விஷயம் தெரிந்தவர்கள் படிப்பது "தினமணி' - கொ.மா. கோதண்டம்

நான் 1938-ஆம் ஆண்டு பிறந்தவன். நான் மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போதே தமிழ்வாணன் நூல்கள் படிக்கத் துவங்கினேன். வசதியான இளைஞர் ஒருவர் ஒரு நூல் படிக்க காலணா என்று
விஷயம் தெரிந்தவர்கள் படிப்பது "தினமணி' - கொ.மா. கோதண்டம்

நான் 1938-ஆம் ஆண்டு பிறந்தவன். நான் மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போதே தமிழ்வாணன் நூல்கள் படிக்கத் துவங்கினேன். வசதியான இளைஞர் ஒருவர் ஒரு நூல் படிக்க காலணா என்று நூல்கள் வாங்கி வாடகைக்கு தரத் தொடங்கினார். அப்போது எங்களது ஊர் ராஜபாளையத்தில் தெருவுக்கு ஒரு வாசக சாலை இருக்கும். வாசக சாலைக்கு சென்று சிறுவர் இதழ்கள் தொடர்ந்து படிக்க துவங்கினேன்.
 1955-ஆம் ஆண்டு தியாகியும், முன்னாள் முதல்வருமான குமாரசாமி ராஜா தன் இல்லத்தை நூலகமாக்கினார். அதனை ராஜேந்திரபிரசாத் திறந்து வைத்தார். நானும் பஞ்சாலையில் பணிக்கு சேர்ந்தேன்.
 நாளிதழ்களில் தினமணி என்னைக் கவர்ந்தது. விடாமல் படிக்கத் துவங்கினேன். வாசக சாலைக்கும் தவறாமல் செல்வேன். சில எளிய வாசக சாலைகளில் தினமணி வாங்கவில்லை. அதன் தலைவர் செயலர்களை சந்தித்தேன்.
 ஐயா, "தினமணி விசயம் தெரிந்தவர்கள் படிக்கும் பத்திரிகை. அதை நீங்கள் வாங்கவில்லை என்றால் உங்கள் தெருவில் விசயம் தெரிந்தவர்களே இல்லை என்று ஆகிவிடும். அதனால் தினமணி நாளை முதல் வாங்கிவிடுங்கள்' எனக் கூறியதும் அங்கும் தினமணி வாங்கிவிட்டார்கள்.
 தினமணியை நாள்தோறும் படித்துவிடுவன். ஒரு நாள் படிக்காமல் விட்டால் அன்று நிம்மதி இருக்காது.
 ஒரு சமயம் நூலகத்தில் பணி செய்தேன். தினமணி ஏஜென்ட் இரண்டு நாள் தினமணி போடவில்லை. ஏஜென்ட் இடம் சென்று "ஏன் போட வில்லை' என்று கேட்டேன். "பையன் கிடைக்கவில்லை நானே அலைய முடியுமா' என்றார்.
 " நீர் போட்டுத்தான் ஆக வேண்டும்' என்றேன். அவர் கேட்கவில்லை. அலுவலகத்துக்கு கடிதம் எழுதிவிட்டேன். ஒரு வாரம் கழித்து ஏஜென்ட் ஐந்தாறு நண்பர்களுடன் வந்து "நீங்கள் கையெழுத்துபோட்டுத் தாருங்கள் இல்லை எனில் ஏஜென்டை மாற்றி விடுவார்களாம். இனி நாள் தோறும் தவறாமல் தினமணி போட்டுவிடுகிறேன்' என்றார். என்னால் உமக்கு பாதிப்பு வேண்டாம் எனக்கூறி கையெழுத்து போட்டு அனுப்பிவிட்டேன்.
 ஒரு சமயம் நாளிதழ் அளவிலேயே மிகப்பெரிய மலராக தினமணி சிறப்பு மலர் வந்தது. அதில் எட்டுபத்தி ஒரு பக்க அளவுக்கு என் அனுபவங்களை பற்றி பிரசுரம் செய்து சிறப்பித்தார்கள். பின்னர் சிறுவர் மணியில் என்னுடைய நாவலை தொடராக வெளியிட்டு சிறுவர் இலக்கியத்தில் என்னை பிரபலமாக்கியது. தற்போதைய ஆசிரியர் கி.வைத்தியநாதன் உள்ளிட்ட தினமணி ஆசிரியர்கள் நான் தலைவராக இருக்கும் மணிமேகலை மன்றத்தில் வந்து பேசி சிறப்பு செய்தார்கள். தற்போதும் தினமணியுடன் தொடர்பு தொடர்கிறது.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com