Enable Javscript for better performance
360 டிகிரி- Dinamani

சுடச்சுட

  

  மை சர்ச்சை
  தேர்தலில் ஓட்டுப் போடுபவர்களின் விரலில் அடையாள மை வைக்கப்படுகிறது. மைசூரில் உள்ள ஒரு நிறுவனம் இந்த மையைத் தயாரிக்கிறது. சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தல்களுக்குப் பிறகு இந்த மை பற்றிப் பல புகார்கள் வந்தன. அந்த மை வைத்த சில மணி நேரங்களில் அழிந்து விடுகிறது. நெயில் பாலிஷை அகற்றுவதற்குப் பயன்படுத்தும் ரசாயனத்தை உபயோகித்து அதை அழிக்க முடிகிறது என்பது போல புகார்கள். அந்த மை தயாரிப்பு நிறுவன அதிகாரி இதற்குப் பதில் சொல்கிறார்: "நாங்கள் பல ஆண்டுகளாக இந்த மையை சப்ளை செய்கிறோம். இது வரை எந்தப் புகாரும் வரவில்லை. இந்தத் தேர்தலுக்கு 25 லட்சம் பாட்டில்களை சப்ளை செய்தோம். இந்தியா தவிர இங்கிலாந்து, துருக்கி, தென் ஆப்பிரிக்கா, டென்மார்க், மலேசியா போன்ற நாடுகளுக்கும் இந்த மையை சப்ளை செய்கிறோம்'' என்றார். 
  -அனிதா ராமச்சந்திரன், பெங்களூரு
  சார்ஜா.. அதிசயம்!
  ✽ யுனைடெட் அரபு எமிரேட்ஸின் தலைநகரான சார்ஜாவில் முந்நூறுக்கும் அதிகமான பள்ளிவாசல்கள் உள்ளன. இருந்தும் அவற்றில் மூன்றில் மட்டுமே பார்வையாளர்களுக்கு அனுமதி!
  ✽ எந்த இடத்துக்குப் போனாலும் அங்கு நீங்கள் சந்திக்கும் மூவரில் ஒருவர் இந்தியர்!
  ✽ சார்ஜாவில் ஆர்ட் பவுண்டேஷன் என்று ஓர் இடம் உள்ளது. இதனுள் மழை அறை உள்ளது. இங்கு அனுமதி கட்டணம் செலுத்தி உள்ளே சென்றால் பத்து நிமிடம் நடக்கலாம். அப்போது மழை கொட்டும். ஆனால் நாம் நனையமாட்டோம். இதனைப் படமாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
  நாட்டியங்கள்!
  ✽ கதகளி - கேரளா சார்ந்தது. ஏகப்பட்ட மேக்அப் வித்தியாசமான ஆடை அணிவார்கள்.
  ✽ பரதநாட்டியம் - தென்னிந்தியா சார்ந்த நடனம் என கூறப்பட்டாலும், தாயகம் தமிழகம் தான்.
  ✽ கதக் நடனம் - வட இந்தியாவில் கதாகாரா மற்றும் கதை சொல்லிகள், பாட்டுப்பாடி ஆட்டமாடி விளக்கும் நடனம்.
  ✽ பிகு நடனம் - அஸ்ஸாமின் நாட்டுப்புற நடனம்.
  ✽ மோகினியாட்டம் - கேரளாவின் மற்றொரு நடன வகை. பெண்கள் மட்டும் ஆடும் கிளாசிகல் டான்ஸ் இது. 
  -ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன்
  பிரியங்கா காந்திக்கு இந்தி, ஆங்கிலம், இத்தாலி, ஸ்பானிஷ், ரஷ்யன், ஜெர்மன், பஞ்சாபி மொழிகள் அறிந்தவர். ஓவியம் வரைதல், கவிதை எழுதுவது மற்றும் குதிரை சவாரி செய்வது இவரது பொழுது போக்கு. இவர் வீர விளையாட்டுக் கலையில் ஊதா பெல்ட் வாங்கியவர். 
  -க.ரவீந்திரன், ஈரோடு
  முன்னேறுங்கள்! (A இலிருந்து Z வரை)
  ✽ Affirm: உங்களுக்கு நீங்களே உறுதி சொல்லிக் கொள்ளுங்கள். அடித்துச் சொல்லிக் கொள்ளுங்கள். என்னால் முடியும் என்று. 
  ✽ Believe:  நம்பிக்கை. உங்கள் இதயத்தில் பெரிய லட்சியம் நிறைவேறப் போகிறது. எப்படியாவது எங்கேயாவது, யார் மூலமாகவாவது நிச்சயமாய் நிறைவேறப் போகிறது என்று நம்புங்கள். 
  ✽ Commit: காரியத்தில் இறங்குங்கள். தோல்வி ஏற்பட்டு விடுமோ என்ற பயத்தினால் பலர் ஒரு காரியத்தில் இறங்காமலே ஒதுங்கி விடுகிறார்கள். 
  ✽ Educate: ஒரு விஷயத்தைப் பற்றி முழுவதுமாக அறிந்து கொள்ளுங்கள். குறுக்கு வழி தேடாதீர்கள். பயிற்சி பெறுவதும் தெரிந்து கொள்தும் கஷ்டமான விஷயம் தான்
