நல்ல சினிமாவைத் தவிர எதுவும் தெரியாது!

ஒரு போன் செய்தால் ""தம்பி, செüக்கியமா?'' என்கிற அளவுக்கு எளிமை. எப்படி இருக்கீங்க.. என்று கேட்டால், அடுத்த நொடி நிச்சயமில்லை தம்பி. இந்த நொடி தீவிரமா, ஆழமா, சந்தோஷமாக இருக்கிறேன்.
நல்ல சினிமாவைத் தவிர எதுவும் தெரியாது!

ஒரு போன் செய்தால் ""தம்பி, செüக்கியமா?'' என்கிற அளவுக்கு எளிமை. எப்படி இருக்கீங்க.. என்று கேட்டால், அடுத்த நொடி நிச்சயமில்லை தம்பி. இந்த நொடி தீவிரமா, ஆழமா, சந்தோஷமாக இருக்கிறேன். பெரிய கண்கள் விரிய வரவேற்கிறார் ராம். தான் இருந்தால் அது நல்ல சினிமா என்கிற அளவுக்கு ஒரு நம்பிக்கை விதைத்திருப்பது ராமின் அசாத்தியம். 

என்ன.. அடுத்தடுத்துத் தொடர்ச்சியாகப் பார்க்க முடிவதில்லை...?

இதோ திரும்ப வந்து விட்டேன். பெரும் நம்பிக்கையோடு வருகிறேன். இந்த வாழ்க்கைக்கு நடுவே எப்போது அன்பும், பரிவும் நிரந்தரம். இன்னொரு இடம் கதையில் இருகிறது... அதுதான் என் இடம். 

வலிமை தரும் பகுதி. இன்னும் அறுந்து போகாத வாழ்க்கையைத் துப்பறிவது போன்று வந்திருக்கிறது.  தாத்தாவுக்கும், மகள் வழி பேரனுக்குமான அன்புதான் அது. உறவின் மிச்சத்தையும், எச்சத்தையும், அதன் உச்சத்தையும் சொல்லுவதாக இருக்கும். இயக்குநர் செல்வக்கண்ணன். படத்தின் பெயர் "நெடுநல்வாடை'.  அன்பு, காதல்,  காதலின் வேறு ஒரு பரிமாணம் காட்டுகிற படம் அது. எல்லாருக்குமான கதை அது. வைரமுத்து பாடல் எழுதி தந்து நிரப்பியிருக்கிறார். இந்த வாரம் படம் திரைக்கு வருகிறது. 

பொதுவாகச் சினிமாவில் ஹிட் ஆனவர்கள், அடுத்தடுத்த ஃபார்மெட்டில் பயணமாவார்கள்... நீங்கள் மட்டும் விடாப்பிடியாக இருப்பது போல் தெரிகிறது...?

""நல்ல சினிமாவைத் தவிர எதுவும் தெரியாது. சினிமா நான் விரும்பி வந்த இடம் இல்லை. முற்போக்கு எழுத்தாளர் உள்ளிட்டப் பல்வேறு அமைப்புகளில் பங்காற்றி வந்தவன் நான். இயக்குநர் சசி சாருக்கு நன்றி. அவர்தான் விடாப்பிடியாக அழைத்து வந்தவர். பொதுவாக, சினிமாவில் ஹிட் ஆனவர்கள் ஒரே ஃபார்மெட்டில் பயணமாவார்கள்.  மாற்றுச் சிந்தனையை அமுக்கி விடுவார்கள். ஆனால்,  ஐந்து வருஷத்துக்கு ஒரு முறையாவது புதிய சிந்தனைகள் அடித்துக் கொண்டு மேலே வரும். இதை ஏதோ பெரிய படம் தோல்வி, சின்னப் படம் வெற்றி என்று நான் பார்க்கவில்லை. இது புதிய சிந்தனைகளின் வெற்றி. மக்களின் ரசனையைப் புரிந்து, காலத்துக்கு ஏற்ற மாதிரி சினிமா மாற வேண்டும். இது வரவேற்கப்பட வேண்டிய விஷயம். அதை எதிர்க்கும் விஷயமும், தடுக்கும் விஷயமும் கண்டிப்பாக நடக்கும். இங்கு கதாநாயகன் அரசியல் என்பது தொடர்ந்து வருகிறது. அதையும் தாண்டி இளைஞர்கள் வர வேண்டும். ஏனென்றால், இன்றைக்கு இருக்கிற நல்ல நடிகர்கள் அத்தனை பேரும் இந்த மாதிரி எதிர்ப்பைத் தாண்டி வந்தவர்கள்தான்.

தம்பி ராமையா, நான் கடவுள் ராஜேந்திரன் மாதிரி... ஏன் நீங்கள் நடிக்கக் கூடாது...?

