தமிழில் ஹாலிவுட் கலைஞர்கள்
By DIN | Published On : 01st September 2019 12:00 AM | Last Updated : 01st September 2019 12:00 AM | அ+அ அ- |

அமெரிக்கா வாழ் தமிழர் டெல் கணேசன் தயாரித்துள்ள ஹாலிவுட் படம் "டிவில்ஸ் நைட்'. ஹாலிவுட் கலைஞர்கள் பலர் நடித்துள்ள இப்படம், இந்தியாவிலும் வெளியாக உள்ளது. சென்னையில் நடந்த விழாவில் படம் குறித்து கணேசன் பேசும் போது... ""பல நுôறு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா செவ்விந்தியர் கட்டுப்பாட்டில் இருந்தது, அவர்களை வெள்ளையர்கள் துரத்திவிட்டு நிலத்தைப் பறித்தனர்.
அப்போது உயிர் இழந்த ஒரு செவ்விந்தியரின் ஆவி ஒரு கத்திக்குள் அடங்கி இருக்கிறது. அந்தக் கத்தி ஒரு கண்காட்சியகத்தில் இருக்கிறது. அந்த மியூசியத்தின் காப்பாளராக நடிகர் நெப்போலியன் இருக்கிறார். திடீரென அந்தக் கத்தியில் இருந்து வெளிப்படும் ஆவி, அந்த ஊரில் பலரைப் பழிவாங்குகிறது. ஒரு போலீஸ் படை என்ன நடக்கிறது என்பதை விசாரிக்கிறது. கடைசியில் நெப்போலியன் உதவியுடன் அந்த ஆவி எப்படி அடக்கப்பட்டது என்பது கதை. அமெரிக்க மாடல் செலினா நர்ஸ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அஸ்வின் கணேசன் பாடல்களை உருவாக்கியிருக்கிறார். அமெரிக்காவில் வசித்து வரும் நடிகர் நெப்போலியன் இந்தப் படம் மூலமாக ஹாலிவுட்டில் நுழைந்திருக்கிறார்'' என்றார்.