும் வைட்டமின் சி அதிகம்! ஆக.. பாஸ்தா சாஸ், சாலட் மற்றும் சூப்புகளில் கண்டிப்பாக சேர்க்கவும்!

3. இறைச்சிக்குப் பதில் மீன்

சிவப்பு இறைச்சியைத் தவிர்த்து  வாரத்துக்கு ஒரு முறையாவது மீன் கண்டிப்பாகச் சேர்த்துக் கொள்ளவது நல்லது. இது இருதயத்தைப் பாதுகாக்கும்

4. மூன்று வேளையும் காய்கறிகள்

சிலர் உணவை எட்டுப் பகுதிகளாகப் பிரித்துச் சாப்பிடுவர். ஆனால் அனைத்திலும் ஏதாவது ஒரு காய்கறி, இலை, கீரை இடம் பெற்றிருக்கும். அதே போன்று காலை டிபன், மதிய சாப்பாடு மற்றும் இரவு டின்னர் அல்லது டிபன் சமயத்திலும் கண்டிப்பாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

5. பழம் சாப்பிடுங்கள்

ஆப்பிள்,  ஆரஞ்சுப்பழம், திராட்சை ஆகியவற்றை ஒவ்வொரு உணவுக்குப் பிறகும் மறக்காமல் கொஞ்சம் சாப்பிடுங்கள். அதில் சர்க்கரை கலப்புகளான மாம்பழம், வாழைப்பழத்தை தவிர்ப்பீர்.

ஆனால் நமக்குத் தெரியும் இவை இரண்டையும் அளவாகச் சாப்பிட்டால் மலச்சிக்கல் இருக்காது என்பது! குறிப்பாக வாழைப்பழம் பிற்பகல் அல்லது இரவு உணவுடன் குறைந்தது ஒன்றாவது சாப்பிட வேண்டும்!

6. சூப் சாப்பிடுங்கள்

விருந்தில் முதலில் சூப் தருவது ஏன் தெரியுமா? சூப்பை சாப்பிட்டுவிட்டுப் பின்னர்,   எண்ணெய் பதார்த்தங்களைச் சாப்பிட்டால், அவற்றை சூப் கரைத்து வெளியேற்றி விடும். ஆக வீட்டிலும், குழந்தைகளுக்கு வாரம் இரு முறையாவது தக்காளி மற்ற வெஜிடேபிள் சூப்களைச் செய்து சாப்பிட வைத்தால் வயிறு தொல்லைகள் இருக்காது.

7. பூண்டு சேர்க்க மறக்காதீர்கள்

உடலில் நார்சத்தைக்கூட்ட பூண்டு  அவசியம். ஆக முடிந்த வரையில் பொறியல், ரசம், ஊறுகாய் ஆகியவற்றில் பூண்டை சேர்த்து சாப்பிட்டால் உடலில் கொழுப்பு அதிகம் இருந்தாலும் குறைக்கும்.
 

8. பாலாடை

பாலாடை கட்டியை ரொட்டி, தோசை, சப்பாத்தி, சான்ட்விச் போன்றவற்றில் இணைத்து சாப்பிடுவது நல்லது. எளிதில் ஜீரணம் ஆகும்.  இந்த டிப்ஸ்களை நீங்களும் பரிசீலனை செய்யலாம். ஆரோக்கியம் உறுதி!

-ராஜிராதா, பெங்களூரு

மாமியாருக்குச் சமர்ப்பணம்

பிரிட்டிஷ் நாவலாசிரியரான கிரஹாம் கிரீன் தமது நூலொன்றை இவ்வாறு சமர்ப்பணம் செய்திருக்கிறார்: 

"என் மாமியாருக்கு இந்நூல் சமர்ப்பணம். என்  மனைவியைத் தம் வீட்டுக்கு அவர் அழைத்துச் சென்றிராவிட்டால் என்னால் இந்நூலை எழுதியிருக்கவே முடியாது.' என்கிறார் கிரஹாம் கிரீன். 

-ஆதினமிளகி வீரசிகாமணி

பெங்களூர் வடக்குத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டவர் மணிகண்டன். இவருக்குத் தேர்தல் பிரசாரம் செய்தவர் யார் தெரியுமா? சந்தனக்கடத்தல் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி! “ "நான் சிறையில் இருந்த போது அவர் எனக்கு மிகவும் உதவி செய்தார். அதற்காகத்தான் அவருக்காகப் பிரசாரம் செய்கிறேன்' என்கிறார் முத்துலட்சுமி. 

-கே.ராமச்சந்திரன், பெங்களூரு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com