காசி ஆலயம்- கும்பாபிஷேகம் செய்த தமிழர்

காசி விஸ்வநாதர் கோயில் கி.பி1585-ஆம் வருடம், மொகலாய மன்னர் அக்பரிடம் அமைச்சராக இருந்த தோடர்மால் என்பவரின் உதவியுடன் நாராயண பட் என்பவர்தான் இக்கோயிலைக் கட்டினார்.
காசி ஆலயம்- கும்பாபிஷேகம் செய்த தமிழர்

காசி விஸ்வநாதர் கோயில் கி.பி1585-ஆம் வருடம், மொகலாய மன்னர் அக்பரிடம் அமைச்சராக இருந்த தோடர்மால் என்பவரின் உதவியுடன் நாராயண பட் என்பவர்தான் இக்கோயிலைக் கட்டினார். ஆனால் 1669-ஆம் வருடம், ஒளரங்கசீப் பீரங்கி மூலம் கோயிலைத் தகர்த்துவிட்டு, ஞான பாபி என்னும் மசூதியையும் கட்டினார். அதன் பிறகு 1779-ஆம் வருடம், இந்தூர் மகாராணி அகல்யா பாய் ஹோல்கர் என்பவர் ஞான பாபி மசூதிக்கு அருகில் இப்போது இருக்கும் காசி விஸ்வநாதர் கோயிலை எழுப்பினார். அதன் பிறகு, 239 வருடங்கள் கடந்த நிலையில், 2019 ஜூலை 5-ஆம் தேதி காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

239 வருடங்கள் கழித்து நடைபெற்றிருக்கும் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்தியவர், தமிழகத்தைச் சேர்ந்த சுப்பு சுந்தரம் குடும்பத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரிடம் இது குறித்து கேட்ட போது சொன்னார் :

""காசி விஸ்வநாதர் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த எனக்குக் கிடைத்த வாய்ப்பை இறைவனின் அருள் கடாட்சம் என்றே நானும் என் மனைவியும் கருதுகிறோம். நாங்கள் காசி விஸ்வநாதர் மற்றும் காசி அன்னபூரணியை வழிபடுவதற்காக காசிக்கு சென்றோம். அப்போது, காசி விஸ்வநாதர் சந்நிதி கதவுகளுக்கு வெள்ளிக்கவசம் செய்து கொடுத்தோம். அப்போதுதான், கோயிலில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் இருப்பது தெரிய வந்தது. கோயிலில் விசாரித்தபோது, கடந்த 239வருடங்களாக கும்பாபிஷேகமே நடைபெறவில்லை என்ற விவரமும் தெரியவந்தது. அப்போது எனக்குள், காசி விஸ்வநாதர் கோயிலைப் புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்தால் என்ன?' என்பதாக ஓர் எண்ணம் தோன்றியது. இறைவனின் திருவுள்ளம்தான் அப்படி ஓர் எண்ணம் எனக்குள் ஏற்படக் காரணம் என்பதையும் புரிந்துகொண்டேன். என் எண்ணத்தை கோயில் நிர்வாகிகளிடம் தெரிவித்தேன். அவர்களும் ஒப்புக்கொண்டனர். உடனே கோயிலில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி, தமிழகத்திலிருந்து 60 வேத பண்டிதர்களை பிள்ளையார்பட்டி சீவஸ்ரீ ‚ பிச்சைக் குருக்கள் தலைமையில் அழைத்துச்சென்று கடந்த 2019 ஜூலை 5-ஆம் தேதி கும்பாபிஷேகத்தைச் செய்தோம். காசி விஸ்வநாதர் கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்த பணியை பிறவிப் பயனாகவே கருதுகிறோம்'' என்று கூறினார்.

தொழிலதிபரான சுப்பு சுந்தரம் தன் நண்பர்களின் பேராதரவுடன் இந்த புனிதப்பணியினை நிறைவேற்றியுள்ளார். இந்த ஆண்டு ஜூலை 5-ஆம் தேதி வருஷாபிஷேகம் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com