கஷ்டம் வந்தாலும் மகிழ்ச்சியாக ஏற்பவர்!

கடந்த ஜூன் 21-ஆம் தேதி உலக இசை தினத்தை முன்னிட்டு டோக்கியோ தமிழ்ச் சங்கம் கங்கை அமரனுக்கு  பாராட்டு விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இந்த விழா "ஜூம் செயலி' வழியே நடைபெற்றது. 
கஷ்டம் வந்தாலும் மகிழ்ச்சியாக ஏற்பவர்!

கடந்த ஜூன் 21-ஆம் தேதி உலக இசை தினத்தை முன்னிட்டு டோக்கியோ தமிழ்ச் சங்கம் கங்கை அமரனுக்கு பாராட்டு விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இந்த விழா "ஜூம் செயலி' வழியே நடைபெற்றது.

இயக்குநர்கள் பாரதிராஜா, சந்தானபாரதி, மனோ பாலா, வெங்கட் பிரபு, பிரேம்ஜி உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டு கங்கை அமரனுடன் பணிபுரிந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்கள். பாரதிராஜா பேசும் போது....

"இந்த உலகத்தில் அமரனைப்போல் வெள்ளந்தியான, வெளிப்படையான நபர் யாருமே இல்லை. நீ ஒரு வித்தியாசம். முதல் பாட்டிலேயே கங்கை நதியைப் பற்றியெல்லாம் எழுதியிருப்பாய். நீ எல்லாம் கங்கை நதியைப் பார்த்திருப்பாயா. ஆனால் யோசனை செய்து எழுதியிருப்பாய்.

என்னுடைய படத்தில் இடம்பெற்ற உன்னுடைய பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட். கல்யாணம் செய்து 2 அற்புதமான குழந்தைகள். உண்மையில் அவனுடைய அம்மா - அப்பா செய்த புண்ணியம். எந்தவொரு கஷ்டம் வந்தாலும், அதை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்ட ஒரு பையன். அவன் பெரிதாகப் படிக்கவில்லை.
ஆனால், அவனுடைய பாடல் வரிகள் உயிரோடு இருக்கின்றன.

இளையராஜாவுக்கு எப்படி சரஸ்வதி ஐந்து விரல்களில் உட்கார்ந்திருக்கிறாளோ, அதே போன்று கங்கை அமரனுக்கு மூளை முழுக்க சரஸ்வதி உட்கார்ந்திருக்கிறாள்.

இளையராஜா அற்புதமான கலைஞன். இன்னமும் சொல்வேன், இளையராஜா நல்ல தம்பியை மிஸ் செய்துவிட்டார். இவன் ஒரு நல்ல தம்பி, என்று கங்கைஅமரன் பற்றி பேசியுள்ளார் பாரதிராஜா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com