கமாண்டோ தமன்னா

கவர்ச்சி, கமர்ஷியல் என வலம் வந்துக்கொண்டிருந்த தமன்னாவை ராணுவ கமாண்டோவாக மாற்றியிருக்கிறார் இயக்குநர் சுந்தர்.சி இதுபற்றி அவர் கூறும் போது...
கமாண்டோ தமன்னா

கவர்ச்சி, கமர்ஷியல் என வலம் வந்துக்கொண்டிருந்த தமன்னாவை ராணுவ கமாண்டோவாக மாற்றியிருக்கிறார் இயக்குநர் சுந்தர்.சி இதுபற்றி அவர் கூறும் போது...
 "நான் எம்ஜிஆரின் தீவிர ரசிகன். அவர் நடித்த "உலகம் சுற்றும் வாலிபன்' போல் ஒரு படம் இயக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக எண்ணிக்கொண்டிருந்தேன். அந்தக் கனவு இப்படம் மூலம் நிறைவேறுகிறது. இதில் சுபாஷ் என்ற ராணுவ அதிகாரியாக விஷால் நடிக்கிறார்.
 படம் முழுக்கச் சண்டை காட்சிகள் நிரம்பி இருப்பதால் படத்துக்கு "ஆக்ஷன்' என்றே தலைப்பு வைத்துவிட்டேன். ராணுவ பெண் கமாண்டோவாக தமன்னா நடிக்கிறார். விஷாலுடன் இவரும் ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க வேண்டியிருந்ததால் அதற்கான பயிற்சிகள் பெற்று நடித்துள்ளார். 70 சதவீத படப்பிடிப்பு வெளி நாடுகளிலும் மற்ற காட்சிகள் தில்லி, ஐதராபாத், சென்னையிலும் படமாகி உள்ளது. இதன் படப்பிடிப்பு முடிந்தநிலையில் அடுத்தக் கட்ட பணிகள் நடந்துவருகின்றன'' என்றார் இயக்குநர் சுந்தர்.சி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com