பிரபலங்களின் பதிவுகள்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ். சமீபத்தில் உடல்நலமில்லாமல் மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்றுத் திரும்பியுள்ளார். கரோனா குறித்த அவரது பதிவு:
பிரபலங்களின் பதிவுகள்


போராடி வெற்றி பெறுவோம்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ். சமீபத்தில் உடல்நலமில்லாமல் மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்றுத் திரும்பியுள்ளார். கரோனா குறித்த அவரது பதிவு:

""இந்த கரோனா கால கட்டத்தில் சுத்தமாக இருக்க வேண்டியதன்  அவசியத்தை மக்கள் இப்போது புரிந்து கொண்டு இருப்பார்கள் என்று நினைக்கிறேன். இதேபோல் கைகளை அடிக்கடி சோப்பால் கழுவ வேண்டும். பொது இடங்களில் எச்சில் துப்பவோ, சிறுநீர் கழிக்கவோ கூடாது போன்ற விஷயங்களையும் கற்றுக்கொண்டு இருப்பார்கள் என்று நம்புகிறேன். நம்மைச் சுற்றியுள்ள பகுதியையும் எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதிர்ஷ்டவசமாக இத்தகைய நல்ல விஷயங்களை நான் அணியில் மூத்த வீரர்களிடம் இருந்து கற்றுக்கொண்டேன். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தலைமுறையினர் இது போன்ற தவறுகளைச் செய்யமாட்டார்கள் என்று நம்புகிறேன்.

கரோனாவுக்கு எதிரான போரில் நாம் அனைவரும் ஒன்றிணைந்துப் போராடி வெற்றி பெறுவோம் என்பதை அறிவேன். நமது அரசாங்கம் மற்றும் டாக்டர்களின் கரங்களை வலுப்படுத்த வேண்டும்.'' என்று பதிவிட்டுள்ளார்.

எப்போதும் நம்பிக்கையுடன், நேர்மறை எண்ணத்துடன் செயல்பட வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டவன் நான். கிரிக்கெட்டில் முந்தைய ஆட்டத்தில் சதம் அடித்து இருப்பீர்கள். அடுத்த ஆட்டத்தில் டக்-அவுட் ஆகி விடுவீர்கள். இதே போல் ஒரு இன்னிங்சில் விக்கெட் எடுத்து இருக்கமாட்டீர்கள். இன்னொரு இன்னிங்சில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்திருப்பீர்கள். அதனால் இக்கட்டான சூழலில் நம்பிக்கையை இழந்து விடக்கூடாது. 

இது ஒரு விளையாட்டு!

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேற்றப்பட்டுள்ளது. சென்னை அணி வெளியேற்றப்பட்ட நிலையில், அந்த அணியின் கேப்டன் டோனியின் மனைவி சாக்ஷி டோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாகப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

""இது ஒரு விளையாட்டு. நீங்கள் சிலவற்றை வென்றால் சிலவற்றை இழக்கிறீர்கள். சிலர் வெற்றி பெறுகிறார்கள், சிலர் தோற்கிறார்கள், மற்றவர்கள் தவற விடுகிறார்கள். ஆனால் அனைவரும் வெற்றியாளர்களாக இருக்க முடியாது'' என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com