புதியதை வரவேற்கும் மக்கள்!

எஸ்தர், “""நேரமாகி விட்டது . டாக்ஸியை பிடியுங்கள்''” என்று சொன்னதைப் பார்க்கும் போது ""ஏன் இவ்வளவு பதட்டமாக இருக்கிறீர்கள்?'' என்று நான் கேட்டபோது, அவர் என்னிடம் சொன்னது “
புதியதை வரவேற்கும் மக்கள்!

எஸ்தர், “""நேரமாகி விட்டது . டாக்ஸியை பிடியுங்கள்''” என்று சொன்னதைப் பார்க்கும் போது ""ஏன் இவ்வளவு பதட்டமாக இருக்கிறீர்கள்?'' என்று நான் கேட்டபோது, அவர் என்னிடம் சொன்னது “""நீங்கள் இங்கு வந்தது "கோல்டன் ஹார்ஸ்' திரைப்படத் திருவிழாவில் சிறந்த படங்களைத் தேர்ந்தெடுக்க fipresci ஜூரியாக வந்திருக்கிறீர்கள். இன்றுதான் நீங்கள் பார்க்க வேண்டிய கடைசிப் படம். நாம் தாமதமாகப் போகக்கூடாது. நமக்காகப் பிரத்யேகமாகக் காட்சி இல்லை.

எல்லோரையும் போல் நீங்களும் மக்களோடு மக்களாகப் படம் பார்க்கப் போகிறீர்கள். நாம் குறித்த நேரத்திற்குள் போகாவிட்டால் படம் ஆரம்பமாகி விடும். அதனால்தான் இவ்வளவு பதட்டமாக இருக்கிறேன்''”, என்று உண்மையைக் கூறினார்.

"கோல்டன் ஹார்ஸ்' திரைப்படத் திருவிழாவில் மறு பெயர் “சைனீஸ் படங்களுக்கான ஆஸ்கர்”, என்றும், இந்தத் திரைப்படத் திருவிழாவை சொல்வார்கள். டாக்ஸி பிடித்துப் போய், திரை அரங்கின் இருக்கையில் அமரவும், படம் 10 நிமிடங்கள் கழித்தே ஆரம்பமானது. அதற்குள் சுற்று முற்றும் பார்த்தேன் தியேட்டர் சிறிதாகத் தான் இருந்தது. இருக்கைகள் செளகரியமாகத்தான் இருந்தன. சுமார் 100 இருக்கைகள் தான் இருக்கும் என்று எனக்குத் தோன்றியது. ஆனால் திரையரங்கு சுத்தமாக இருந்தது.

தைவான் நாடு வளர்ந்து வரும் நாடு. எப்படியாவது சீன தேசத்தில் இருந்து பிரிந்து வந்து விடவேண்டும் என்று துடிக்கும் நாடு. இந்த நாட்டில் எல்லாமே இருக்கிறது. அதே போல் அவை நன்றாகவே இருக்கின்றன. சுமார் 500 திரைப்படங்களை ஆண்டுதோறும் தயாரிக்கும் நாடு. கோல்டன் ஹார்ஸ் திரைப்படத் திருவிழாவில் கூடப் புடவை கட்டிய ஒரு பெண்மணியைப் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தேன். அவர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் என்றும் அவரது கணவர் இதே தைவானில் ஒளிப்பதிவாளராக இருக்கிறார் என்றும் கூறினார். சுமார் மூன்று மாதமாக இங்குதான் இருவரும் தங்கி உள்ளார்கள் என்றும் சொன்னார். வீடு இந்தியாவில் உள்ள மும்பை நகரில் இருப்பதாக தெரிவித்தார்.

இத்திரையரங்கின் சொந்தக்காரர்கள் "சினிமா அம்பாசடர்' என்ற அமைப்பின் பெயரில் இந்தத் திரை அரங்குகளை நடத்துகிறார்கள். அதன் தலைவர் பெயர் Joe Chang. தொலைபேசியில் அவருடன் பேசும் போது அவர் பல்வேறு விஷயங்களை என்னிடம் பகிர்ந்து கொண்டார்.

