எளிமையான திருமணம்
By DIN | Published On : 19th April 2020 09:24 PM | Last Updated : 19th April 2020 09:24 PM | அ+அ அ- |

கன்னட சினிமாவை சேர்ந்தவர்கள் நடிகர் அர்னவ் வின்யாஸ் மற்றும் நடிகை விகானா. இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர்.
இதனையடுத்து அர்னவ்- விகானாவுக்கு திருமணம் செய்து வைக்க இருவரின் பெற்றோரும் முடிவு செய்திருந்தனர். தங்களுடைய திருமணத்தை மிக விமரிசையாக நடத்த இருவரும் முடிவு செய்திருந்தனர். ஆனால் கரோனா ஊரடங்கின் காரணமாக திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்த முடியவில்லை.
எனவே மிக எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தின் போது மணமகனும், மணப்பெண்ணும் "மாஸ்க்' அணிந்திருந்தனர். இந்த திருமணத்தில் இருவரின் குடும்பத்தினரும், நெருங்கிய உறவினர்களும் மட்டுமே பங்கேற்றனர்.