பொழுதுபோக்காக 100 உலக சாதனைகள்..!

திருத்தணியைச் சேர்ந்த ஆசிரியர் தம்பதியர் கோகுலராஜ் - புவனா. இவர்களின் மகள் ஆஷிகா 12 ஆம் வகுப்பிலும், மகன் பிரியன்ராஜ், 7 ஆம் வகுப்பிலும் பயின்று வருகிறார்கள்.
பொழுதுபோக்காக 100 உலக சாதனைகள்..!

திருத்தணியைச் சேர்ந்த ஆசிரியர் தம்பதியர் கோகுலராஜ் - புவனா. இவர்களின் மகள் ஆஷிகா 12 ஆம் வகுப்பிலும், மகன் பிரியன்ராஜ், 7 ஆம் வகுப்பிலும் பயின்று வருகிறார்கள். இந்தக் குடும்பம் இதுவரை 100 உலக சாதனைகள் படைத்திருக்கிறது.
 கோகுலராஜ், இதுவரை உலகிலேயே அதிக நேரம் மிமிக்ரி, அதிக நேர விவாத மேடை, அதிக நேர கவிதை வாசிப்பு, 1330 குறள்களை 1330 பேருக்கு சென்னை வள்ளுவர் கோட்டத்திலிருந்து இருந்து குறுந்தகவல் மூலம் அனுப்பியது, விவேகானந்தரின் 150 ஆவது பிறந்த நாளில் 150 நபர்களைக் கொண்டு அவரின் 150 கொள்கைகளை 150 நிமிடங்கள் உறுதிமொழி எடுக்கச் செய்துள்ளார்.
 ஒரே தபால் அட்டையில் நெகிழி விழிப்புணர்வூட்ட 2015 முறை "கேன்' (ஸ்ரீஹய் - முடியும்) என்ற ஆங்கில வார்த்தை எழுதி பிரதமருக்கு அனுப்பியது, 50 மணி 15 நிமிடங்கள் தொடர்ந்து 2014 மருத்துவக்குறிப்புகளை 2014 அடிதாளில் எழுதியது, 2014 -ஆம் ஆண்டு 2014 தபால்அட்டைகளில் 2014 பேருக்கு முழு உடல்தான விழிப்புணர்வூட்டி, ஆசிரியர் தினத்தன்று திருத்தணியில் முன்னாள் ஜனாதிபதி டாக்டர். இராதாகிருஷ்ணன் பயின்ற பள்ளியில் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் வைத்து அனுப்பியது, 24 மணி நேரம் தொடர்ந்து 1 நிமிடம் நேர்மறையாகவும், 1 நிமிடம் எதிர்மறையாகவும் பேசும் "டேன்கோர்ட்' நிகழ்ச்சி நடத்தியது, 1000 நிமிடங்கள் 1000 தலைப்புகளில் தொடர்ந்து பேசியது, 12 மணி நேரம் தொடர்ந்து 12 தலைப்புகளில் தனி நபர் பட்டிமன்றம் நடத்தியது , மகளின் பிறந்த நாளையொட்டி 100 வரிகளில் கவிதை என முதல் வரியில் ஓரெழுத்து, இரண்டாம் வரியில் இரண்டெழுத்துக்கள் என நூறாம் வரியில் 100 எழுத்துக்கள் என எழுதி 5050 எழுத்துக்களில் கவிதை பிரமீடு அமைத்தது போன்ற பல சாதனைகளைப் படைத்துள்ளார்.
 கோகுலராஜின் சாதனைகளைப் பார்த்து, மனைவி, மகள், மகன் சாதனைகள் படைக்கத் தொடங்கினார்கள்.
 கோகுலராஜ் தனது பள்ளி மாணவர்களைக் கொண்டு 2007 ஆம் ஆண்டு இயக்கி நடித்த "சமுதாய சிற்பிகள்' குறும்படம் சிறந்த தன்னம்பிக்கையூட்டும் படத்திற்கான விருதையும் பெற்றுள்ளது.
 8 வயது முதலே மிமிக்ரி செய்து வரும் கோகுல் அதன்மூலம் கிடைத்த வருவாயை கார்கில் நிதி, ஒரிசா புயல் நிவாரண நிதி, குஜராத் பூகம்ப நிவாரண நிதி மற்றும் சுனாமி நிவாரண நிதிக்காகவும் வழங்கியுள்ளார். தொழிலால் கோகுல் ஓர் ஆசிரியர். ஆர்வத்தால் கவிஞர், பேச்சாளர், எழுத்தாளர், சுய முன்னேற்ற பயிற்சியாளர், மிமிக்ரி மற்றும் டப்பிங் கலைஞர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகங்களை உருவாக்கி கொண்டவர். கோகுல் மருத்துவப் படிப்பிற்காக தனது உடலை தானம் செய்திருப்பவர். அதுமட்டுமல்ல 1000க்கும் மேற்பட்டோரை உடல்தானம் செய்ய வைத்துள்ளார். ஆசிரியர்பணியில் முதன்முதலாகச் சேர்ந்த தினத்தை ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்கு விருந்து மற்றும் பரிசுகள் வழங்கி கொண்டாடி வருகிறார்.
