சூப்பர் டூப்பர்

"ஆண்மை தவறேல்' படத்துக்குப் பின் துருவா நடிக்கும் படம் "சூப்பர் டூப்பர்'. இந்துஜா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
சூப்பர் டூப்பர்

"ஆண்மை தவறேல்' படத்துக்குப் பின் துருவா நடிக்கும் படம் "சூப்பர் டூப்பர்'. இந்துஜா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். வரும் 20-ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது. படம் குறித்து துருவா பேசும் போது...
 "அறிந்தும் அறியாமலும் அவ்வப்போது செய்கிற தவறுகள்தான் வாழ்க்கையின் திசையைத் தீர்மானிக்கும். அது நல்லதோ கெட்டதோ... சில நிமிடங்கள், சில விநாடிகளில் நாம் அதுவரைக்கும் வடிவமைத்து வைத்த மொத்த வாழ்க்கைப் போக்கும் மாறி விடுகிறது. அப்படித்தான் இங்கே ஒரு சூழல். ஒவ்வொரு கணமும் ஒரு அனுபவம். அனுபவமே கடவுள் என்று உணருகிற போதுதான் எல்லாமே தெரிகிறது. ஆசையே துன்பத்துக்கு காரணம் என புத்தர் உணர்ந்தது சிறு விநாடிதான். ஆனால், அவர் கடந்து வந்த தூரம் ஒரு வனத்தை கடந்த மாதிரி இருக்கும். முழுக்க முழுக்க காமெடியை களமாகக் கொண்டு உருவாகியுள்ளது. அனைத்து வகை ரசிகர்களையும் படம் கவரும்'' என்றார் துருவா.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com