லட்சியங்கள்!

குளத்தில் வெள்ளம் உயர உயரத் தாமரையும் வளர்ந் தோங்கியது. தாமரைக்குத்தான் உயர்ந்த லட்சியங்களா? எங்களுக்கும் உண்டு என்று கேட்ட பாசிகளும், படர்க் கொடிகளும் அதைப் போலவே வளர்ந்தன.
லட்சியங்கள்!

குளத்தில் வெள்ளம் உயர உயரத் தாமரையும் வளர்ந் தோங்கியது. தாமரைக்குத்தான் உயர்ந்த லட்சியங்களா? எங்களுக்கும் உண்டு என்று கேட்ட பாசிகளும், படர்க் கொடிகளும் அதைப் போலவே வளர்ந்தன - மேலும் உயர்ந்தன.

""பாசிகளே, படர்க் கொடிகளே! நீங்களும் உயர்ந்த கொள்கை வாதிகளா?'' என்று ஆச்சரியப்பட்டது கொக்கு. அப்படி ஓர் கேள்வியைக் கேட்டதற்காகப் பாசிகளுக்கும், படர்க் கொடிகளுக்கும் கொக்கின் மீது வருத்தம்.

கோடையில் குளம் வற்ற ஆரம்பித்த போது; பாசிகளும், படர்க்கொடிகளும் கீழ்நோக்கி இறங்கின. கடைசியில் நிலத்திலேயே வாடி வதங்கின. மேலே உயர்ந்த தாமரையோ, உயர்ந்த நிலையிலிருந்து இறங்காமலேயே நின்று சிரிப்பதைப் பார்த்த கொக்கு "" பாசிகளே! படர்க் கொடிகளே! உங்கள் உயர்ந்த லட்சியங்கள் எங்கே?'' என்று கேட்டுவிட்டுப் பின்புறம் திரும்பிக் கொண்டது.

மழைக்காலம் வந்தது. அடாத வெள்ளம் குளத்தை நிறைத்தது! குளம் வழிந்தது! பாசிகளும், படர்க்கொடிகளும் வழியும் வெள்ளத்தோடு ஓடின. தாமரையோ குளத்தை விட்டு அசையாமல் முன் போலவே நின்று சிரித்தது.

உயர்ந்த லட்சியங்களை எதுவும் மாற்றிவிட முடியாது என்று கொக்கு மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தது.

காவிரிநாடன் எழுதிய "நெருப்பில் புழுத்த புழுக்கள்' என்ற நூலிலிருந்து.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com