ஆன்லைனில் நடந்த போட்டி!

கரோனா  தீ நுண்மி காலத்தில் எல்லோரும் செய்வது வீட்டில் உட்கார்ந்து இருப்பது தான்.
ஆன்லைனில் நடந்த போட்டி!

கரோனா  தீ நுண்மி காலத்தில் எல்லோரும் செய்வது வீட்டில் உட்கார்ந்து இருப்பது தான். இப்படி உட்கார்ந்து கொண்டு இருக்கும் போது நாம் அதிகமாக செய்வது தொலைக்காட்சி பார்ப்பது அல்லது புத்தகம் படிப்பது என்று தான் பொழுதை போக்கிக் கொண்டு இருக்கிறோம். 

சர்வதேச திரைப்பட விமர்சகர்கள் சங்கத்தின் இந்திய கிளை (FIPRESCI INDIA), ஒரு போட்டி அறிவித்து சமீபத்தில் நடத்தியுள்ளது. 2019-இல் வெளியான படங்களிலேயே சிறந்த இந்திய படம் எது என்று கேள்வி கேட்டு, அந்தப் போட்டியின் முடிவையும் சமீபத்தில் அறிவித்து உள்ளார்கள். 

இந்தப் போட்டியில்  6 மலையாள படங்களும், 4 இந்திப் படங்களும், 2 வங்காள மொழி படங்களும், அஸ்ஸôம், குஜராத்தி, பம்பையா, மைதிலி, காசி ஆகிய மொழிகளில் தலா ஒரு படமும் பங்கு கொண்டன.

இதில் குஜராத்தி படமான "ஹெல்லரோ' (Hellaro) என்ற திரைப்படம் வெற்றிப் பெற்றது. அபிஷேக் ஷா என்பவர் இயக்கிய படம் இது. இந்தப் படம் சென்ற ஆண்டு இந்தியாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில், இந்தியன் பனோரமா பகுதியில் தொடக்கப்படமாகக் காட்டப்பட்டது. அது மட்டும் அல்லாமல் சென்ற ஆண்டு நடந்த தேசிய திரைப்பட விழாவில் சிறந்த படமாகவும் தேர்வு செய்யபட்டு "ஹெல்லரோ' பரிசும் பெற்றது. 

இதில் குறிப்பாக குஜராத்தி மொழியில் வெளியான ஒரு படம், முதன் முறையாக தேசிய திரைப்பட விழாவில், சிறந்த படமாகத் தேர்வு செய்யப்பட்டதும் இந்தப் படம் தான். 

இந்தப் படத்தின் கதை என்ன தெரியுமா? 

குஜராத்தில் ஒரு குக்கிராமத்தில் நடக்கும் கதை. அந்தக் கிராமத்தில் குளம், குட்டை, கிணறு  எதுவும் கிடையாது. குடிக்கத் தண்ணீர் வேண்டுமானால். சில கி.மீ அப்பால் உள்ள கிணற்றில் இருந்து தான் தண்ணீர் எடுத்து வர வேண்டும். இப்படி எடுத்து வரும் தண்ணீர்தான் அவர்கள் தாகத்தைத் தீர்க்கும். சமையலுக்கும் மற்ற எல்லாவற்றிற்கும் உபயோகப்படுத்திக் கொள்ள 
வேண்டும். 

அதுவும் அந்தக் கிராமத்தில் உள்ள பெண்கள் தான் அந்தத் தண்ணீரை எடுத்து வர வேண்டும். பெண்கள் தனியாக செல்லாமல் ஒன்றாக சேர்ந்து பல கி.மீ நடந்து போய் தான் அந்த தண்ணீரை எடுத்து வர வேண்டும். அந்தக் காரணத்தை வைத்து கொண்டு வெளியே செல்வது தான், அந்தப் பகுதி பெண்களின் ஒரே பொழுது போக்கு, சந்தோஷம். அந்தப் பகுதியில் வாழும் சுமார் 13 பெண்கள் கூட்டமாக இந்தத் தண்ணீரை எடுத்து வர தினமும் கிளம்புவார்கள். 

அப்படி ஒரு நாள் கிளம்பி நடந்து போகும் போது அவர்களுக்கு என்ன நடக்கிறது. அந்தச் சம்பவத்தால்  அவர்கள் வாழ்க்கையே மாறுகிறது அல்லது அவர்களின் வாழ்க்கையே எவ்வாறு புரட்டி போடப்பட்டது என்பதுதான் அந்த "ஹெல்லரோ' படத்தின் கதை.

இந்தத் திரைப்படம் இத்தாலியில் நடந்த இந்திய திரைப்பட விழாவிலும் காட்டப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com