அதிக விலையுள்ள சாக்லேட்

ஒரு கிராம் சாக்லேட்டின் விலை ரூ. 430 அதாவது பத்து கிராம் 4300 ரூ. ஒரு கிலோவின் விலை என்ன என்று கேட்டால் தலை சுற்றுகிறது.
அதிக விலையுள்ள சாக்லேட்

ஒரு கிலோ சாக்லேட் விலை நாலே கால் லட்சம் ரூபாய்!
 ஒரு கிராம் சாக்லேட்டின் விலை ரூ. 430 அதாவது பத்து கிராம் 4300 ரூ. ஒரு கிலோவின் விலை என்ன என்று கேட்டால் தலை சுற்றுகிறது.
 உலகத்தில் அதிக விலையுள்ள சாக்லேட் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த அதிக விலைக்கு காரணம்.. தங்கப் பஸ்பம் சேர்த்து தயாரிக்கிறார்களோ என்று பலரும் நினைப்பார்கள். அப்படி எதுவும் இந்த சாக்லேட்டில் இல்லை. இன்னொரு அதிசயம் உலகின் மிக அதிக விலையுள்ள சாக்லேட்டைத் தயாரித்திருப்பது இந்திய நிறுவனமான ஐடிசி.
 ஐடிசி நிறுவனத்திற்கு ஆடம்பர சாக்லேட் தயாரிப்பில் ஈடுபட வேண்டும் என்ற லட்சியம் இருந்ததினால் அதற்கென்று ஒரு பிராண்டை உருவாக்கியது. அந்த பிராண்டிற்கு "ஃபேபல் எக்ஸ்க்யூசைட்' என்ற பெயரையும் சூட்டியது. "ஃபேபல் எக்ஸ்க்யூசைட்' டின் தயாரிப்புதான் "ஃபேபல் டிரினிட்டி டிரஃபிள்ஸ்' சாக்லேட். இந்த சாக்லேட்டை, ஐடிசிக்காக, ஃபிரான்ஸ் நாட்டின் "மிஷேலின்' ஸ்டார் செஃப்ஃபான பிலிப் கான்டிஸினி பிரத்யேகமாகத் தயாரித்திருக்கிறார். இந்த சாக்லேட் மிக அதிக விலை காரணமாக "உலகிலேயே அதிக விலையுள்ள சாக்லேட்' என்று கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துக் கொண்டுள்ளது.
 "இத்தனை அதிக விலை நிர்ணயிக்க அப்படி என்ன இந்த சாக்லேட்டில் இருக்கிறது...?' என்ற கேள்விக்கு ஐடிசி நிறுவனம் தரும் பதில் இதுதான். ஐடிசியின் அதிக விலை சாக்லேட் 3 பிரிவுகளாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. "கிரியேட்டர்', "நர்ஸர்', "டெஸ்ட்ராயர்' என பெயரிடப்பட்டிருக்கும் சாக்லேட்டுகள் ஒவ்வொன்றும் தனிச்சுவை கொண்டவை.
 இந்த மூன்று ரக சாக்லேட்டுகளுக்கு செஃப் பிலிப் கான்டிஸினி மிகச் சிறப்பான மூலப் பொருள்களைத் தேர்ந்தெடுத்துள்ளார். உலக சாக்லேட் குடும்பத்திலிருந்து விலகி சுவையின் உச்சத்தை அனுபவிக்கும் விதத்தில் வித்தியாசமாக தயாரித்திருப்பதால் இந்த மிட்டாய்களுக்கு இந்த அதிக விலை.
 இந்த அதிசய சாக்லேட்டுகள் கைவினை கலைஞரால் செய்யப்பட்ட மரப் பெட்டியில் வைத்து விற்கப்படும். அந்த மரப்பெட்டியில் இடம் பெறும் மூன்று வகை சாக்லேட்கள் எடை 225 கிராம் மட்டுமே..! மரப்பெட்டி அடக்கம் சாக்லேட்டுகளில் விலை ஒரு லட்சம் ..! "சாக்லேட் தேவை' என்று வரும் ஆர்டர்கள் அடிப்படையில் மட்டுமே இந்த உயர்ரக சாக்லேட்டுகள் தயாரிக்கப்படுமாம்..!
 -சுதந்திரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com