எங்கள் தைவான் நாட்டில் சுமார் 800 திரையரங்குகள் இருக்கின்றன. இதை நாங்கள் 800 திரைகள் என்றுதான் சொல்லுவோம். உலகமெங்கும் screens என்று தான் சொல்கிறார்கள். இதில் தைவான் நாட்டின் தலை நகர் தைபெயில் மட்டும் சுமார் 220 திரைகள் இருக்கு. நீங்கள் உட்கார்ந்து பார்த்த அரங்கம் Wanhua district என்ற வர்த்தக வளாகம் நிறைந்துள்ள ஓர் இடத்தில் தான் இந்தத் திரை இருக்கிறது. இந்த இடத்தில் மட்டும் எங்கள் நிறுவனத்திற்கு சுமார் 6 திரைகள் சொந்தமாக இருக்கின்றன.

சிறிது காலத்திற்கு முன் இதே இடத்தில் ஒருள்ஸ்ரீழ்ங்ங்ய் தான் இருந்தது. இன்று இதே இடத்தில் நாங்கள் சில மாறுதல்களைச் செய்து 3 ஸ்கிரீன் உள்ள அரங்கமாக மாற்றி உள்ளோம். தைபெய் நகரில் மட்டுமே எங்களுக்கு 52 திரைகள் சொந்தமாக இருக்கின்றன. இவர் அடிமட்ட தொழிலாளியாக இருந்து, இன்று இந்த நிறுவனத்திற்கே தலைவராக மாறியுள்ளார். “

இன்று எல்லாத் திரைகளும் சுமார் 100 இருக்கைகள் உள்ளதாக மாற்றி வருகிறோம். எங்களைப் பொருத்தவரைக்கும் நல்ல இருக்கைகள், நல்ல ஒலி, ஒளி அது மட்டும் இல்லாமல் மக்களின் செளகரியம் தான் முக்கியம். எது செய்தாலும் அவர்களை நினைத்துத் தான் நான் செய்கிறேன். குறைவாக இருக்கைகள் உள்ளதாக இருந்தாலும், மக்கள் திரைப்படத்தை நிறைவாகப் பார்த்து ரசிக்க வேண்டும்'' என்றார் Joe Chang.

இன்றைய தைவான் நாட்டின் ஜனாதிபதி Tsai Ing wen கூட சினிமாவிற்குத் துணையாக இருக்கிறார். சென்ற மாதம் தான் இவர் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றிகரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மீண்டும் ஜனாதிபதியாகி விட்டார். இவர் கூட ஒரு திரைப்படத்தில் நடித்த இரு இளம் நடிகைகளை மட்டும் அல்ல, அந்தப் படத்தின் குழுவையும் தனது ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்துப் பாராட்டி இருக்கிறார். அந்தப் படம் “The Tag Along 2”. இந்தப் படத்தின் ஆங்கிலப் பெயர் “Littile Girls in Red 2”. இது ஒரு பிசாசு சம்பந்தமான படம். இதன் இயக்குநர் Cheng Wei hao தான்.

இந்தப் படத்தின் முதல் பாகம் வந்து சுமார் 5 ஆண்டுகள் ஆகின்றன. இந்தப் படம் தான் தைவான் நாட்டிலேயே வெளியான படங்களிலேயே அதிக வசூலை அதன் தயாரிப்பாளருக்கு பெற்று தந்த படம். அதில் உள்ள இரு பெண்கள் படம் முழுக்க சிவப்பு உடையில் வருவார்கள். ஜனாதிபதி அழைப்பின் பேரில் வந்த அவர்கள் படத்தில் உள்ளது போன்று சிவப்பு உடையில் வந்து அசத்தினார்கள். அவர்களின் நடுவில் பேசும் போது ஜனாதிபதி Tsai “""நமது நாட்டில் உள்ள திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொழில்கள் மிகவும் முன்னேற்றம் அடைந்து வருகின்றன. அவர்களின் தொழில் நுட்பத் திறமையிலும், கதை கருவிலும், உயர்ந்து வருகின்றன. அரசின் உதவியும் சேர்ந்து கொண்டால் தைவான் திரை உலகம் உயர்ந்த நிலைக்கு மட்டும் அல்ல சர்வதேச அளவில் சிறந்த படங்களைக் கண்டிப்பாக வழுங்குவார்கள் என்று நான் திடமாக நம்புகிறேன்'' என்றார் ஜனாதிபதி.

