பேட் பாய்ஸ் 3

1995-ஆம் ஆண்டு வெளியான "பேட் பாய்ஸ்' ஹாலிவுட்டில் பெரும் வெற்றியைப் பெற்றது.
பேட் பாய்ஸ் 3

1995-ஆம் ஆண்டு வெளியான "பேட் பாய்ஸ்' ஹாலிவுட்டில் பெரும் வெற்றியைப் பெற்றது.
 அதன் அடுத்தப் பாகமாக 2003-ஆம் ஆண்டு வெளியான "பேட் பாய்ஸ்' படமும் பெரும் வெற்றியை அடைந்தது. வில் ஸ்மித் மற்றும் மார்டின் லாரன்ஸ் ஆகிய இருவரும் அமெரிக்க நகரான மியாமியின் பின்னணியில் போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் அதில் ஈடுபடும் நபர்களைக் கண்காணித்து கைது செய்யும் பணியில் ஈடுபடும் துப்புதுலக்கும் அதிகாரிகளாக நடித்திருந்தனர். இப்போது மூன்றாம் பாகமாக இப்படம் வெளியாகவுள்ளது.
 ரோமானியாவைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல் கூட்டமொன்றின் தலைவனான அர்மாண்டோ ஆர்ம்ஸ் (ஜேகப் சிபியோ), வில் ஸ்மித், மார்டின் லாரன்ஸ் ஆகியோருடன் இருந்த முன் விரோதம் காரணமாகப் பழிவாங்கத் துடிக்கிறார். ஓய்வினை நோக்கிப் பயணிக்க எண்ணியிருந்த இருவரும் மீண்டும் போராட்டக் களத்தில் குதிக்க வேண்டிய கட்டாயம் உருவாகிறது. பிறகு நடந்தது என்ன என்பது மூன்றாம் பாகமாக வெளிவரவுள்ளது. எல் ஆர்பி - பிலால் ஃபலாஹ் ஆகிய இருவரும் இயக்கியுள்ளனர். லோர்ன் பால்ஃப் இசை அமைத்துள்ளார். வரும் 31-ஆம் தேதி படம் திரைக்கு வரவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com