தினமணி தமிழைப் போற்றும் இதழ் பேராசிரியர் அய்க்கண்

"தினமணி கதிரின்' ஆசிரியராக சாவி ஞாயிறு மலராக இருந்த பகுதியை, அக்காலத்தில் பிரபல வார இதழ்களாக விளங்கிய "ஆனந்த விகடன்', "கல்கி', "குமுதம்' முதலியவற்றுக்குச் சமமாக உயர்த்திய சாதனையாளர்
தினமணி தமிழைப் போற்றும் இதழ் பேராசிரியர் அய்க்கண்

"தினமணி கதிரின்' ஆசிரியராக சாவி ஞாயிறு மலராக இருந்த பகுதியை, அக்காலத்தில் பிரபல வார இதழ்களாக விளங்கிய "ஆனந்த விகடன்', "கல்கி', "குமுதம்' முதலியவற்றுக்குச் சமமாக உயர்த்திய சாதனையாளர் சாவி. எண்ணற்ற இளம் எழுத்தாளர்களை அடையாளம் கண்டு அங்கீகரித்து உயர்த்திய உந்து சக்தியாக விளங்கினார்.
 எனது இளமைக் காலத்தில் "தினமணி கதிரில்' என்னுடைய பல சிறுகதைகளை வெளியிட்டு ஊக்குவித்தவர் சாவி பற்றிப் பல செய்திகளை நன்றியுடன் வெளியிடும் கடப்பாடு உடையவன் நான்.
 அக்காலத்தில் "தினமணி கதிர்' மற்றும் "கல்கி'," அமுதசுரபி', "கலைமகள்' முதலான பத்திரிகைகள் நடத்திய சிறுகதைப் போட்டிகளில் பரிசுகள் பெற்ற போது பரிசுகள் பெறுவது அய்க்கண்ணுக்கு வழக்கமாகிவிட்டது என்று பாராட்டிய பெருமகனார் அவர்.
 "தினமணி கதிர்' நடத்திய வரலாற்று நாவல் போட்டியில் கோவி. மணிசேகரன் எழுதிய "குடவாயிற்கோட்டம்' முதல் பரிசு பெற, என்னுடைய "இளவெயினி' இரண்டாம் பரிசு பெற்றது. இரண்டாம் இடம் பெற்றாலும், சிறப்பாக இருக்கிறது என்று சொல்லி, இரண்டாம் பரிசுத் தொகையை ரூபாய் ஐந்நூறு உயர்த்திப் பரிசளித்தார். அந்தக் காலத்தில் ஐந்நூறு ரூபாயின் மதிப்பு எவ்வளவு என்பதை இப்போது கணக்கிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்!
 2001-ஆம் ஆண்டு தமிழக அரசு, இந்திய மொழிகளிலும் ஆங்கிலம் முதலிய மேலை நாட்டு மொழிகளிலும் மொழி பெயர்த்து வெளியிடுவதற்காகத் தமிழில்- புதுமைப்பித்தன் காலத்திலிருந்து சுஜாதா காலம் வரை- வெளிவந்த சிறந்த சிறுகதைகளாக 12 கதைகளைத் தேர்ந்தெடுத்த போது, அவற்றில் ஒன்றாகத் தெரிந்தெடுக்கப்பட்ட எனது சிறுகதை, "தினமணி கதிரில்' வெளியானது என்பதைப் பெருமை
 யுடன் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.
 இவ்வாண்டு தமிழக அரசின், இயல் இசை நாடக மன்றம் 2011-ஆம் ஆண்டு முதல் 2018 வரையிலான கலைமாமணி விருதுக்காக 198 பேரை அறிவித்த போது, இயற்றமிழ் எழுத்தாளர்களை முன்னிறுத்தி, இசை நாடகக் கலைஞர்களின் பெயர்களைத் தொடர்ந்து அறிவித்திருக்கிறது. இச்செய்தியை வெளியிட்ட பல பிரபல நாளிதழ்கள், இயற்றமிழ் எழுத்தாளர்களின் பெயர்களை விட்டுவிட்டு புகழ்பெற்ற பிரபல இசை, நாடக, திரைப்படக் கலைஞர்களின் பெயர்களை மட்டும் அச்சிட்டிருந்தன. ஆனால், தினமணி மட்டுமே எழுத்தாளர்களின் பெயர்களை முன்னே அச்சிட்டு மற்ற கலைஞர்களின் பெயர்களைத் தொடர்ந்து வெளியிட்டிருந்தது.
 அதுமட்டுமல்ல, இந்த வாரம் பகுதியில் "கலைமாமணி' விருதுபெற்ற எழுத்தாளர்களை "கலா ரசிகன்' பாராட்டியதோடு அவர்களில் பலரை தினமணியோடு தொடர்புடையவர்கள் என்று குறிப்பிட்டு அவ்வரிசையில் எனது பெயரையும் சேர்த்திருந்ததை விருதின் போனஸôக எண்ணி மகிழ்ந்தேன்.
 நாள்தோறும் நம் வாழ்வில் சூரியனாய் விடியும் "தினமணி' ஞாலம் உள்ளளவும் "தமிழ்மணி' யாய் ஒளிவீசி உயிர்ப்புடன் விளங்க உளமார்ந்த வாழ்த்துகள்!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com