காந்தள் பூக்கள்

காந்தள் பூ - தமிழக அரசு அங்கீகரித்த மாநில மலராகும். மனிதன் முதலில் தோன்றியதாக சொல்லப்படும் ஆப்பிரிக்க  ஆசியப் பகுதியை தாயகமாகக் கொண்டதாகும்.
காந்தள் பூக்கள்


காந்தள் பூ - தமிழக அரசு அங்கீகரித்த மாநில மலராகும். மனிதன் முதலில் தோன்றியதாக சொல்லப்படும் ஆப்பிரிக்க  ஆசியப் பகுதியை தாயகமாகக் கொண்டதாகும். பூக்களில் தனித்துவமானது காந்தள் பூக்கள். இது கார்த்திகை மாதத்தில் மழை பொழிந்ததும் வேலிகளில் வரிசையாக பூத்திருப்பது, கார்த்திகை தீபங்கள் ஏற்றியது போல ஜொலிக்கும். காந்தள் பூக்கள் பூக்கும் போது இளம் பச்சை நிறமாகவும், பின்னர் மஞ்சளாகவும், கிச்சிலி நிறமாகவும், இறுதியில் சிவப்பாகி கருஞ் சிவப்பு நிறமாக நிறைந்து ஒளிரும்.

மேலும் இதழ்களின் அடிப்பகுதி ஒரு நிறமாகவும், நடுப்பகுதி வேறு நிறமாகவும், நுனிப்பகுதி மற்றொரு நிறத்திலும் இருக்கும். மலேசியாவில் இம்மலர்களை சீனர்களின் பல வண்ண விளக்குகள் போலிருப்பதாக சொல்வர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com