தலைவர்களும் தலைப்பாகையும்!

ராஜஸ்தான் மாநிலத்தில் வெப்பம் மிக அதிகம். ஒருசமயம் வெயிலின் கடுமையால் "லூ' என்னும் வெப்ப நோய்  மக்களை தாக்கியது.
தலைவர்களும் தலைப்பாகையும்!


ராஜஸ்தான் மாநிலத்தில் வெப்பம் மிக அதிகம். ஒருசமயம் வெயிலின் கடுமையால் "லூ' என்னும் வெப்ப நோய்  மக்களை தாக்கியது. இதிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள நீண்ட அடர்த்தியான தலைப்பாகையை மக்கள் அணிந்து கொண்டனர். அம்மாநிலத்திற்கு சுவாமி விவேகானந்தர் சென்றபோது அவரை  "லூ'நோய் தாக்காமலிருக்க ராஜஸ்தான் மன்னர் தலைப்பாகை கட்டிக் கொள்ளும்படி சொன்னார். விவேகானந்தரும் ஆர்வத்தோடு தலைப்பாகை கட்ட பழகிக் கொண்டார்.விவேகானந்தாõன் தனித்தன்மையில் ஒன்றாக தலைப்பாகை இடம்பெற்றது.

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் அணியும் தலைப்பாகைகள் மக்களிடம் பேசு  பொருளாகிவிட்டன. 2019-ஆம் ஆண்டு சிவப்பு, பச்சை  மற்றும் மஞ்சள் ஆகிய  நிறங்கள் கலந்தும், 2018-இல் காவி நிறத்திலும், 2017-இல் சிவப்பும் மஞ்சளும் கலந்த நிறத்தோடு  ஜரிகை கோடுகளோடும் வால் பகுதி நீளமானதாகவும், 2016-இல் பிங்க்  (இளஞ்சிவப்பு) மற்றும் மஞ்சள் கலந்த வண்ணத்திலும், 2015-இல் மஞ்சள், சிவப்பு நிறங்களும் அடர்பச்சை கோடுகளோடும், 2014-இல் பிரதமராக தன் முதல் சுதந்திர தின நிகழ்வில் ஜோத்பூரி வடிவமைப்பில்  சிவப்பு வண்ணத்தில் வால் பகுதியில் பச்சை ஜரிகையோடும் தலைப்பாகைகள் அணிந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com