ஆப்கானிஸ்தான் நாடோடிக்கதை: போலியான வாள்!

ஆப்கானிஸ்தான்  நாட்டு மன்னர் போருக்குத் தயாராகிக் கொண்டிருந்தான். தனது ஆயுதச் சாலை பொறுப்பாளரை அழைத்து " எதிரிகளை எளிதில் வீழ்த்துகிற வாளை தேடிப்பிடித்து எடுத்துவா' என கட்டளையிட்டான்.
ஆப்கானிஸ்தான் நாடோடிக்கதை: போலியான வாள்!


ஆப்கானிஸ்தான்  நாட்டு மன்னர் போருக்குத் தயாராகிக் கொண்டிருந்தான். தனது ஆயுதச் சாலை பொறுப்பாளரை அழைத்து " எதிரிகளை எளிதில் வீழ்த்துகிற வாளை தேடிப்பிடித்து எடுத்துவா' என கட்டளையிட்டான்.

அவன் உடனே உள்ளே போய் ஒரு வாளை எடுத்து வந்து இது உலகிலேயே அதிசயமான வாள் என்று கூறினான். அதன் வலிமையைச் சோதிக்கும் வகையில் தனது உதவியாளனின் தலையை ஒரே வீச்சில் துண்டித்து அந்த வாளை வானில் பறக்க விட்டான். 

அதிசயம் அற்புதம் என்று மகிழ்ந்தான் மன்னன். எப்போது அரண்மனைக்குள் நுழைந்த ஒரு கண் தெரியாத குருடன், "வாள் அதிசயந்தான். ஆனால் போர்க்களத்துக்குப் பயன்படாது' என்றான்.

அரசன் அந்த குருடனைப் பார்த்து "நீ யார்? இந்த வாளை ஏன் பயனற்றது என்று கூறுகிறாய்?' என்று கேட்டான். அதற்கு குருடன் "உனது ஆள் வாளை உருவி வீசியதுமே அதன் குறைப்பாட்டை நான் தெரிந்து கொண்டேன் அது உடைந்து போகக்கூடியது'  என்றான்.

அரசன் உடனே அந்த வாளை ஒரு கேடயத்தின் மீது வீசினான் வாள் உடைந்து நொறுங்கிவிட்டது. அரசன் உடனே குருடனைப் பார்த்து" நீ யார் என்ன வேலை செய்கிறாய்' என்று கேட்டான்.

"பிச்சையெடுத்து பிழைத்து வருகிறேன்' என்றான் குருடன். அரசன் அவனைப் பார்த்து "இனிமேல் பசியோடு நீ அலைய வேண்டாம். தினசரி மதியம் இங்கு வந்துவிடு உனக்கு இரண்டு ரொட்டியும், ஒரு தட்டு பருப்பு குழம்பும் தருவேன்' என்று கூறினான். நன்றி சொன்னான் குருடன்.

போருக்கு போன அரசன் வெற்றியுடன் திரும்பினான். பகைவர்களை வென்றவன் திரும்பியதும் நல்ல பெண்ணை திருமணம் செய்ய விரும்பினான். பெண் உயர்ந்த இடத்தை சேர்ந்தவளாக இருக்க வேண்டுமென்று ஆசைப்பட்டான்.

திருமணத்தின் போது அரசன் குருட்டுப் பிச்சைக்காரனைப் பார்த்தான். அவனைத்தனியே அழைத்துப் போய் தனது மனைவியைப் பற்றிய அபிப்ராயத்தைக் கேட்டான். அதற்கு குருடன் "அவள் உனக்கு நல்ல மனைவியாக இருப்பாள்.  அவள் உன்னைத் தவிர வேறு எந்த அரசனுக்கும் பொருத்தமானவள் இல்லை' என்று கூறினான்.

திருமணம் வெற்றிகரமாக நடந்தது. திருமணமான சில மாதங்கள் கழித்து ஒரு நாள் குருட்டுப் பிச்சைகாரன் சொன்னதைப் பற்றி யோசித்து ஆச்சரியப்பட்டான். தனது மனைவி வேறு யாருக்கும் பொருத்தமானவள் இல்லை. தனக்கு மட்டுமே பொருத்தமானவள் என்று கூறியதை பற்றி குருடனை அழைத்து கேட்டான். 

"பரம்பரைதான் காரணம். உன் ராணி அதிசயமான மனுஷி. அவளது தந்தை ஒரு நெசவாளி'  என்றான் குருடன். அரசன் அதிர்ச்சயடைந்தான். உடனே அமைச்சர்களை வைத்து விசாரித்ததும் அது தான் உண்மை என்று தெரிந்தது. உடனே குருடனை அழைத்து "தனது மனைவி பற்றிய ரகசியத்தை வெளியே சொன்னால் சிரச்சேதம் செய்து விடுவேன்' என்று மிரட்டி அனுப்பினான். மேலும் "எனக்கு மட்டுமே அவள் பொருத்தமானவள் என்று கூறினாய் அதன் அர்த்தம் என்ன' என கேட்டான் அரசன்.

"ஏனென்றால் நீயும் பரம்பரை அரசனல்ல. உனது தந்தை ஒரு சிறு வியாபாரி. உன்னை அரசன்,  மகனாக தத்து எடுத்து வளர்த்துள்ளான்'  என்றான். இதை கேட்டு மேலும் அதிர்ச்சியடைந்த அரசன், மீண்டும் அமைச்சர்களை இது பற்றி விசாரிக்க சொன்னான். இறுதியில் குருடன் சொன்னது தான் உண்மை என்று தெரியவந்தது. மீண்டும் குருடனை அழைத்து "எனது பிறப்பு ரகசியம் உனக்கு எப்படித் தெரியும்'  என்று கேட்டான்.

"போர் செய்வதற்கு உனக்கு அளிக்கப்பட்ட வாள் போலியானது என்பதை எடுத்துக் சொல்லி காப்பாற்றினேன். ஆனால் நீ எனக்கு என்ன வெகுமதி கொடுத்தாய்? இரண்டு ரொட்டியும் ஒரு தட்டுப்பருப்பு குழம்பும் தான். வேறொரு அரசனாக இருந்தால் பொன்னும், மணியும் அள்ளிக் கொடுத்திருப்பான். அப்போது கணித்தேன். நீ கண்டிப்பாக சிறு வியாபாரியாகத்தான் இருக்க முடியும் என்ற முடிவுக்கு வந்தேன்'  என்று குருடன் பதிலளித்தான். இதைக் கேட்டு அவமானத்தால் அரசன் தலை கவிழ்ந்தான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com