கணினி பயணம் கலைப் பயணமானது

கணினிமென்பொருள் பொறியாளர், பாடகர், நகைச்சுவையாளர். இசைக்கலைஞர் என்று பன்முகம் கொண்டிருக்கும் அலெக்ஸ்சாண்டர்பாபு, இப்போது தமிழ்த் திரைப்படப் பாடல்களை ஆங்கிலப்படுத்தி அதே
கணினி பயணம் கலைப் பயணமானது

கணினிமென்பொருள் பொறியாளர், பாடகர், நகைச்சுவையாளர். இசைக்கலைஞர் என்று பன்முகம் கொண்டிருக்கும் அலெக்ஸ்சாண்டர்பாபு, இப்போது தமிழ்த் திரைப்படப் பாடல்களை ஆங்கிலப்படுத்தி அதே தமிழ்மெட்டுகளில் பாடி வருகிறார். இதுவரை120 மேடை நிகழ்ச்சிகளை வெளிநாடுகளிலும் இந்தியாவின் முக்கிய நகரங்களிலும் நடத்தியிருக்கும் அலெக்ஸ்சாண்டர், சுருக்கமாக அலெக்ஸ் என்று அழைக்கப்படுகிறார்.

அமேஸான் தளத்தில் "அலெக்ஸ் இன்வொண்டர்லேண்ட்' என்ற இரண்டு மணிநேர காணொளி தொகுப்பிற்கு நல்ல வரவேற்பு. கரோனா ஓய்வு காலத்தில் சமூகவலை தளங்களில் பல நிகழ்ச்சிகளை வீட்டிலிருந்து தயாரித்து சமூகவலைதளங்களில் பதிவேற்றம் செய்து தமிழ் மக்கள் வீட்டுக்குள் இருந்து பொழுதுபோக்க உதவி வருகிறார்.

கணினியில் தொடங்கிய பயணம் கலைப்பயணமாக திசை திரும்பியது குறித்து 44 வயதாகும் அலெக்ஸ் விவரிக்கிறார்:

"பிறந்த ஊர் தேவகோட்டை. கணினி படிப்பிற்காக அண்ணா பல்கலைக்
கழகத்தில் சேர்ந்தேன். மேற்படிப்பிற்காக அமெரிக்கா சென்றேன். . அமெரிக்காவில் மேல்படிப்பின் போதும் பிறகு வேலை கிடைத்துப் பணியாற்றத் தொடங்கியபோது தான் மாலைவேளைகளில், விடுமுறைகளில் ஓய்வு நேரங்களில் சுற்றி இருக்கும் நிசப்தம் என்னை அலைக்கழித்தது.

நிசப்தங்களை விலக்கி நிறுத்த சப்தஸ் வரங்களை இசைக்கருவிகளில் கற்றேன். ஹார்மோனியம், தபலா, பேங்கோஸ்களை நன்றாக கையாளுவேன். தபலாவில் ஜாஹிர் ஹுசைன் ஆக வேண்டுமென்று அவர் போல தலைமுடியை நீளமாக வளர்த்துக்கொண்டேன்.

கர்நாடகப் பாடகராக வேண்டுமென்று வாய்ப்பாட்டும் படித்தேன். யோகாவும் கற்றேன்.

ஏழு ஆண்டுகளாகப் பார்த்து வந்த அமெரிக்க வேலையை விட்டுவிட்டுப் பெங்களூருவில் வேலைக்கு அமர்ந்தேன். 2005-இல் திருமணம் நடந்தது. அப்போது தான் கலைத்துறை பக்கம் முழுக்கமுழுக்கச் சென்றால் என்ன என்று தோன்றியது.

பெரியதிரை, சின்னத்திரைகளில் வராமலும், பங்களிப்பு செய்யாமலும் பிரபலமாகலாம்... சம்பாதிக்கவும் செய்யலாம் என்பதை சமூகதளங்கள் நிரூபித்தன. அந்த சந்தர்ப்பத்தை நான் எனது நகைச்சுவை நிகழ்ச்சிகளுக்காகப் பயன்படுத்திக்கொண்டேன். ஊதியமும் தந்தார்கள். வருமானம் கிடைத்ததினால், கணினி வேலையை விட்டுவிட்டு கலைத்துறையின் பக்கம் திரும்பினேன்.

மனைவி தந்த தைரியத்தில் பெங்களூரு வேலையை விட்டுவிட்டு சென்னைக்குக் குடிபெயர்ந்தேன். முதலில் நகைச்சுவை நடிகராகலாம் என்று நினைத்தேன். "திரையுலகில் போட்டிகளைஎதிர்கொள்ளமுடியாது'...

நடிக்க வாய்ப்புத்தேடியும் அலையவேண்டும்.. என்பதினால் , "ஸ்டான்ட்அப்' காமெடி நிகழ்ச்சிகளை தமிழ் ஆங்கிலம் கலந்து வழங்கத் தொடங்கினேன்.

மேடையில் கலாய்க்க ஆரம்பித்த நான் .. பிறகு பேசுவதுடன் பாடலாமே என்று தாவினேன்.. பேசி, பாடிக்கொண்டே நடித்துக்கொண்டே இசைக்கருவி
களை வாசிக்கலாமே .. என்று எனது பயணம் பல திருப்பங்களை சந்தித்தது. கிடைத்த நல்ல வரவேற்பு என்னை உற்சாகப்படுத்தியது. யோகா உட்பட நான் கற்றுக்கொண்டது எதுவும் வீணாகவில்லை எனக்குப் பல விதத்தில் பயன்படுகின்றன.

எனது காணொளி தொகுப்பிற்கு ஆங்கிலத்தில் சப்-டைட்டில்களை எழுதிக்கொண்டிருக்கும் போதுதான் , தமிழ் திரைப்படப் பாடல்களின் வரிகளின் பொருளைத்தரும் ஆங்கில வரியை எழுதி அதை ஒரிஜினல் தமிழ்பாட்டின்மெட்டில் பாடினேன். பாடிக்கொண்டே இசையையும் நானே கையாளுவேன். அந்தக்காலப் பாட்டிலிருந்து இன்று வரையான தேர்ந்தெடுத்த 52 தமிழ் பாடல்களின் ஆங்கிலத் தொகுப்பை வெளியிட்டுள்ளேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com