கனடா குடியுரிமை மறுத்த ரஹ்மான்

அமெரிக்கா, கனடா என்று பல்வேறு நாடுகளில் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறார்.
கனடா குடியுரிமை மறுத்த ரஹ்மான்


அமெரிக்கா, கனடா என்று பல்வேறு நாடுகளில் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறார். இதனால் சுமார் 2 ஆண்டு அவர் படங்களில் இசை அமைக்காமல் தவிர்த்து வந்தார். அந்த நிலைமை கடந்த ஆண்டு மாறியது. மீண்டும் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன் கனடாவின் மேயர்,
ரஹ்மானுக்குத் தங்கள் நாட்டின் குடியுரிமையை வழங்க முன்வந்தார். ஆனால் அதை ஏ.ஆர்.ரஹ்மான் ஏற்க மறுத்து விட்டார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த ரஹ்மான்,""கனடா நாட்டின் மேயர் எனக்குக் குடியுரிமை தர முன்வந்ததற்கு நன்றி. அதற்காக கடமைப்பட்டுள்ளேன். ஆனால் தமிழ்நாட்டில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் கனடா மேயருக்குக் கடமைப்பட்டவனாக உள்ளேன். இந்தியாவில்தான் எனது குடும்பம், நண்பர்கள், உறவினர்கள் இருக்கின்றனர். நீங்கள் இந்தியா வந்தால் எங்கள் இசை பள்ளிக்கு வருகை தாருங்கள். இந்தியாவும், கனடாவும் இணைந்து இசை நிகழ்ச்சிகளை அதிகம் வழங்க ஆர்வமுடன் இருக்கிறேன்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com