எச்சரிக்கை தேவை - பாதுகாப்பு அவசியம்!

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தாக்கி வருகிறது. இந்தக் கரோனா வைரஸ் என்றால் என்ன? அது எப்படி மனிதனை தாக்குகிறது? அதிலிருந்து தப்பித்துக் கொள்வது எப்படி என்பதை விளக்கி இருக்கிறார்- அமெரிக்காவில்
எச்சரிக்கை தேவை - பாதுகாப்பு அவசியம்!


உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தாக்கி வருகிறது. இந்தக் கரோனா வைரஸ் என்றால் என்ன? அது எப்படி மனிதனை தாக்குகிறது? அதிலிருந்து தப்பித்துக் கொள்வது எப்படி என்பதை விளக்கி இருக்கிறார்- அமெரிக்காவில் வசித்து வரும் மருந்தியல் விஞ்ஞானி அனுகாந்த். இவர் 25 ஆண்டுகாலமாக வைரஸ் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருபவர். சமீபத்தில்  கரோனா தொடர்பான தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொண்டவர்.  

இது பற்றி அவர் கூறியதாவது:

1980-ஆம் ஆண்டுகளில் விலங்கு  மற்றும் மனிதனில் இருந்து வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வைரஸ் ஆபத்து விளைவிக்காதவை. யாரையும் கொன்றது இல்லை. 

2002-ஆம் ஆண்டு சார்ஸ் என்ற வைரஸ் பரவியது. இது மனிதர்களைக் கொன்று விடும்.  அதற்கு அடுத்தபடியாக வந்துள்ளது தான் கோவிட் 19. தற்போது மனிதர்களைப் பயமுறுத்தி வருகிறது. இது வேகமாகவும் பரவி வருகிறது.வைரஸ் ஆராய்ச்சி என்பது பல விதம். வைரஸில் உள்ள ஜீன் அல்லது புரோட்டீனை எடுத்து ஆராய்ச்சி செய்வார்கள். 

ஆனால் முழு வைரஸ் ஆராய்ச்சி செய்வது என்பது மிகவும் ஆபத்தானது. இந்தக் கோவிட் 19 வைரûஸ வூகானில் ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சி செய்த போது பலர் இறந்து போய் இருக்கிறார்கள். 

வெகு வேகமாக மக்களைக் கொன்றுவிடும் சக்தி கொண்டது இந்தக் கோவிட் 19. அதாவது 30 முதல் 45 நாட்களில் மனிதர்களைக் கொன்றுவிடும் தன்மை கொண்டது.

இந்த வைரûஸ சீனா யாரிடமும் கொடுக்கவில்லை. வேறு எந்த நாட்டு விஞ்ஞானிகளும் கோவிட் 19 ஆராய்ச்சி செய்யவில்லை. உயிருள்ள ஒரு வைரûஸ ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகளுக்கு மட்டும் தான் அதனுடைய செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த தெரியும். 25 ஆண்டு காலத்திற்கு மேலாக அமெரிக்காவில் வைரஸ் ஆராய்ச்சி செய்த அனுபவத்தில் இதைச் சொல்கிறேன். 

இந்தக் கோவிட் 19 வைரஸ் உடம்பின் செல்லுக்குள் புகுந்து உயிர் வாழ முடியும். ஆனால், காற்று, தண்ணீரில் 3 நாளில் மட்டும் உயிர் வாழும். காரணம் நம்முடைய செல்லில் இருந்து அதற்கு சாப்பாடு கிடைக்கும். 

சில வைரஸ்கள் நம் உடம்பிற்குள் புகுந்து மரபணு உருவாக்கி வாழும். கோவிட் 19 போன்ற வைரஸ் உடம்பிற்குள் புகுந்து பல வைரஸ்களை உருவாக்கி செல்களை உடைத்து வெளியே வந்துவிடும். இது ஆபத்தானது. அதனால் இதிலிருந்து தப்பிக்க நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 
குறிப்பாக இருமல், தும்மல் மூலம் ஜெட் வேகத்தில் பரவும். இதிலிருந்து தப்பிக்க என்ன வழி? என்ன செய்யலாம்? 

உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கையாண்டால் தப்பிக்க முடியும். தனியாக இருப்பது அவசியம். தனியாக இருப்பதால் இந்த வைரஸ் நம்மை தாக்காது. ஆனால் வெளியே சுற்றும் போது வைரஸ் தாக்கம் எளிதாக ஏற்படும். நேரடியாக நுரையீரலை தாக்கும். தன்னுடைய நகல்களைத் தொடர்ச்சியாக உருவாக்கி மூச்சடைப்பை ஏற்படுத்தி மரணம் விளைவித்துவிடும்.

வைரஸ் தாக்கினால் கடும் ஜுரம்  அல்லது மூச்சுத்திணறல் ஏற்படும். கடும் ஜுரம் ஏற்படும் போது வெப்பம் தலைக்கு ஏறும். இதனால் மூளையைப் பாதிக்கும். அதனால் கடும் ஜுரம் ஏற்படும் போது அது மூளையைத் தாக்காதவாறு பாதுகாப்பது அவசியம். இதற்கு காய்ச்சல் மாத்திரைகளை நான்கு வேளையும் எடுக்கலாம். ஈரத்துணியை நெற்றியில் வைத்து உஷ்ணத்தைக் குறைத்துக் கொள்ளலாம்.

மூச்சுதிணறல் ஏற்பட்டால் சுவாசத்தை எளிதாக்கும் பயிற்சியை மேற்கொள்ளுங்கள். நாட்டு மருந்துகளை எடுக்கலாம். யூகலிப்டஸ் போன்ற ஆயில்களைப் பயன்படுத்தலாம். கைகளைக் கழுவுகிறோம். மூக்கு வாயை மாஸ்க் போட்டு மறைத்துக் கொள்கிறோம். ஆனால் கண்களை மூடுவதில்லை. கண்கள் மூலமாக இந்த வைரஸ் பரவும் வாய்ப்பும் இருக்கிறது.  

பொது இடங்களுக்குச் செல்லும் போது வைரஸ் நம்மை அண்டாமல் பாதுகாப்பு எப்படி?

ஒருவருக்கு தும்மல், அல்லது இருமல் ஏற்படும் போது உங்கள் மூச்சை அடக்கிக் கொள்ளுங்கள். அந்த இடத்தை விட்டு நகர்ந்த பிறகு மூச்சு விடுங்கள். குறிப்பாக எங்குச் சென்றாலும் தண்ணீர் எடுத்துச் செல்லுங்கள். 

அந்தத் தண்ணீர் நன்கு கொதிக்க வைத்ததாக இருக்க வேண்டும். குறிப்பாகக் கொதிக்க வைக்கும் போது மூடி இருக்க வேண்டும். 

கொதிக்க வைத்த நீர் ஆறிய பின்பு பாட்டிலில் எடுத்துக் கொள்ளுங்கள். சோப்பு, அல்லது சுத்திகரிப்பான்களைக் கூடவே எடுத்துச் செல்லுங்கள். பொது இடத்தில் உட்காரவோ, ஏதேனும் பொருட்களையோ தொட நேர்ந்தால் உடனே கைகளைக் கழுவிவிடுங்கள். 

குறிப்பாக மூக்கு, கண், வாயை தொட்டால், உடனே கைகளைக் கழுவி விடுவது நல்லது.

சிலர் என்னுடைய கை கழுவி கழுவி தேய்ந்து விட்டது என்பது போல் நினைக்கிறார்கள். அவர்கள் கிளவுஸ் போட்டுக் கொள்வது நல்லது. தினமும் அதனைத் துவைத்து மறுபடியும் அணியுங்கள். 

உணவு எப்படி இருக்க வேண்டும்?

குறிப்பாக சாப்பிடும் முன்பு கைகளை நன்கு கழுவுங்கள். ஆனால் கழுவிய பின்பு துண்டுகளில் துடைக்காதீர்கள். 

