முடிவுக்கு வந்த பாலிவுட் சண்டை

"பிக்பாஸ்' ஹிந்தி பதிப்பில் சல்மான்கானும், கங்கனாவும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர். ஹிரித்திக் ரோஷனுடன் காதல் தோல்விக்குப் பிறகு அவரைக் கடுமையாகச் சாடி வந்தார் கங்கனா ரனாவத்
முடிவுக்கு வந்த பாலிவுட் சண்டை

"பிக்பாஸ்' ஹிந்தி பதிப்பில் சல்மான்கானும், கங்கனாவும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர். ஹிரித்திக் ரோஷனுடன் காதல் தோல்விக்குப் பிறகு அவரைக் கடுமையாகச் சாடி வந்தார் கங்கனா ரனாவத். ஹிரித்திக்கிற்கு ஆதரவாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஹீரோக்களான ஷாருக்கான், அமிர்கான், சல்மான்கான் ஆகியோரும் சில கருத்துகளைத் தெரிவித்தனர். இதில் கங்கனாவுக்குக் கோபம் அதிகமானது. மூன்று கான் நடிகர்களையும் அவர் நேரடியாகவே சாடினார். மேலும் தனது படங்கள், கான் நடிகர்களுக்குதான் போட்டி என பேட்டி கொடுத்தார்.
 ஆனால், இதற்கு சல்மான் பதில் எதுவும் சொல்லவில்லை. மூன்று கான் நடிகர்களுடன் சேர்ந்து நடிக்க மாட்டேன் என அப்போதே சபதமிட்டார் கங்கனா. இந்நிலையில் கங்கனா மீதான சல்மானின் கோபம் தணிந்துள்ளது. கங்கனா நடிப்பில் "பங்கா' என்ற படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.இதில் கபடி வீராங்கனையாகக் கங்கனா நடித்துள்ளார். இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியை பிக் பாஸில் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கு சல்மான்கான் சம்மதம் தெரிவித்தார். இதையறிந்து கங்கனாவும் மகிழ்ச்சி தெரிவித்ததுடன் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது பழைய விஷயங்களை மறந்து, சல்மானும் கங்கனாவும் சந்தோஷமாக உரையாடி மகிழ்ந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com