தைவான் திரைப்பட உலகில் இருந்து ஹாலிவுட் சென்ற "கோல்டன் ஹார்ஸ்' திரைபடத்தின் தலைவராக இருக்கும் ஆங் லீ கூட ஒரு புகழ் பெற்ற இயக்குநர்தான். இவர் மிகவும் சாந்தமான மனிதர். நான் அவரைச் சந்தித்துப் பல விஷயங்களைப் பேசிக்கொண்டிருந்தேன். ""நான் எங்கே இருந்தாலும் தைவானில் தான் என் கவனம் முழுவதும் இருக்கும். இந்தத் திரைப்பட விழா கூட "சைனீஸ் ஆஸ்கர்' என்று அழைக்கப்பட்ட போது நான் மிகவும் மகிழ்ந்தேன். சுமார் 500 படங்கள் தயாரித்தாலும் எங்களுக்கு வெளி உலகின் மதிப்பும் மரியாதையும் தேவை. யாருக்குதான் பாராட்டுப் பிடிக்காது.

அதுவும் ஓர் இயக்குநருக்கு தனது குழந்தையை யார் பாராட்டினாலும் சந்தோஷப்படுவார்கள் இல்லையா?. அதே நிலைதான் எனக்கும். உலகம் முழுவதும் எனது படங்களைப் பார்த்து இருக்கிறார்கள். நான் மிகவும் சந்தோஷப்பட்டேன். எனது நாடு, எனது மக்கள், அதாவது தைவான் தேசத்து மக்கள் பார்த்துப் பாராட்டும் போது நான் ஆனந்தம் அடைந்தேன். ஏனென்றால் நான் இவர்களோடு பிறந்து வாழ்ந்தவன். இவர்கள் பாராட்டு எனக்கு என்றுமே ஸ்பெஷல் தான்'' என்று சிரித்துக் கொண்டே சொன்னார் life of pi” ஆஸ்கர் வின்னர். அவர் சென்னை வந்த பொழுது, உலக நாயகன் கமல் ஹாசன் அவரைப் பேட்டி கண்டது போன்ற பல விஷயங்களை நன்றாக நினைவில் வைத்துள்ளார். அவரது படங்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தால் கண் சிமிட்டாமல் ஆர்வத்தோடு கேட்கிறார் ஆஸ்கர் விருது பெற்ற ஆங் லீ. அவருக்கும் இரு விருதுகள் கிடைத்தன. என்னைப் பொருத்தவரை இந்த "கோல்டன் ஹார்ஸ்' திரைப்பட விழா அனுபவம் வித்தியாசமானது மட்டும் அல்ல பல விஷயங்களை எனக்கு சொல்லிக் கொடுத்தது என்றும் கூறலாம்.
வித்தியாசமானது என்று கூறியதற்குக் காரணம், எப்படி ஒரு திரைப்படவிழாவை நடத்த வேண்டும் என்று பலருக்கும் சொல்லிக் கொடுக்கும் அளவில் சிறப்பாக நடத்தி விட்டார்கள். தைவானை பற்றிப் பல விஷயங்களைத் தெரிந்து கொள்ள எனக்கு உதவியாக இருந்து இந்தப் பயணம். தலை நகர் தைபெயில் உள்ள சில தெருக்களை மட்டும் தான் நான் பார்த்தேன்.
அது மட்டுமல்லாமல் வர்த்தக வளாகம் நிறைந்துள்ள இடத்தை மட்டும் தான் நான் அதிகம் நேரம் வலம் வந்தேன் என்றும் கூறலாம். 5 நாளில் என்னால் என்ன பார்க்க முடியுமோ அதை எல்லாம் பார்த்து ரசித்தேன். குறிப்பாக அவர்கள்
தெய்வத்தை வணங்கும் முறை. மக்கள் கைபேசிக்கு அடிமையாக இருக்கிறார்கள் என்
பதைத் தெரிந்து கொண்டேன்.
இங்கு 247 பத்திரிகைகள் அல்லது பத்திரிகைகளை வெளிக்கொணரும் பதிப்பாளர்கள். இவர்
களுக்குச் செய்திகளைத் தொகுத்துத் தரும் செய்தி நிறுவனங்கள் 32, வானொலி நிலையங்கள் 171, இந்த நாட்டில் மட்டும் 115 சேனல்கள், தொலைகாட்சி நிலையங்கள் 5, வார, மாதப் பத்திரிகைகள் 1239 என்று, இந்த மாஸ் மீடியா என்று கூறப்படும் பல இருந்தாலும் இந்தத் தைவான் நாடும், மக்களும் பழைமையைப் பாதுகாக்கிறார்கள். புதியதை வரவேற்கிறார்கள் என்று தெளிவாக எனக்குத் தெரிந்தது. அது வளர்ச்சிக்கான பாதைதானே.
(நிறைவு பெற்றது)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com