தினமணியும் நானும்: 76 ஆண்டு காலத் தொடர்பு

"எனது பேரன்பர் காலஞ்சென்ற பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை 36 ஆண்டுகளுக்கு முன் "மனோன்மணீயம்' நாடக நூலுக்கு ஒரு நல்ல பதிப்பை அளித்து உதவினார்.
தினமணியும் நானும்: 76 ஆண்டு காலத் தொடர்பு


"எனது பேரன்பர் காலஞ்சென்ற பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை 36 ஆண்டுகளுக்கு முன் "மனோன்மணீயம்' நாடக நூலுக்கு ஒரு நல்ல பதிப்பை அளித்து உதவினார். அந்தப் பதிப்பின் ஒரு தனிச்சிறப்பு ஆங்கிலத்தில் கே.என். சிவராஜ பிள்ளை எழுதியிருந்த விவரமான குணச்சித்திர ஆய்வுரை ஆகும்.

அத்தகைய சிறப்பு வாய்ந்த விமர்சனக் கட்டுரைகள் தமிழில் எழுதப்பெற வேண்டும் என்ற ஆசை தூண்ட, தினமணி ஆசிரியர் ஏ.என். சிவராமனது விருப்பத்திற்கு இணங்கி, சுமார் பத்தாண்டுகளுக்கு முன் தினமணி பத்திரிகையில் மனோன்மணீயம் விளக்கமும், விமர்சனமும் என்ற தலைப்பில் சில கட்டுரைகளைத் தொடர்ச்சியாக எழுதி வந்தேன். அக்கட்டுரை "மனோன்மணீயம்' நூலுக்கு ஒரு விசேஷ முன்னுரையாக அமைந்திருக்கின்றன' என்று குறிப்பிடுகின்றார் பி.ஸ்ரீ.

"மனோன்மணீயம்' நூலுக்கு பி.ஸ்ரீ எழுதிய விளக்கமும் விமர்சனமும் கட்டுரைகளையும்,  மனோன்மணீயம்  மூலத்தையும் சேர்த்து என் தந்தையார் முல்லை முத்தையா மலிவுப் பதிப்பாக பத்தாயிரம் பிரதிகள் ரூபாய் 1.50 விலையில் 1958-இல் வெளியிட்டார்.

இராம. சம்பந்தம் தினமணி ஆசிரியராக இருந்த போது 1977-இல் "சுதந்திரப் பொன் விழா' மலர் ஒன்றை வெளியிட்டார்கள். அம்மலரில் ஏ.என். சிவராமன் எழுதிய கட்டுரையைப் படித்த எந்தையார் அக்கட்டுரையை தனி நூலாக வெளியிடும்படி கூறினார்.

அப்போது ஏ.என்.எஸ்ûஸ தொடர்பு கொண்டு நூலாக வெளியிட அனுமதியும் எவ்வளவு பணம் தர வேண்டும் என்றும் கேட்டேன். ""எனக்குப் பணம் வேண்டாம். புத்தகம் போட்டு நஷ்டம் அடையாமல் பார்த்துக் கொள்'' என்று ஏ.என்.எஸ் குறிப்பிட்டார்.

1998-இல் "சுதந்திர போராட்ட வரலாறு' என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டேன். இங்கிலாந்தில் பிறந்து "இந்தியன் எக்ஸ்பிரஸ்' பத்திரிகையில் 37 ஆண்டுகள் புகைப்பட கலைஞராகப் பணியாற்றிய ஹாரிமில்லர் எழுதிய ஆங்கிலக் கட்டுரைகளை தமிழில் எஸ்.எம்.கார்மேகம் மொழிபெயர்த்து தினமணி கதிரில் 26.3.1995 முதல் 11.6.1995 வரை பதினொரு வாரங்கள் தொடராக வெளிவந்தது. அக்கட்டுரைகளை "காமிராவின் கைவண்ணம்' என்ற பெயரில் நூலாக வெளியிட்டேன். 

தற்போதைய தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் தினமணி ஞாயிற்றுக்கிழமை "தமிழ்மணி' பகுதியில் "இந்த வாரம்' என்ற பகுதியை எழுதி வருகிறார். அந்தப் பகுதியை தனி நூலாகக் கொண்டு வரும்படி புத்தகக் கண்காட்சியில் பார்க்கும்போதெல்லாம் ஆசிரியரிடம் சொல்வேன். 

தற்செயலாகப் புரட்டி பார்த்த போது எந்தையார் முல்லை முத்தையா மற்றும் முல்லை பதிப்பக நூல்களைப் பற்றிய செய்திகள் 13 வாரங்கள் இடம் பெற்றிருப்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி கொண்டு, தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் "உதிர்ந்த முத்துக்கள்' என்ற தலைப்பில் 40 பக்க அளவில் சிறிய நூலாக வெளியிட்டேன்.

என் தந்தையார் அமரர் முல்லை முத்தையா 2000-ஆம் ஆண்டில் மரணமடையும் வரையில் தினமணி இதழைப் படிக்காமல் ஒரு நாளும் இருந்ததில்லை.

அதைத் தொடர்ந்து நானும் 1975 முதல் தினமணி இதழைப் படித்து வருகிறேன். 
செட்டி நாடு பகுதி, திருப்பதி போன்ற இடங்களுக்குச் சென்றால் தினமணி கிடைப்பது கடினம். எனினும் அருகிலுள்ள டவுனுக்குச் சென்று எப்படியும் வாங்கிவிடுவேன்.

மேலும் என்னைத் தொடர்ந்து மூன்றாவது தலைமுறையாக என் மகன் பிஎல்.முத்துக்குமரன், மகள் பிஎல்.நாச்சம்மை, தினமணி இதழைப் படிக்கிறார்கள் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com