  ✽ Dare: சவால் விடுங்கள். துணிச்சலுடன் முயற்சி செய்யுங்கள். 
  ✽ Find: தேடுங்கள். தேடிக் கண்டுபிடியுங்கள். கடவுள் எல்லாவற்றையும் உரித்த வாழைப்பழமாக வைக்கவில்லை. 
  ✽ Give: கொடுங்கள். கொடுக்கும் மனப்பான்மை தான் வெற்றியின் ரகசியம்.
  ✽ Hope: நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்யுங்கள். 
  ✽  Imagine: எந்தப் பிரச்னையையும் ஜெயித்து விட்டதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். உங்களை விடப் பிரச்னை பெரிதல்ல.
  ✽ Junk: நம்பிக்கை உங்கள் உள்ளத்தில் இடம் பெற வேண்டுமானால் ஏற்கெனவே அங்கே நீங்கள் சேர்த்து வைத்துள்ள குப்பைகளை வெளியே போட்டுவிடுங்கள்.
  ✽ Knock: சோர்வு மனப்பான்மைக்கு ஒரு குத்து. இது நடக்காது என்ற எண்ணத்துக்கு ஒரு குத்து
  ✽  Laugh: சிரியுங்கள். நகைச்சுவை உணர்வோடு இருங்கள். உங்களைப் பார்த்து நீங்களே சிரிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
  ✽ Make: செய்யுங்கள். அது நடைபெறும்படி நடத்திக் காட்டுங்கள். இந்த வேலையை உன்னால் செய்ய முடியுமா என்று ஒருவர் கேட்டால், செய்து காட்டுங்கள். 
  ✽ Negotiate: வளைந்து கொடுங்கள். விட்டுக்கொடுங்கள். உங்கள் இஷ்டப்படியே சகலமும் நடக்காது.
  ✽ Overlook and overcome: கண்ணை மூடிக் கொள்ளுங்கள். சமாளியுங்கள். அடுத்தவரிடம் உள்ள குறைகளைக் கண்டுக்கொள்ளாதீர்கள்.
  ✽ Persevere: விடா முயற்சி அவசியம். சோர்ந்து போகாதீர்கள். தளர்ச்சி அடையாதீர்கள்.
  ✽ Quit: விட்டு விடுங்கள். நீங்கள் நினைத்தபடி வாழ்க்கை அமையவில்லை என்று முனகுவதை விட்டுவிடுங்கள்
  ✽ Re organise: உங்கள் வாழ்க்கையை அவ்வப்போது மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள். காலம் மாறிக் கொண்டிருக்கிறது.
  ✽ Share: பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் வெற்றி, புகழ், பெருமை இவற்றில் மற்றவர்களுக்கு நியாயமாக என்ன கிடைக்க வேண்டுமோ அவைகளை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
  ✽ Trade off: இன்று ஒன்று உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. ஏற்கெனவே உள்ள ஒன்றை விடத் தெரிந்திருக்க வேண்டும். 
  ✽Unlock: திறந்து விடுங்கள் உள்ளத்தை. அன்பு, இரக்கம், நம்பிக்கை முதலிய குணங்கள் உங்கள் உள்ளத்திலிருந்து வெள்ளமாய் கொட்டட்டும். 
  ✽ Visualize: உங்கள் ஆசை எதுவோ, அதை மனக்கண்ணால் கற்பனை செய்து பாருங்கள்.
  ✽ Work: உழைப்புக்கு மிஞ்சி எதுவும் கிடையாது. உழைப்பு இல்லாமல் எதுவும் இல்லை.
  ✽X-ray: உங்கள் மனதை எக்ஸ்ரே எடுத்துப் பாருங்கள். என்னுடைய லட்சியம் என்ன? அதை அடைவதற்கு நான் இப்போது கடைப்பிடிக்கும் வழி சரிதானா என்று யோசியுங்கள்.
  ✽ Yield: அர்ப்பணம். உங்கள் வாழ்க்கையையும் பிரச்னையையும் இறைவனுக்கு அர்ப்பணம் செய்யுங்கள்.
  ✽ Zip it up: சமாளியுங்கள். இதுவரை சொன்னவற்றைக் கடைப்பிடித்து உங்கள் லட்சியங்களை எக்ஸ்ரே செய்து பார்த்து எல்லாக் காரியங்களிலும் கடவுளுக்கு அர்ப்பணமாகச் செய்தால் எதையும் வெற்றி கொள்ளலாம். 
  ராபர்ட் எச். ஷுல்லர் கூறிய அறிவுரைகள்
  "அறிஞர்களின் அமுத மொழிகள்' - நூல்
  -எல். நஞ்சன், முக்கிமலை

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai