ஹிந்தியில் ரீமேக்L அமலாபால் வேடத்துக்கு ஆள் இல்லை 

அமலா பால் நடித்த "ஆடை' படம், சில மாதங்களுக்கு முன் திரைக்கு வந்தது. இதில் ஆடை இல்லாமல் நிர்வாணமாக அவர் நடித்திருந்தார். இது பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானது.  

தற்போது இப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய உள்ளனர். "ஆடை' படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையைத் தயாரிப்பாளர் முகேஷ் பட் வாங்கி உள்ளார். தமிழில் இப்படத்தை இயக்கிய ரத்னகுமார் ஹிந்தி ஆடை படத்தையும் இயக்க உள்ளார். 

தமிழில் அமலாபால் நடித்துத் துணிச்சலான காட்சிகளில் நடிப்பதற்குப் பொருத்தமான ஹிந்தி நடிகையைப் படக்குழு தேடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் கங்கனா ரனாவத் அமலாபால் வேடம் ஏற்று நடிக்க இருப்பதாகத்தகவல் பரவியது. ஆனால், இதைக் கங்கனா தரப்பு மறுத்திருக்கிறது. அமலாபால் போல் என்ன, அதற்கு மேலும் நடிப்பதற்கு நடிகைகள் இருக்கிறார்கள் விரைவில் ஹீரோயின் பற்றி முடிவு செய்வோம் என ஆடை பட தரப்பினர் கூறுகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com