ஆதரவுக்கு நன்றி

கடந்த ஆண்டு வெளியான படங்களில் சமூக கருத்துகளுடன் சுவாரஸ்யமான திரைக்கதையும் அமைந்து பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளை குவித்த படம் "பச்சை விளக்கு'. டாக்டர் சி.மணிமேகலை தயாரிப்பில்  டாக்டர் மாறன் இயக்கி
ஆதரவுக்கு நன்றி


கடந்த ஆண்டு வெளியான படங்களில் சமூக கருத்துகளுடன் சுவாரஸ்யமான திரைக்கதையும் அமைந்து பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளை குவித்த படம் "பச்சை விளக்கு'. டாக்டர் சி.மணிமேகலை தயாரிப்பில்  டாக்டர் மாறன் இயக்கி நடித்த இந்த படம் பூடானில் நடைபெற்ற டிராக் சர்வதேச பட விழாவில் சிறந்த சமூக விழிப்புணர்வு படமாகவும் இந்தியாவில் நடந்த டிரிபிள் சர்வதேச பட விழாவில் சிறந்த படமாகவும் தேர்வானது. 

மேலும் நியூயார்க், லண்டன், இத்தாலி, அமெரிக்கா உள்ளிட்ட நகரங்களில் நடந்த பட விழாக்களிலும் அதிகாரப்பூர்வ தேர்வாக கலந்துகொண்டது. இந்த படத்தின் ஓடிடி வெளியீட்டை ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். இந்த நிலையில் தீபாவளி முதல் உலகம் முழுவதும் இந்தப் படம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.  இந்த வெளியீட்டிலும் ரசிகர்களின் பரவலான ஆதரவு கிடைத்துள்ளது. இந்த வெற்றி குறித்து இயக்குநர் மாறன் பேசும் போது.... 

""பெண்களை ஏமாற்றி காதலிப்பது போல நடித்து ஆபாச படம் எடுத்து அதை வைத்து பெற்றோர்களிடம் மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை தோலுரித்து காட்டும் விழிப்புணர்வு படமாக "பச்சை விளக்கு' படத்தை இயக்கி இருக்கிறேன். இந்தப் படம் அனைத்து ரசிகர்களையும் சென்றடைய வேண்டும் என்கிற நோக்கத்தில் ஓடிடி தளத்தில் வெளியிட முயற்சி செய்து வந்தேன். கடந்த  தீபாவளி திருநாளில் உலகம் எங்கும் ஓடிடி மூவி என்ற ஓடிடிதளத்திலும், ஓடிடிமூவி.இன் என்கிற இணையதளம் மூலமாகவும் அனைவரும் பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யபட்டு உள்ளது''  என்றார் மாறன். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com