கைகளைக் கழுவிய பின்பு நீங்கள் தொடுவது உணவாக மட்டுமே இருக்க வேண்டும். நீங்கள் சாப்பிடும் உணவு எப்படி இருக்க வேண்டும். கொதிக்கக் கொதிக்க இருக்க வேண்டும். கோவிட் 19 போன்ற கிருமிகள் வெப்பத்திலே இறந்துவிடும். அதனால் தான் எந்த உணவை சாப்பிட்டாலும் சூடாகவே சாப்பிடுங்கள். நன்றாக வேக வைத்து சாப்பிடுங்கள். 

ஊரடங்கு எதற்கு?

இந்த வைரஸ் யாருக்கு இருக்கிறது என்று சொல்ல முடியாது. அதற்காக தும்மல், இருமல் இருப்பவர்கள் இந்த வைரஸ் இருப்பதாக நினைத்துவிட வேண்டாம். ஒரு சில வைரஸ்கள் உடம்பில் புகுந்துவிட்டால் பல ஆண்டுகாலம் உயிர்வாழும். அதனால் தான் பலருக்கு புற்றுநோய் இருப்பதே தெரியாது. பத்தாண்டுகள் கழித்து தான் தெரியவரும். கோவிட் 19 போன்ற வைரஸ் நம்மிடம் உள்ளதா என்பதை உமிழ்நீர், சளி, இரத்தம் போன்றவற்றைப் பரிசோதிப்பதன் மூலமே கண்டறிய முடியும். இதனை லேப் மூலமாகவோ மருத்துவர்கள் வழியாகவோ கண்டறிய முடியாது. அதற்கென்று கருவிகள் உள்ளன. அதன் மூலம் சிறப்புப் பரிசோதனை செய்வதன் மூலமே கண்டறிய முடியும். 

நம்முடைய உடலில் தெரியாமல் வைரஸ் தொற்று ஏற்பட்டுவிட்டது என்ன செய்யலாம். உங்கள் உடலில் என்ன மாற்றம் ஏற்படுகிறதோ அதற்கு உங்கள் மருத்துவர் ஆலோசனையுடன் மருந்து எடுத்துக் கொள்ளுங்கள் போதும். குறிப்பாக இருமல் வந்தால் அதற்கு மருந்து சாப்பிடுங்கள். நாம் சாப்பிடும் மருந்தில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியே வைரûஸ கொன்றுவிடும். பயப்படத் தேவையில்லை. ஆனால் குறிப்பிட்ட தொந்தரவு விடாமல் இருக்கும் போது உடனே மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள். 

கோவிட் 19 வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் போன்ற மருந்துகள் வேலை செய்யாது. அமெரிக்கா , இந்தியாவிடம் இருந்து ஹைட்ராக்ஸிகுளோரோ குயின் மருந்துகளைக் கேட்டு பெற்று இருப்பதால் அது நோயை தீர்த்துவிடும் என்பது போன்ற வாதங்கள் சரியானவை அல்ல. 

இந்த வைரஸ் தொற்றும் ஏற்படும் நபர்களுக்கு எதிர்ப்பு சக்தி திறன் சரியாக வேலை செய்யவில்லை என்றால் அவர்களுக்கு மரணம் நிகழலாம். எனவே வைரஸ் தொற்று இருப்பவர்கள் தனிமையில் இருங்கள். நீங்கள் வெளியே செல்லும் போது அது பலருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்.  பொது இடங்களில் சமூக இடைவெளியைக் கடைபிடியுங்கள். அரசாங்கம் சொல்வதைக் காற்றில் பறக்க விடாதீர்கள். உங்கள் நன்மைக்குத் தான் அவர்கள் சொல்கிறார்கள். 
வேலையில்லை, பணமில்லை என்று சொல்லாதீர்கள். ஒரு மாதம் தானே. வீட்டில் இருக்கும் அரிசியை வைத்து கஞ்சி அல்லது கூழ் தயாரித்து சாப்பிடுங்கள். உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். சிறிது காலம் பொறுமையாக இருங்கள். எல்லாம் முன்பு போல் ஆகிவிடும்'' என்கிறார் மருத்துவர் அனுகாந்த். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com