சீன நாடோடிக்கதை: சிறுவனின் புத்திசாலித்தனம்

சீனாவின் வடகிழக்கு மாகாணத்தை ஆண்டு வந்ததான் பிரபலமான மன்னன் சான்சூவீ. அதீத அறிவும் ஆற்றலும் மிகுந்தவன். எனினும் இவனுக்குப் பின் இந்த அரசை ஆள ஒரு வாரிசு இல்லை. தனக்கு குழந்தைப் பேறு இல்லை என்ற
சீன நாடோடிக்கதை: சிறுவனின் புத்திசாலித்தனம்


சீனாவின் வடகிழக்கு மாகாணத்தை ஆண்டு வந்ததான் பிரபலமான மன்னன் சான்சூவீ. அதீத அறிவும்ஆற்றலும் மிகுந்தவன். எனினும் இவனுக்குப் பின் இந்த அரசை ஆள ஒரு வாரிசு இல்லை. தனக்கு குழந்தைப் பேறு இல்லை என்ற ஏக்கம் அவனது ஆழ்மனதில் இருந்தது.

இந்த மாமன்னருக்கு சோ கோ டீ என்று ஒரு பிரதான மந்திரி. மந்திரியின் மகனைப் பற்றி புகழாதவர்கள் யாரும் இல்லை எனலாம். எட்டு வயது சிறுவனுக்குத்தான் என்ன அறிவு. மந்திரி சோகோ மிகவும் கொடுத்து வைத்தவர் என்று சொல்லிச் சொல்லி பூரிப்பார்கள் சக தோழர்கள்.

மன்னர் சான் சூவி காதுகளுக்கு இந்த செய்தி எட்ட அவர் மனதில் துளிர்விட்டுக் கொண்டிருந்த அந்த வக்கரம் சிலிர்த்தது!

மறுநாள் நடக்கவிருக்கும் தன் பிறந்தநாள் விழாவிற்கு அந்த சிறுவனை அழைக்க முடிவு செய்தான் மன்னன். தன் மந்திரியைக் கூப்பிட்டு "என் பிறந்தநாள் விழாவிற்கு கட்டாயமாக உன் மகனை அழைத்து வர வேண்டும்' என்றான். திகைத்தார் மந்திரி. இதைப் போன்றே விழாக்களுக்கெல்லாம் அரசாங்க உயர் அதிகாரிகளும் மற்றும் நகரத்து பிரமுகர்கள் மட்டுமே அழைக்கப்படுவர். அப்படி இருக்க என் மகனை அழைத்து வருமாறு எதற்காக மன்னர் கட்டளை இடுகிறார்? குழம்பித்தவித்தான் மந்திரி.

மிகவும் சோர்வுடன் வாடிய முகத்துடன் அரண்மனையிலிருந்து திரும்பிய தன் தந்தையை பார்த்த மகன் திடுக்கிட்டான். ""ஏன் இப்படி சோர்வாக இருக்கிறீர்கள்?'' என்று கேட்டான் மகன். ""மகனே நாளை நடக்கவிருக்கும் விருந்துக்கு உன்னை கட்டாயம் அழைத்து வர வேண்டுமென மன்னரின் உத்தரவு. யாருக்குமே கிடைக்காத இந்த அழைப்பு உனக்கு கிடைத்திருக்கிறது. ஆனால் எனக்கு பயமாக இருக்குப்பா. நீ மன்னனிடம் பேசும் போது மிக கவனமாக வார்த்தைகளை அளந்து மரியாதையுடன் மென்மையாக பேச வேண்டும்.''

"அப்பா கவலைப்படாதீர்கள். உங்களின் அறிவரைப்படியே நடப்பேன்' என்று உறதிமொழி அளித்தான் அந்த அறிவுஜீவி சோகுவாசோ.

விருந்து மண்டபத்தில் சிறுவன் சோகுவாசோ வைக் கண்ட அனைவருக்கும் ஒரே ஆச்சரியம். மன்னர் எதற்காக இந்த சிறுவனை விரும்பி அழைத்தார். ஏதோ விஷயம் இருக்க வேண்டும் என்று ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர்.

மன்னரின் நெஞ்சமெல்லாம் ஒரே வஞ்சனை. ஆயினும் மிக போலியான மகிழ்ச்சியுடன் சிறுவனை வரவேற்று தன் பக்கத்து இருக்கையில் அமர்த்திக் கொண்டு வேண்டுமென்றே கேள்வி கணைகளால் துளைத்து எடுத்தார்.

அந்த குட்டி விருந்தாளி சிறிதும் அசராமல் அவர் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் எழுந்து நின்று மிகவும் மரியாதையுடன் பதில் கூறினான். விருந்து முடியும் நேரம் என் அழைப்பை ஏற்று இந்த விருந்தில் கலந்து கொண்ட சிறுவன் ""சோகுவாசோவுக்கு ஒரு விசேஷ பரிசு தர இருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டே அந்த பரிசை கொண்டு வாருங்கள்'' என்றார் மன்னர்.

அட விருந்தில் கலந்து கொண்டதற்கு இந்த சிறுவனுக்குப் பரிசா? என்னவொரு அதிர்ஷ்டம் என்று கூட்டம் பொறாமையில் மூழ்கி இருந்த நேரம். அந்த பரிசு கொண்டு வரப்பட்டது. ஒரு பெரிய கழுதை.

அதன் கழுத்தில் இது தான் சோகுவாசோ என்று எழுதப்பட்ட அட்டை அணிவிக்கப்பட்டிருந்தது. கூட்டத்தினரின் ஆரவாரத்துக்கு கேட்பானேன்? உடனே அரசன், "சிறுவனைப் பார்த்து கூட்டம் உன்னைப் பார்த்து சிரிக்கிறதே உனக்கு வெட்கமாக இல்லையா?' என்றார்.

சோகுவாசோ பதில் பேசவில்லை. "மன்னா எனக்கு ஒரு சிறிய சாக்பீஸ் துண்டு ஒன்று வேண்டும்' என்றான். மன்னர் சாக்பீஸ் கொண்டு வரச் சொன்னார். அதனை வாங்கிக் கொண்ட சோகுவாசோ சற்று தயங்காமல் "இது தான் சோகுவாசோவின் கழுதை' என்று எழுத மன்னர் வெலலெவத்துத்தான் போனார்.

இந்த சிறுவனை அவமானப்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அட்டையில் சிறிய மாற்றத்தை செய்து தனது அறிவை வெளிப்படுத்திய விதத்தை என்னவென்பது? அப்படியே எழுந்து சிறுவனை அள்ளி அணைத்து "இந்த நிமிடத்திலிருந்து நீ என் மகன். இந்த நாட்டை ஆள முழு தகுதியும் பெற்ற அதீத புத்திசாலி' என்று கண்ணீர் வடித்தார் மன்னர்!!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com