சாலை விபத்து கதை

எஃப். எம். கலைக்கூடம் தயாரிக்கும் படம் "குஸ்கா'.  பி. என். சி. கிருஷ்ணா கதை எழுதி இயக்குகிறார்.
சாலை விபத்து கதை


எஃப். எம். கலைக்கூடம் தயாரிக்கும் படம் "குஸ்கா'.  பி. என். சி. கிருஷ்ணா கதை எழுதி இயக்குகிறார். கிஷோர், சஸ்வதா, ரேகா, மயில்சாமி, பாக்யராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சாலை விபத்தில் சிக்கிக் கொள்கின்ற ஒரு பெண்ணுடைய வாழ்வை பற்றிய உணர்வுபூர்வமான கதை. மிகவும் சிக்கலான ஒரு விஷயத்தை, இயக்குநர் மிகவும் நளினமாகக் காட்சிப்படுத்தியுள்ளார். 

சாலை விபத்தின் தாக்கத்தை, இதுவரை சொல்லப்படாத முற்றிலும் புதிய கோணத்தில் அணுகி இருக்கிறது. எம். எஸ். ராஜா ஒளிப்பதிவு செய்கிறார். ஆர். ஜி. ஆனந்த் படத்தொகுப்பை கவனிக்கிறார்.  கலை இயக்குநராக கே. கலை நடராஜ் பணியாற்றி இருக்கிறார். ஓம் பிரகாஷ் சண்டைக் காட்சிகளை வடிவமைக்கிறார்.  ஸ்டில்ஸ் கே. பி. பிரபு. நடனம் ஜே. ஜே. சந்துரு.  பாடல்கள் எழுதி, இசையமைக்கிறார் பி. என். சி. கிருஷ்ணா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com