360 டிகிரி
By DIN | Published On : 26th May 2019 08:07 AM | Last Updated : 26th May 2019 08:07 AM | அ+அ அ- |

இஸ்ரேல் நாட்டில் புத்தாண்டு செப்டம்பர் மாதம் தொடங்கும். இவர்களுடைய 12 மாத பெயர்களில் ஒன்றின் பெயர் "சிவன்'.
-பரத், சிதம்பரம்
நாணயத் தகவல்கள்
1996-இல் இலங்கை அணி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற போது, அந்நாட்டு அரசு ஆயிரம் ரூபாய் நாணயத்தை வெளியிட்டது.
நாணயங்களில் மிக அழகான வேலைப்பாடுகளைக் கொண்டவை இங்கிலாந்து நாணயங்கள்.
-ஜோ. ஜெயக்குமார், சிவகங்கை
சுல்தானா என அழைக்கப்படும் பழம் உலர் திராட்சை
-பொ.பாலாஜி, அண்ணாமலைநகர்
பிஸ்கட்
பிஸ்கட் என்ற சொல் பிரெஞ்சு சொல். இதற்கு இரண்டு முறை சுடப்பட்டது என்று பொருள்!
-போளூர் சி.ரகுபதி
உலகிலேயே மிக வேகமாகப் பேசக்கூடிய மொழி பிரெஞ்சு மொழி. நிமிடத்திற்கு சுமார் 350 சொற்கள்.
உலகிலேயே சங்கம் வைத்து மொழி வளர்த்த இரு மொழிகள் பிரெஞ்சு, தமிழ்
-எல்.நஞ்சன், முக்கிமலை
நாம் அன்றாட வாழ்க்கையில் நாம் எதிர்பாராத நிகழ்வுகள் எவ்வளவோ நடக்கின்றன அல்லவா? அண்மையில் எனக்கு நடந்த நிகழ்வு இது. பழைய பேப்பர் வாங்குபவர்கள் பலர் எங்கள் தெருவில் பேப்பர்.. பேப்பர் என்று கூவிக் கொண்டு சைக்கிளில் போவார்கள். ஒரு நாள் அப்படி கூவிக் கொண்டு போனவரை நான் கூப்பிட்டேன். அவரும் வந்தார். அவர் என் பக்கத்தில் வந்ததுமே குப்பென்று மதுவின் நாற்றம்! நான் பழைய பேப்பர்களைக் கொண்டு வந்து அவரிடம் கொடுத்தேன்.
அவர் அவைகளைத் தன் எடை மெஷினில் எடைப் போட்டு பார்த்துவிட்டு சார் 2 கிலோ இருக்கு. நான் உங்களுக்கு 20 ரூபாய் கொடுக்கணும். ஒரு பத்து நிமிஷம் பொறுங்க. பணம் கொண்டு வந்து தரேன் என்று சொல்லிவிட்டு அந்தப் பழைய பேப்பர்களை தன் சைக்கிளில் வைத்துக்கொண்டு போய்விட்டார். இந்த ஆள் எங்கே திரும்பி வரப் போகிறார்? நம்முடைய பேப்பர் வேறொரு பழைய பேப்பர் கடையில் விற்றுவிட்ட அந்தப் பணத்துக்குக் குடித்துவிடுவார் என்று நான் நினைத்தேன். ஆனால், அந்த நபர் சரியாகப் பத்து நிமிஷத்துக்குப் பிறகு அவர் என்னிடம் பணத்தைக் கொண்டு வந்து கொடுத்துவிட்டார். ஆச்சரியமாக இருந்தது!
-அனிதா ராமச்சந்திரன்
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G