 கோகுலராஜின் மனைவி புவனா அதிகநேரம் தொடர்ந்து கேரம் விளையாடியது, 24 மணி நேரம் தொடர்ந்து காகித கைவினைப் பொருட்கள் செய்தது, 21 நிமிடங்களில் 365 ஹைக்கூ கவிதைகளை வாசித்தது, 2018 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் முன்னிட்டு 2018 ஐஸ்குச்சிகளில் ஆயிரம் கிறிஸ்துமஸ் தாத்தா ஓவியத்தை 30 மணி நேரங்களில் வரைந்தது உட்பட 5 சாதனைப் படைத்துள்ளார்.
 கோகுலராஜின் மகள் ஆஷிகா. 21 நிமிடத்தில் 1000 முறை நாக்கினால் தன் மூக்கை தொட்டது, தமிழக முதல்வரின் 66-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு 66 அடி நீளமுள்ள கடிதம் எழுதியது, 24 மணி நேரம் தொடர்ந்து 1000 காகித கப்பல்களை செய்தது, 1-1000 வரை எண்களை 15 நிமிடங்களில் ஆங்கிலத்திலும் தமிழிலும் கலந்து ஒப்புவித்தது, 100 முதல் ஒன்றுவரை தலைக்கீழாக ஒப்புவித்தது, கடவுளின் 100 பெயர்களை 16 நிமிடங்களின் கூறுவது, கெüரவர்கள் 100 பேரின் பெயர்களை 45 வினாடிகளில் கூறியது, 1000 அழிப்பான்களில் (ங்ழ்ஹள்ங்ழ்) பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான 1000 படங்களை வரைந்தது, தாய்மொழி தினத்தில் 12 மணி நேரங்கள் தொடர்ந்து தமிழ், தமிழ், தமிழ் என எழுதியது, எடைக்கு எடை விதைப்பந்துகளை பரிசளித்தது, ஒரே தபால் அட்டையில் 150 காந்தி படங்களை காந்தியின் 150 வது பிறந்த நாளையொட்டி காந்தி சிலையருகே நின்று 15 நிமிடங்களில் வரைந்தது உட்பட 14 சாதனைகளை படைத்துள்ளார்.
 பிரியன்ராஜ், கோகுலராஜின் மகன். 12 மணி நேரம் இடைவிடாது இரவு முழுவதும் கம்ப்யூட்டரில் கேம்ஸ் விளையாடியது, ஒரு மணி நேரத்தில் 877 புன்னகை செய்யும் படங்களை தாளில் வரைந்தது, 92 பாரம்பரிய மாடுகளின் பெயர்களை 54 விநாடிகளில் கூறியது, உலக புத்தக தினத்தன்று 108 புத்தகங்களின் பெயர்களை ஒரு நிமிடத்தில் கூறியது, எடைக்கு எடை காமராசர் குறித்த 522 புத்தகங்களை பொதுமக்களுக்கு பரிசளித்தது, காமராசரின் 116-ஆவது பிறந்தநாளையொட்டி 32 வரிகளைக் கொண்ட காமராசர் குறித்த கவிதையை 116 முறை தொடர்ந்து மனப் பாடமாக வாசித்தது, ஏகபாதாசனத்தில் நின்று திருக்குறளின் 133 அதிகாரங்களை கூறியது, ஒரே நிமிடத்தில் தன் இருபுருவங்களையும் 66 முறைகள் அசைத்தது, நெகிழி விழிப்புணர்வூட்ட 20 குரல்களில் மிமிக்ரி செய்தது, தொடர்ந்து 10 நிமிடங்கள் குதிரை ஓடும் சத்தத்தை மிமிக்ரி செய்து சாதனைகளைப் படைத்துள்ளார்.
 இந்த சாதனைக் குடும்பத்தாரின் சாதனைகள் இதுவரை தமிழ்நாடு புக் ஆப்ரெகார்ட்ஸ், ஜெட்ரி புக் ஆ ப்ரெக்கார்ட்ஸ், இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ், ஏசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ், அஸிஸ்ட்வேல்ட் ரெக்கார்ட்ஸ், ரெக்கார்ட்ரைசர்ஸ், எலைட்வேல்டு ரெக்கார்ட்ஸ் மற்றும் ஸ்டார் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் போன்ற சாதனை தொகுப்பு புத்தகங்களில் இடம் பெற்றுள்ளன.
- பிஸ்மிபரிணாமன்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com