கதாநாயகிகள் மாறிவிட்டார்கள்!: - நிவேதா பெத்துராஜ்

"ஒரு நாள் கூத்து' படம் மூலம் தமிழுக்கு அறிமுகமான நிவேதா பெத்துராஜ் மதுரைப் பொண்ணு. இப்போது விஜய் சேதுபதியின் "சங்கத் தமிழன்', "அயர்ன் மேன்', "கேப்டன் அமெரிக்கா', "ஸ்பைடர்-மேன்' என அவர் நடிக்கும் 
கதாநாயகிகள் மாறிவிட்டார்கள்!: - நிவேதா பெத்துராஜ்

"ஒரு நாள் கூத்து' படம் மூலம் தமிழுக்கு அறிமுகமான நிவேதா பெத்துராஜ் மதுரைப் பொண்ணு. இப்போது விஜய் சேதுபதியின் "சங்கத் தமிழன்', "அயர்ன் மேன்', "கேப்டன் அமெரிக்கா', "ஸ்பைடர்-மேன்' என அவர் நடிக்கும் படங்களின் எண்ணிக்கை நீள்கிறது.


தற்காப்புக்கலை கற்றுள்ளீர்களாமே உண்மையா? 

ஆமாம் எனக்குத் தற்காப்புக் கலை தெரியும். தாய்லாந்தில் இது சம்பந்தமாக இரண்டு ஆண்டு படித்திருக்கிறேன். பாக்ஸிங் நன்றாகத் தெரியும். அதனால் என் உடம்பு எப்போதும் ஃபிட்டாக இருக்கும். தற்காப்புக் கலை, பாக்ஸிங்... இதெல்லாம் கற்றுக் கொண்டதால் மைண்ட் கன்ட்ரோல் என்னிடம் அதிகமாக இருக்கும். நான் கற்றுக் கொண்ட தற்காப்புக் கலை "டிக் டிக் டிக்' படத்தில் நடிக்கும்போது எனக்குப் பெரும் உதவியாக இருந்தது. ஏனென்றால் படத்தில் நிறையக் காட்சிகளில் கயிற்றில் தொங்கிக் கொண்டேதான் நடித்தேன். 

படப்பிடிப்புக்கு உள்ளே போனால் வெளியே வருவதற்கு ஒருநாள் முழுக்க ஆகி விடும். ஹாலிவுட் தரத்துல செட் போட்டிருந்தார்கள். தினமும் காலையில் படப்பிடிப்புக்குப் போகும்போது உற்சாகமா இருக்கும். ஏனென்றால், "இன்டர்ஸ்டெல்லர்' என் ஃபேவரைட் படம். அந்த மாதிரி ஒரு படத்துல நடிக்கிறோம்னு சந்தோஷம் ஷூட்டிங் முடியுற வரை இருந்தது. ஜெயம் ரவி எப்போதுமே வித்தியாசமான கேரக்டர்களில் ஆர்வம் உள்ள நடிகர். இந்தப் படத்தில் எனக்குதான் ரோப் கட்டித் தொங்குவது புது அனுபவமாக இருந்தது. ஆனால், ரவி அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளாமல் , சுலபமாக நடித்துக் கொடுத்தார். நான் நிறைய டேக் வாங்கினால் கூட, அவர் கொஞ்சம்கூட முகம் சுளிக்காமல் நடித்தார். அவரைச் சுத்தி எப்பவும் பாஸிட்டிவ் எனர்ஜி இருக்கும். அது, எங்க டீம் முழுக்கப் பிரதிபலிக்கும். இப்படி நான் வளர்ந்து வந்த விதம், என் தைரியம் எல்லாமும் எனக்குச் சினிமாவில் பெரு உதவியாக இருக்கிறது. 

அடுத்து ஹாலிவுட் சினிமாவில் நடிப்பதாக செய்தி....

நான் நிறைய ஹாலிவுட் படங்கள் பார்ப்பேன். அவற்றையெல்லாம் பார்க்கும்போது, நானும் இந்த மாதிரி படங்களில் நடிக்க ஆசைப்படுவேன். அந்த ஆசையை இந்தப் படம் எனக்குப் பூர்த்திச் செய்து வைத்திருக்கிறது.   தமிழ் சினிமாவில் நடிக்கிற ஹீரோயின்ஸ் இப்போ ரொம்பவே மாறி விட்டார்கள்.

படத்தில் நடிக்கும்போது, அவர்களுக்கு முக்கியத்துவம் இருக்கிறதா என்று பார்க்கிறார்கள். திரைக்கதை வாங்கி முழுமையாகப் படிக்கிறார்கள். சம்பளத்தை மட்டுமே பிரதானமாகப்  பார்ப்பதில்லை. . நல்ல கேரக்டர்கள்தான் முக்கியம் என்று நினைக்கிறார்கள். என்னைப் பொருத்தவரை இந்தநாள் வரைக்கும் எந்தத் தவறான விஷயங்களுக்காகவும் சினிமாவில் யாரும் என்னை அணுகியதில்லை.  ஹாலிவுட் படங்களில் எப்படியாவது நடித்துவிட வேண்டும் என்ற  ஆசை நிறைவேறும் விதமாக இப்போது வாய்ப்பு வந்துள்ளது. "அயர்ன் மேன்', "கேப்டன் அமெரிக்கா', "ஸ்பைடர்-மேன்', "அவெஞ்சர்ஸ்' படங்கள் இடம்பெறும் தொடரான மார்வெல் சினிமாட்டிக் யூனிவெர்சின் புதிய ஒரு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.   

குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவது குறித்து வீடியோ வெளியிட்டது பற்றி... 

நான் கேள்விப்பட்ட வரை, நிறையப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள் என்று தெரிந்தும், அதைக் கண்டுக் கொள்ளாமல் இருக்கிறார்கள். வெளியே சொல்ல பயப்படுகிறார்கள். அதனால்தான், அந்த வீடியோவை நான் வெளியிட்டேன். பார்த்து விட்டு பலபேர் எனக்கு நன்றி சொன்னார்கள். 

நாம் சொல்லுவது வெளியே பேசப்படுகிறது என்றாலே அது சந்தோஷம்தானே.. என் பெற்றோர் ரொம்பவே துணையாக இருந்தார்கள்.  தவிர, அந்த வீடியோவைப் பார்த்த சிலர், நான்தான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி விட்டேன் என நினைத்து செய்தி வெளியிட்டிருந்தார்கள். நான் அந்த வீடியோ வெளியிட காரணம், குழந்தைகளுக்கான பாதுகாப்பைப் பற்றிப் பேசுறதுக்கு, எனக்கு சரியான வாய்ப்பு கிடைக்காததுதான். கிடைக்கும்போது, கண்டிப்பாகக் குழந்தைகள் பாதுகாப்புக் குறித்துப் பேசுவேன். 

மாடலிங், சினிமாவிலிந்து கற்றுக்கொண்டது என்ன?

எப்போதும் எல்லோரிடமும் கனிவாக இருக்க வேண்டும். எல்லோருக்கும் மரியாதை கொடுக்க வேண்டும். எதையும் சரியாக செய்ய வேண்டும். ஆனால், ரிசல்ட் பற்றி எந்த எதிர்பார்ப்பும் வைத்துக் கொள்ளக் கூடாது. தினமும் நிறைய ஏமாற்றங்கள் கிடைக்கலாம். உன் முகம் சரியில்லை. உனக்கு நடிக்க வரலை, ஹீரோயினாக நீ ஜெயிப்பது கஷ்டம் என்று என் முகத்துக்கு முன்பே நிறையப் பேசினார்கள். அதில் உள்ள முக்கியமான விஷயங்களை எடுத்துக் கொண்டு மற்றவற்றைக் கண்டுகொள்ளக் கூடாது. வருடத்தில் ஒரு மாதம் பெய்கிற மழைதான், மீதி பதினொரு மாதத்துக்கும் தண்ணீர் கொடுக்கும். அப்படி அவ்வப்போது கிடைக்கும் பாராட்டுக்களை மட்டும் வைத்து, எதையும் தாண்டி வந்து விட வேண்டும்.

தமிழ்ப் பெண்களுக்குத் தமிழ் சினிமாவில் முக்கியத்துவம் இல்லை... என்ற கருத்து இப்போதும் பரவலாக இருக்கிறதே...

சின்ன வயதில் இருந்தே சினிமா ரொம்பப் பிடிக்கும். ஆனால், நான் நடிகை ஆவேன் என்று நினைத்தது இல்லை. பத்து ஆண்டுகள் வெளிநாடு வாழ்க்கை வேறு மாதிரியாக இருந்தது. தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சித் தொகுப்பாளாராகப்  பணியாற்றினேன். அங்கே நிகழ்ச்சி தயாரிப்பு வரை எல்லாவற்றையும் கற்றுக் கொண்டேன். அப்போதுதான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசை வந்தது. பொழுதுபோக்காக மாடலிங் செய்ய ஆரம்பித்தேன். 

நிறைய விளம்பர படங்களில் நடித்தேன். அப்போதிலிருந்து எனக்கு கேமிரா பழகி விட்டது. 

தமிழில் "ஒரு நாள் கூத்து'  பட வாய்ப்பு வந்தது. அது நல்ல வெளிச்சம் தந்தது. அடுத்தடுத்து பெரிய வாய்ப்புகள். வெற்றி, தோல்வி எல்லோருக்கும் வரும். அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. இப்போது சங்கத்தமிழன் வாய்ப்பை பெரிதாக நினைக்கிறேன். எல்லாம் சரியாக அமைந்தால், எதுவும் பிரச்னை இல்லை. இன்னும் சில பட வாய்ப்புகளும் வந்திருக்கின்றன. அடுத்தச் சில வருடங்களுக்குச் சென்னையில்தான் வாசம். சந்தோஷமாக இருக்கிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com