ஊருக்குள் நுழைந்தால் வரி

நவீன சாலைகளில் வாகனங்கள் செல்ல சுங்கவரி வசூலிக்கப்படுகிறது. இதே நிலை பல ஆண்டுகளுக்கு முன்பு ஊர்களுக்கு இருந்தது. அதாவது ஊருக்குள் நுழைந்தாலே வரி செலுத்த வேண்டும்.
ஊருக்குள் நுழைந்தால் வரி

நவீன சாலைகளில் வாகனங்கள் செல்ல சுங்கவரி வசூலிக்கப்படுகிறது. இதே நிலை பல ஆண்டுகளுக்கு முன்பு ஊர்களுக்கு இருந்தது. அதாவது ஊருக்குள் நுழைந்தாலே வரி செலுத்த வேண்டும்.
 சாலைகள் அமைப்பதும், பராமரிப்பதும் அரசின் முக்கிய பணிகளில் ஒன்று. முன்பு பொதுப்பணித்துறை தான் சாலைகளை நிர்வகித்து வந்தது. சாலைகளைப் பராமரிக்க நில வரியில் ஒரு பகுதி ஒதுக்கப்பட்டது.
 1871-ஆம் ஆண்டு ஊராட்சி சட்டத்தின் படி நகராட்சி, பஞ்சாயத்துகள் அமைக்கப்பட்டு பொதுப்பணித்துறை சாலைகளை ஊராட்சிகளிடம் ஒப்படைத்தது. இதனால் நிலவரி அரசுக்கு போய்விடும். எனவே நிதி பற்றாக்குறையால் சாலைகளை நிர்வகிக்க, சுங்கவரி வசூலிக்கப்பட்டது. ஊர் எல்லைகளில் சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டன. வணிகப் பொருள் செல்லும் சாலைகளில் 10 மைலுக்கு ஒரு சுங்கச்சாவடி அமைக்கப்பட்டது.
 இதனை உறுதி செய்யும் பொருட்டு ஈரோடு நகராட்சியின் முதல் வரைபடத்தில் சுங்கச்சாவடி என்று மூன்று இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 தலைச்சுமை, பாரவண்டி, எருது, கழுதைகள் மேல் வரும் பொருள்களுக்கும், வண்டிகளுக்கும் உரிய தொகை சுங்கமாக வசூலிக்கப்பட்டது. 1931-இல் வாகனங்களுக்கு வரி விதிக்கப்பட்டபின் சுங்கவரி நீக்கப்பட்டது.
 முதல் குலோத்துங்கன், "சுங்கம் நீக்கிய சோழன்' என்று பெயர் பெற்றான்.
 திருச்சிராப்பள்ளியிலும், கோவையிலும் சுங்கம் என்றே ஓரிடம் அழைக்கப்பட்டு வருகிறது.
 தஞ்சாவூர் அருகில் ஓரிடம் "சங்காந்திடல்' என்று குறிக்கப்பெறுகிறது.
 -செ.ராசு
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com