அதற்காக நான் வரவில்லை. பணம் சம்பாதிப்பது என் நோக்கமல்ல. நீ இப்படித்தான் வாழ வேண்டும் என யாராவது சொன்னால், அதற்கு நேர் எதிர் திசையில் நடப்பதே என்னுடைய இயல்பாகி விட்டது. இதனால் நிறையத் தவறுகள் செய்திருக்கிறேன். மறக்க முடியாத ரணங்களைச் சந்தித்து இருக்கிறேன். வாங்கிய ஒவ்வொரு அடியிலும் வாழ்க்கை மீது நம்பிக்கைதான் வந்திருக்கிறது. மாறாக, பயம் வந்திருந்தால் காசு சேர்க்கிற புத்தி வந்திருக்கும், அதனால்தான் இந்த நொடி வாழ்க்கையைக் கூட சரியாக வாழ்ந்திட வேண்டும் என்று ஆழமாக இருக்கிறேன். 

எல்லா கேரக்டரிலும் நடிக்கிற மல்டி பெர்சனாலிட்டி ஆர்ட்டிஸ்ட் அடுத்து வரவே இல்லை, என்கிற ஒர் ஆதங்கம் இங்கே இருக்கிறதே...?

நிறைய பேர் அந்த இடத்தை நோக்கி வந்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். நிறைய தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டுகள் புதிதாக உள்ளே வருகிறார்கள். சில உயரங்களைத் தொடும்போது இழப்பதும் அதிகமாக இருக்கும். அதற்கு நடிகர்கள் தயாராக இருக்க வேண்டும். எனக்கும் அந்த இடம்தான் ஆசை. என் முகம் எல்லோருக்கும் தெரிகிறது. என்னை நம்பினால், இவர் கதைக்குத் துணையாக இருப்பார்  என்று இயக்குநர்கள் நம்புகிறார்கள். இதுதான் அந்த இடத்துக்கு என்னைக் கொண்டு செல்லும் விஷயம். நடிகன் என்பதை விட, இந்த இடத்தில் இருக்கும் நடிகன் என்ற பெயரே முக்கியமானது. சிலர் பார்த்த முகமாக இருக்கே என்று சிலர் யோசிக்கிறார்கள். இதனால் நான் இழந்த வாய்ப்புகள்தான் அதிகம். அதனால் "நல்ல கேரக்டர் என்றால் நான் நடித்துத் தருகிறேன்' என்று நான் கத்திச் சொல்ல வேண்டி இருக்கிறது.   இன்னும் வாய்ப்புகளுக்காகச் சுற்றி வர வேண்டியிருக்கு என்று சொல்ல வருகிறீர்களா..நான் மட்டும் அல்ல, எந்த ஒரு நடிகனின் எதிர்காலமும் உத்தரவாதமாக இருக்க வேண்டும் என்றால், அது யார் கையில இருக்கிறது தெரியுமா? எப்படியாவது வெற்றிப்படம் தர வேண்டும் என்ற வெறியோடு கதை தயார் செய்கிற உதவி இயக்குநர், ஒரு கேரக்டரை யோசிக்கும்போது, "பூ' ராம் மாதிரி  என நினைத்து கதை செய்கிறார்.... அவர் கையில் இருக்கிறது. அப்படி யாராவது யோசிக்கிற வரைக்கும் நடிகனாக எனக்கு எந்தக் குறையும் வராது. உதவி இயக்குநர்கள் சிந்தனையில் நான் இல்லாமப் போய் விட்டால், இன்னொருத்தர் அந்த இடத்துக்கு வந்து விட்டால், என் பங்களிப்பு போதவில்லை என யாரும் சொல்லாமலேயே எனக்குப் புரிந்து விடும். சம்பளம் பற்றி நான் யோசிக்கவே இல்லை. அந்த மாதிரி ஒரு கதை கிடைத்தால் போதும். முழு மனதோடு  போய் நிற்பேன்.  அந்த மனநிலையை என்றைக்கும் நான் தொலைக்க மாட்டேன்.

சினிமா கனவோடு இருக்கும் ஆயிரமாயிரம் இளைஞர்களுக்கு உங்க அறிவுரை என்ன...?

அறிவுரை சொல்கிற  அளவுக்கு நான் இன்னும் சினிமாவைக் கற்றுக் கொள்ளவில்லை.  ஆனால், ஒரு விஷயத்தை மனதில் வைத்துக் கொள்ளலாம். "தூங்கும்போது வருவது கனவு இல்லை. உன்னைத் தூங்கவிடாமல் செய்வதுதான் கனவு' என்று அப்துல் கலாம் சொல்லிருக்காரே... சினிமா வெறும் ஆசையாகவோ, கனவாகவோ மட்டும் இருந்தால் போதாது.  இது அறிவுரை இல்லை. என் அனுபவம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com